IPL 2023 CSK vs MI: நடப்பு ஐபிஎல் தொடரின் 50ஆவது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மாலை நடைபெற்றது. இப்போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதியது. சென்னை - மும்பை போட்டி என்றாலே ரசிகர்களிடம் விறுவிறுப்பு தொற்றிக்கொள்ளும் நிலையில், இந்த போட்டியின் மீதும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இத்தொடரில், கடந்த போட்டிகளில் மும்பை இமாலய இலக்குகளை எளிதாக அடித்து வெற்றிகளை குவித்து வரும் நிலையில், சிஎஸ்கே அணி கடந்த சில போட்டிகளாக தோல்வியை தழுவி வருகிறது. மேலும், சென்னை சேப்பாக்கத்தில், மும்பை - சென்னை அணிகள் இதுவரை 7 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், 2008, 2010ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போட்டிகளில் மட்டுமே சென்னை அணி வென்றிருக்கிறது. மற்ற 5 போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணி தான் வெற்றி பெற்றுள்ளது. 


கிரீன் 'கிளீன்' போல்ட்


இத்தகைய சுவாரஸ்யங்களுக்கு இடையே போட்டியின் டாஸை சென்னை அணி கேப்டன் தோனி வென்றார். அவர் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி, மும்பை அணிக்கு இஷான் கிஷான் உடன் கேம்ரூன் கிரீன் ஓப்பனராக களமிறங்கினார். பவர்பிளே ஓவர்களில் ரோஹித் தொடர்ந்து ரன் எடுக்க திணறிவரும் சூழலில் மும்பை இந்தியன்ஸ் இந்த முடிவை எடுத்தது. 


மேலும் படிக்க | IPL 2023: ஐபிஎல் மட்டுமல்ல WTC பைனலுக்கும் டாட்டா... கேஎல் ராகுல் உருக்கம்!


ரோஹித் டக்... தோனியின் ஸ்கெட்ச்


ஆனால், அது அவர்களுக்கு பலனளிக்கவில்லை. தேஷ் பாண்டே வீசிய 2ஆவது ஓவரில் கிரீன் 6 ரன்களில் கிளீன் போல்டானார். தொடர்ந்து, தீபக் சஹாரின் அடுத்த ஓவரில் இஷான் 7 ரன்களில் வெளியேறினார். மூன்றாது வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா அதே ஓவரில் ஜடேஜா கையில் கேட்ச் கொடுத்து டக்-அவுட்டாகி வெளியேறினார். 



ரோஹித்திற்கு தோனி செட் செய்த பீல்டிங் பெரிதும் கவனம் ஈர்த்தது. அதுவரை தூரத்தில் கீப்பிங் செய்து வந்த அவர், ரோஹித் இறங்கி அடிப்பதை கவனித்து ஸ்டம்ப் அருகில் கீப்பிங் செய்ய வந்தார். மேலும், பீல்டிங்கை டைட் செய்ததால் ரோஹித் அடுத்த பந்தில் இறங்கி அடிக்காமல், நின்ற இடத்தில் இருந்து பின்பக்கம் அடிக்க முனைந்தார். ஆனால், ஷாட் சரியாக அமையாததால் எட்ஜ்ஜாகி பந்து ஜடேஜாவின் கையில் அடைகளம் புகுந்தது. 



வதேரா அரைசதம்


ரோஹித் வெளியேறிய பின், சூர்யகுமார், வதேரா உடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சற்று நிதானமாக ஆடியது. சூர்யகுமார் தனது வழக்கமான சூறாவளி ஆட்டத்தை தொடங்குவார் என எதிர்பார்த்துக்கொண்ட தருணத்தில், 22 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இருப்பினும், வதேரா நிலைத்து நின்று விளையாடி அரைசதம் அடித்தார். குறிப்பாக, ஜடேஜா வீசிய 17ஆவது ஓவரில் அவர் ரன்களை குவித்தார் எனலாம், அந்த ஓவரில் 16 ரன்கள் எடுக்கப்பட்டது. ஆனால், மறுமுனையில் விளையாடிய ஸ்டப்ஸ் நிதானமாக விளையாடியதால் ரன்ரேட் பெரிதாக உயரவில்லை. 18ஆவது ஓவரில் வதேரா 64(51) ரன்களில் ஆட்டமிழந்தார். அதில், 8 பவுண்டரிகள், 1 சிக்ஸர் அடக்கம். 


பதிரானா அட்டகாசம்


தொடர்ந்து, டிம் டேவிட் 2, ஸ்டப்ஸ் 20, அர்ஷத் 3 என தொடர்ந்து ஆட்டமிழக்க மும்பைக்கு ஓப்பனிங்கை போன்றே பினிஷிங்கும் சரியாக அமையவில்லை. இதனால், 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை மும்பை எடுத்தது. சிஎஸ்கே பந்துவச்சில் பதிரானா 3, தீபக் சஹார், தேஷ்பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஜடேஜா 1 விக்கெட்டை வீழ்த்தினார். தற்போது, 140 ரன்கள் என்ற இலக்குடன் கெய்க்வாட் - கான்வே ஆகியோர் களமிறங்கி பேட்டிங் செய்து வருகின்றனர்.  


மேலும் படிக்க | IPL 2023: குஜராத்திடம் மீண்டும் மீண்டும் உதை வாங்கும் ராஜஸ்தான்... டாப்பில் ஹர்திக் படை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ