ஏய் சும்மா இருடா.. மைதானத்தில் ஜடேஜாவை எச்சரித்த தோனி! என்ன நடந்தது?
நேற்றைய ஐபிஎல் போட்டியில் கேட்ச் ஒன்றை ஜடேஜா பிடிக்க முயன்றபோது பக்கத்தில் இருந்த கிளாசென் திடீரென திரும்பியதால் அதனை மிஸ் செய்தார் ஜடேஜா. இதனால் கடுப்பில் ஜடேஜா அவருடன் சண்டை போட, இதனால் தோனி டென்ஷன் ஆனார்.
ஐபிஎல் தொடரின் நடப்பு சீசனில் நேற்றைய போட்டியில் சிஎஸ்கே அணியும், ஹைதரபாத் அணியும் சென்னை சேப்பாக்கத்தில் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 34 ரன்கள் எடுத்தார். சென்னை அணி சார்பில் ஜடேஜா 3 விக்கெட்டும், ஆகாஷ் சிங், தீக்ஷனா, பதீரனா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த போட்டியின் போது ஹைதராபாத் வீரர்களான மாயங் அகர்வால் , கிளாஸ்சென் களத்தில் பேட்டிங் செய்துக்கொண்டிருந்த போது, ஜடேஜா மாயங் அகர்வாலுக்கு பந்து வீசினார். அப்போது அந்த பந்தை தூக்கி அடிக்க முயன்ற போது அது ஜடேஜா கைகளுக்கு அழகாக கேட்ச் ஆக அமைந்தது.
மேலும் படிக்க | உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ராவின் இடத்தை யாரால் நிரப்பமுடியும்?
ஜடேஜா பந்தை பிடித்து விக்கெட்டை ருசிப்பதற்குள், அருகில் இருந்த கிளாசென் எதிர்பாராத விதமாக சற்று நகர்ந்ததால் இருவரும் மோதிக்கொண்டனர். இதனால் ஜடேஜா பந்தை பிடித்த மாத்திரத்தில் நழுவவிட்டுவிட்டார். ஒட்டுமொத்த மைதானமும் உச்சு கொட்ட, உடனே கடுப்பின் உச்சிக்கே சென்றுவிட்டார் ஜடேஜா. சற்றும் யோசிக்காமல், கிளாசெனை திட்டத்தொடங்கிவிட்டார். அதன் பிறகு நடுவர்கள் அவரை சமாதானப்படுத்த்இனர். அந்த ஓவரிலேயே மீண்டும் ஜடேஜா மாயங் அகர்வாலின் விக்கெட்டை எடுத்துவிட்டார். ஆனாலும் ஆத்திரம் தீராத ஜடேஜா மீண்டும் கிளாசென்னிடம் சண்டைக்கு சென்றார். இதனால் கிளாசென்னும் சற்று கோபமடைய, உடனே தல தோனி இந்த விவகாரத்தில் ஜடேஜாவை அழைத்து கோபத்துடனும், அதே நேரம் தனது ஸ்டைலிலும் அவரை அமைதிப்படுத்தினார்.
கிட்டதட்ட ஜடேஜாவின் செயல் தோனியை கடுப்படித்தாலும், மைதானத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து நாசூக்காக அதனை கையாண்டார் தோனி. நிச்சயம் சும்மா இரு இப்படி செய்யாதே என தோனி அட்வைஸ் செய்திருப்பார். நேற்றைய போட்டியில் சிஎஸ்கே தான் வெற்றியை சுவைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. மைதானத்தில் இதுபோன்ற சம்பவங்கள் எல்லாம் சகஜம் தான். எதற்கும் கூலாக இருக்கும் கேப்டன் கூல் தலைமையில் விளையாடும் ஜடேஜாவும் சற்று கூலாக இருந்திருக்கலாம். கிளாசென் செய்தது தவறோ சரியோ, அதற்காக போட்டியின் நடுவே இப்படி சண்டைக்கு சென்றதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான். சென்னை அணியின் அடுத்த கேப்டன் என்ற இடத்தில் இருக்கும் ஜடேஜா இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது அவரது அடுத்தகட்ட நகர்வுகளுக்கு தடையாக அமையலாம் என விமர்சிக்கின்றனர் கிரிக்கெட் விமர்சகர்கள்.
மேலும் படிக்க | 40 வயசாச்சு! வேகம் குறைஞ்சிடுச்சு! விராட் கோஹ்லியை விமர்சிக்கும் மஞ்ச்ரேக்கர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ