ஜெய்ஷ்வால் - ஹெட்மயர் அதிரடியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்..! பிளே ஆஃப்புக்கு செல்லுமா?

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்து கொண்டது.  

Written by - S.Karthikeyan | Last Updated : May 20, 2023, 12:12 AM IST
  • ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி
  • பஞ்சாப் அணி வெளியேற்றம்
  • ஆர்ஆர் அணிக்கு பிளே ஆப் வாய்ப்பு
ஜெய்ஷ்வால் - ஹெட்மயர் அதிரடியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்..! பிளே ஆஃப்புக்கு செல்லுமா? title=

பஞ்சாப் அணி பேட்டிங்

16வது ஐபிஎல் தொடரின் 66வது லீக் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. தர்மசாலா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஜித்தேஷ் சர்மா 44 ரன்களும், கடைசி நேரத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம் கர்ரான் 49 ரன்களும், ஷாருக் கான் 41 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் கிங்ஸ் அணி 187 ரன்கள் எடுத்தது.

மேலும் படிக்க | PBKS vs RR: ஹல்லா போல்... கொஞ்சம்... இன்றைய போட்டியில் மாஸ் காட்டப்போகும் பவுலர்கள் யார் யார்?

ராஜஸ்தான் அதிரடி

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆரம்பம் முதலே அதிரடி காட்ட தொடங்கியது. பட்லர் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானாலும், ஜெய்ஷ்வால் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோர் பஞ்சாப் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் அடித்து விளையாடினர். 18.3 ஓவர்களில் இலக்கை எட்டினால் ஆர்சிபி அணியின் ரன்ரேட்டைவிட அதிகம் பெறலாம் என அறிவிக்கப்பட்டதால், இருவரும் அதற்கேற்ப விளையாடினர். ஜெய்ஷ்வால் 50 ரன்களும், தேவ்தத் படிக்கல் 51 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

ஷிம்ரோன் ஹெட்மயர் அதிரடி

இதன்பின்னர் களத்துக்கு வந்த சிம்ரன் ஹெட்மயர் அதிரடியாக விளையாடி 46 ரன்கள் எடுத்தார். முடிவில் 19.4 ஓவரில் இலக்கை எட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தங்களின் பிளே ஆஃப் வாய்ப்பையும் தக்க வைத்து கொண்டது. பெங்களூர் மற்றும் மும்பை அணிகள் தங்களது அடுத்த போட்டிகளில் தோல்வியடைந்தால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ப்ளே ஆஃப் செல்ல வாய்ப்பு உள்ளது.

மேலும் படிக்க | உம்ரான் கான் ஓரங்கட்டப்பட்டது ஏன்...? மார்க்ரம்மின் பதிலும் மூத்த வீரரின் கேள்வியும்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News