சிஎஸ்கே அணியின் கோட்டையான சென்னை சேப்பாக்கத்தில் சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, தல தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கிய அணியே இந்த போட்டியிலும் களமிறங்கியது. ஆனால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் ஒரே ஒரு மாற்றமாக உனத்கட் வெளியேற்றப்பட்டு யாஷ் தாக்கூர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | IPL 2023: சிஎஸ்கே, மும்பைக்கு பிறகு ஆர்சிபி தான் பெஸ்ட் டீம் - விராட் கோலி ஓபன் டாக்


டாஸ் வெற்றி பெற்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, சிஎஸ்கே அணியின் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவோன் கான்வே ஓப்பனிங் இறங்கினர். ஆரம்பம் முதலே இருவரும் அதிரடி காட்டியதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்கோர் 10 ரன்களுக்கும் குறையாமல் சென்று கொண்டே இருந்தது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த டெவோன் கான்வே, இந்த போட்டியில் சிறப்பாக ருதுராஜூடன் இணைந்து ஆடினார். 



3 ஓவர்களில் 33 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த சிஎஸ்கே 5வது ஓவர் முடிவில் 60 ரன்களை தொட்டது. அதாவது ஓவருக்கு 12 ரன்கள் வீதம் இருவரும் ரன்களை அதிரடியாக குவித்தனர். லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் இருவரின் விக்கெட்டை எடுக்க வகுத்த வியூக்கம் எல்லாம் அந்த நேரத்தில் எடுபடவில்லை. இதனால் அணியின் ஸ்கோர் 8 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது. லக்னோ அணிக்கு எதிராக 100 ரன்கள் விக்கெட் இல்லாமல் பார்ட்னர்ஷிப் அடித்த முதல் ஜோடி என்ற சிறப்பும் கான்வே - ருதுராஜூக்கு கிடைத்து.  அத்துடன் அதிரடியாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட்டும் அரைசதம் விளாசினார். முதல் போட்டியிலும் அரைசதம் விளாசிய அவர், இப்போட்டியிலும் அரைசதம் விளாசி அசரவைத்தார்.



சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த அவர் 31 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவரை தொடர்ந்து 29 பந்துகளில் 47 ரன்கள் எடுத்த டெவோன் கான்வேவும் விக்கெட்டை பறிகொடுத்தார். இருவரும் சேர்ந்து 6 சிக்சர்கள் மற்றும் 8 பவுண்டரிகளை விளாசினர். 


மேலும் படிக்க | CSK vs LSG: முதல் போட்டி தோல்வி! சென்னை அணியில் ஏற்பட்ட முக்கிய மாற்றம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ