CSK vs PBKS: சேப்பாக்கம் பிட்ச் ரிப்போர்ட்: டாஸ் வின் பண்ணா என்ன எடுக்கனும்?
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் 2023 -ல் இதுவரை நடைபெற்றிக்கும் 3 போட்டிகளில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 175.
இந்தியன் பிரீமியர் லீக் 2023 தொடரின் 41வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது. கடந்த போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராக தோல்வியை தழுவிய சென்னை அணி, இந்த போட்டியில் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. தோனி தலைமையிலான சிஎஸ்கே இதுவரை 8 போட்டிகளில் விளையாடி, ஐந்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.
அதேநேரத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணி 8 போட்டிகளில் விளையாடி தலா நான்கு போட்டிகளில் வெற்றி மற்றும் தோல்வியடைந்துள்ளது. அந்த அணி இந்த ஆண்டாவது பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது. இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் பிட்ச் ரிப்போர்டை இங்கே பார்க்கலாம்.
சேப்பாக்கம் பிட்ச் ரிப்போர்ட்
சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தின் பிட்ச் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அதிக நேரம் உதவும். இன்று பிற்பகல் ஆட்டம் நடைபெறுவதால் அப்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதிக வெயில் அடிக்கும்போது பிட்ச் ஸ்லோவாக இருக்கும் என யூகிக்கப்பட்டுள்ளது. இரவில் பேட்டிங் விளையாடுவதற்கு நன்றாக இருக்கும். அதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச வேண்டும். இந்த சீசனில், சேப்பாக்கம் பிட்சில் முதலில் பேட்டிங் சராசரி ஸ்கோர் மூன்று போட்டிகளில் 175 ரன்களாக இருக்கிறது. இரண்டு போட்டிகளில் சேஸிங் செய்த அணி வெற்றி பெற்றிருக்கிறது.
டாஸ் முக்கியமா?
ஆம், இந்த பிட்சில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். மாலை நேரத்தில் அதாவது லைட் போடுவதற்கு முன்பு வரை சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள். எளிதாக பேட்டிங் செய்ய முடியும். அதனால் முதலில் களமிறங்கும் அணி சவாலான ஸ்கோரை நிர்ணயித்தால் மட்டுமே வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கும். மற்றபடி இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கே அதிக வாய்ப்புகள் இருக்கும்.
மேலும் படிக்க | IPL 2023 DC vs SRH: ரிவஞ் எடுத்த ஹைதராபாத்... சொந்த மண்ணில் டெல்லிக்கு தோல்வி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ