சிஎஸ்கேவில் முக்கிய வீரருக்கு இனி வாய்ப்பில்லை - தோனி முடிவு
நடப்பு ஐபிஎல் தொடரில் புள்ளிப் பட்டியலில் டாப் 4-ல் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பிளேயிங் லெவனில் மாற்றம் செய்ய முடிவு எடுத்துள்ளது.
தோனியின் மாஸ்டர் பிளான்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனியின் சூப்பரான கேப்டன்சியில் புள்ளிப் பட்டியலில் முதல் 4இடத்தில் இருக்கிறது. இத்தனைக்கும் சிஎஸ்கேவின் அனுபவம் வாய்ந்த பவுலர்களே இல்லை. சர்வதேச அனுபவம் இல்லாமல் உள்ளுர் கரிக்கெட் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்த வீரர்களை வைத்து பலமான அணிகளுக்கு எதிராக வெற்றிகளை பெற்றுள்ளார் தோனி. இதனால் கோடிகளை கொட்டிக் கொடுத்து பிளேயர்களை எடுத்த மற்ற அணிகள் எல்லாம் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துவதை பார்த்து வாயடைத்து போயுள்ளனர்.
சிஎஸ்கே வெற்றி நடை
சிஎஸ்கே அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடிய போட்டிகளில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் மட்டுமே தோல்வியை தழுவியிருக்கிறது. மற்ற அணிகளை எல்லாம் சர்வ சாதாரணமாக வீழ்த்திவிட்ட சிஎஸ்கே, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.
மேலும் படிக்க | IPL 2023 DC vs SRH: ரிவஞ் எடுத்த ஹைதராபாத்... சொந்த மண்ணில் டெல்லிக்கு தோல்வி!
பிளேயிங் லெவனில் மாற்றம்
இந்த போட்டியில் பிளேயிங் லெவனில் ஒரு மாற்றம் மட்டுமே இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இதுவரை ஒழுங்காக விளையாடாத மொயீன் அலிக்கு பதிலாக மிட்செல் சானட்டரை அணிக்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ளார் தோனி. மிட்செல் சாணட்டர் தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். அதேநேரத்தில் மொயீன் அலி பவுலிங் மற்றும் பேட்டிங் இரண்டிலும் சொதப்பிக் கொண்டிருக்கிறார். அவருக்கு கொஞ்சம் ஓய்வு கொடுக்கலாம் என முடிவெடுத்திருக்கும் தோனி, மீண்டும் சாணட்டரை பிளேயிங் லெவனில் சேர்க்கும் முடிவிவில் இருக்கிறார்
சிஎஸ்கே பேட்டிங்
சென்னை அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை மிகச் சிறப்பாக இருக்கிறது. டாப் ஆர்டரில் விளையாடும் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவோன் கான்வே இருவரும் செம ஃபார்மில் இருக்கின்றனர். மிடில் ஆர்டரில் விளையாடும் ரஹானே மற்றும் துபே டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு இணையாக அதிரடி காட்டிக் கொண்டிருக்கின்றனர். ராயடு மட்டுமே சொதப்பிக் கொண்டிருக்கிறார். இவர்களுக்கு பக்கபலமாக ஜடேஜா, தோனி இருப்பதால் சென்னை அணியின் பேட்டிங்கில் எந்த குறையும் இல்லை.
சிஎஸ்கே பவுலிங் தடுமாற்றம்
பவுலிங் மட்டும் கொஞ்சம் தடுமாற்றமாக இருக்கிறது. துஷார் தேஷ் பாண்டே மற்றும் பத்திரனா ஆகியோர் சிறப்பாக பந்துவீசினாலும், சில நேரங்களில் சொதப்பி விடுகின்றனர். அதேநேரத்தில் சென்னை அணி இதுவரை பெற்ற வெற்றிகளுக்கும் இவர்களின் பந்துவீச்சு ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. அனுபவம் இல்லாமல் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் விளையாடி இப்போது சர்வதேச பிளேயர்களுக்கு எதிராக கிடைக்கும் வாய்ப்பில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருகிகன்றனர். இதற்காகவே பலரும் அவர்களை பாராட்டிக் கொண்டிருகிகன்றனர். சுழற்பந்துவீச்சில் ஜடேஜா ஸ்டார் பவுலராக இருக்கிறார். அதேபோல் ஆகாஷ் சிங் நம்பிக்கை கொடுக்கிறார். இதனால் இவர்கள் மாற்றப்பட வாய்ப்பில்லை.
சிஎஸ்கே பிளேயிங் லெவன்
டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, எம்.எஸ் தோனி (கே & வி.கீ.), சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, தீக்சனா, மிட்செல் சான்ட்னர், மதீஷ பத்திரன, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ