GT vs CSK: அனைவரும் மிகவும் எதிர்பார்த்து வந்த இறுதிப்போட்டிக்கான முதல் தகுதிச்சுற்று போட்டி இன்று நடைபெற்றது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, சென்னை அணியை பேட்டிங் செய்ய  அழைத்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிஎஸ்கேவில் மாற்றமில்லை


சென்னை அணி தரப்பில் எவ்வித மாற்றமும் இல்லை, குஜராத் அணியில் யாஷ் தயாளுக்கு பதில் அறிமுக வேகப்பந்துவீச்சு வீர்ர தர்ஷன் நலகண்டே களமிறக்கப்பட்டார். இதையடுத்து, டேவான் கான்வே - ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் சென்னை அணி ஓப்பனராக களமிறங்கினர். 


மிடில் ஓவர்களில் மந்தம்


இதில், கெய்க்வாட் பவுண்டரிகளை குவிக்க, கான்வே நிதானம் காட்டினார். இதனால், பவர்பிளேவில் 49 ரன்களை எடுத்தது. இதையடுத்து, 36 பந்துகளில் அரைசதம் அடித்த கெய்க்வாட் 60(44) ரன்களில் ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸர்கள் அடக்கம். அடுத்து வந்த தூபே 1 ரன்னில் நூர் பந்துவீச்சில் காலியானார். 



மேலும் படிக்க | IPL Records: தோனியின் தலைமையில் சிஎஸ்கேவின் உச்சம்! தல தோனியின் தலைமைத்துவம்


கடைசியில் ஆறுதல்


இருப்பினும், அடுத்த வந்த ராஹானே 17(10), கான்வே 40(34), ராயுடு 17(9) ரன்களில் எடுத்து வெளியேறினர். நெருப்புடா, நெருங்குடா என பின்னணியில் பாட்டுடன் களமிறங்கிய தோனி 1(2) ரன்னில் மோகித் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கடைசியில் ஜடேஜா, மொயின் அலியின் ஆறுதலான ஆட்டத்தால் 20 ஓவர்களில் சிஎஸ்கே 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்களை எடுத்துள்ளது. 



பர்பிள் கேப் ஷமியிடம்... 


மோகித் சர்மா, ஷமி ஆகியோர் 2 விக்கெட்டுகளையும், நலகண்டே, ரஷித் கான், நூர் அகமது, ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். தற்போது குஜராத் அணி, தொடர்ந்து பேட்டிங் செய்து வருகிறது. இதில், வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.


மேலும் படிக்க | ஐபிஎல் போட்டிகளில் ஆரஞ்சு தொப்பியை பெறாத துரதிருஷ்டசாலி கிரிக்கெட்டர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ