ரோகித் சர்மா தடுமாற்றம்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இந்த ஐபிஎல் தொடர் இதுவரை சரியாக அமையவில்லை. ரன்கள் எடுக்க தடுமாறிக் கொண்டிருக்கிறார். பஞ்சாப் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக இரு முறை டக்அவுட்டாகியிருக்கிறார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவட்டான சுனில் நரைன் சாதனையை முறியடித்து முதல் இடத்துக்கு முன்னேறியிருக்கிறார். நரைன் 15 முறை டக் அவுட்டாகியிருக்கும் நிலையில், 16 முறை டக் அவுட்டாகி அந்த லிஸ்டில் முதல் இடத்துக்கு முன்னேறியிருக்கிறார் ரோகித் சர்மா. 


தோனி ஸ்கெட்சில் ரோகித்


சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் மிடில் ஆர்டரில் களமிறங்கினார் ரோகித். சிஎஸ்கே அணிக்கு எதிராக சிறப்பாக ஆட வேண்டும் என நினைத்து மிடில் ஆர்டரில் வந்த அவரை ஸ்கெட்சு போட்டு அவுட்டாக்கினார் தோனி. தீபக் சாஹர் ஓவர் வீசும்போது ஸ்டம்புக்கு அருகாமையில் நின்ற தோனி, தேர்டு மேனை இன்சைடு சர்கிள் பீல்டு செட் செய்தார். இதனால் என்ன ஷார்ட் ஆடுவது என்ற யோசனையில் இருந்த ரோகித் கீப்பருக்கு மேல் அடிக்க முயன்று கேட்சானார். அதுவும் ஒரு ரன் கூட எடுக்காமல் வெளியேறினார்.


மேலும் படிக்க | CSK vs MI: பினிஷ் செய்த தோனி... மும்பையை மீண்டும் வீழ்த்திய சிஎஸ்கே - ஜொலிக்கும் பிளேஆப் கனவு!


கவாஸ்கர் விமர்சனம்



அவருடைய மோசமான ஆட்டம் அணியை சிக்கலுக்குள் தள்ளுயது. ரோகித் ஆட்டமிழந்தபிறகு மும்பை இந்தியன்ஸ் அணியால் சிறப்பாக ஆட முடியவில்லை. விக்கெட் விழாமல் ரன் அடிக்க வேண்டிய இக்கட்டான நிலையில் இருந்த பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை சொற்ப ரன்களுக்கு வெளியேறியதால் சென்னை அணிக்கு குறைவான டார்கெட் மட்டுமே கொடுக்க முடிந்தது. இதனால் மும்பை தோல்வியும் தழுவியது. இது குறித்து பேசியிருக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கவாஸ்கர், ரோகித் சர்மா கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்வது நல்லது என அறிவுறுத்தியுள்ளார். 


இந்திய அணிக்கு நல்லது


ஐபிஎல் தொடருக்குப் பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் உள்ளிட்ட மிகப்பெரிய ஐசிசி போட்டிகள் இருப்பதால், இப்போது ரோகித் சர்மா கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்வது அவருக்கும் இந்திய அணிக்கும் நல்லது எனக் கூறியுள்ளார். தொடர்ந்து டக் அவுட் ஆனால் அவருக்கு நம்பிக்கை சீர்குலைந்துவிடும். ஓய்வெடுத்தால் சிறப்பாக விளையாடலாம். மேலும், விக்கெட்டுகளை அடுத்தடுத்து விழுந்திருக்கும்போது தவறான ஷாட் எதற்காக அடிக்க வேண்டும்? இது அவருக்குள் இருக்கும் குழப்பமான மனநிலையை காட்டுகிறது என்பதால் தொடர் தவறுகளில் இருந்து மீள்வதற்கு, போட்டியில் இருந்து விலகியிருப்பது நல்லது என கவாஸ்கர் அறிவுரை கூறியுள்ளார். 


மேலும் படிக்க | IPL 2023: குஜராத்திடம் மீண்டும் மீண்டும் உதை வாங்கும் ராஜஸ்தான்... டாப்பில் ஹர்திக் படை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ