IPL 2023 CSK vs PBKS: நடப்பு ஐபிஎல் தொடரின் 41ஆவது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இதில், டாஸ் வென்ற சிஎஸ்கே அணி கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு கான்வே - ருதுராஜ் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில், கெய்க்வாட் 37(31) ரன்களில் ஆட்டமிழக்க, தூபே 28, மொயின் அலி 10, ஜடேஜா 12 என சற்று நேரம் தாக்குபிடித்தனர். ஒருபுறம் அரைசதம் கடந்து கான்வே அதிரடியை தொடர்ந்தார். கடைசி 2 பந்துகளில் தோனி 2 சிக்ஸர்களை பறக்கவிட சிஎஸ்கே அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்களை எடுத்தது. 


கான்வே 52 பந்துகளில் 16 பவுண்டரிகள், 1 சிக்ஸர் என 92 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பஞ்சாப் பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங், சாம் கரன், ராகுல் சஹார், சிக்கந்தர் ராஸா உள்ளிட்டோர் தலா 1 விக்கெட்டை மட்டும் கைப்பற்றினர். 


201 ரன்கள் என்ற இலக்குடன் பஞ்சாப் பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணிக்கும் தொடக்கம் சிறப்பாகவே அமைந்தது. ஷிகர் தவாண் 28 ரன்கள் எடுத்து 5ஆவது ஓவரில் ஆட்டமிழக்கும்போது, பஞ்சாப் 50 ரன்களை எடுத்திருந்தது. பிரப்சிம்ரன் சிங் அசத்தலாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். இருப்பினும், அவர் 42(24) ரன்களுக்கும், அதர்வா டைடே 13(17) ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். 


மேலும் படிக்க | IPL History: ஐபிஎல் வரலாற்றில் அதிக ஸ்கோர் எடுத்த 5 அணிகளின் ரன்கள்


அப்போது, சாம் கரன், லிவிங்ஸ்டன் ஜோடி சேர்ந்து பஞ்சாப்பிற்கு நம்பிக்கை அளித்தனர். குறிப்பாக லியம் லிவிங்ஸ்டன் 24 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 1 பவுண்டரி என 40 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். சாம் கரனும் 29(20) ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால், கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. பதிரானா அந்த ஓவரை கட்டுக்கோப்பாக வீசி கடைசி பந்திற்கு 3 ரன்கள் தேவை என்ற நிலைக்கு கொண்டு வந்தார். ஆனால், ஸ்ட்ரைக்கில் இருந்த ராஸா கடைசி பந்தை ஸ்கொயர் லெக் பீல்டரின் தலைக்கு மேல் அடித்து 3 ரன்களை எடுத்து பஞ்சாப் அணிக்கு வெற்றியை பெற்று தந்தார். 


இதன்மூலம், பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக கான்வே தேர்வானார். புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் சென்னை  4ஆவது இடத்திலும், பஞ்சாப் 5ஆவது இடத்திலும் உள்ளன. 


நன்றாக பந்து வீசவில்லை


தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் தோனி கூறுகையில்,"என்ன செய்ய வேண்டும் என்று நாங்கள் தயாராக இருக்க வேண்டும். நாங்கள் பேட்டிங் செய்யும் போது கடைசி சில ஓவர்களில் 10-15 ரன்கள் அதிகமாக எடுத்திருக்கலாம்.  எங்கள் பந்துவீச்சு கொஞ்சம் மேம்பாட வேண்டும். எங்கள் பேட்டர்கள் தொடர்ந்து ரன்களை குவித்து வருகின்றனர். 200 ரன்கள் போதுமானதாகவே இருந்தது, ஆனால் நாங்கள் இரண்டு மோசமான ஓவர்கள் வீசினோம். 


நிலைமைகளை நாங்கள் நன்கு அறிவோம். நாங்கள் நன்றாக பந்து வீசவில்லை. என்ன பிரச்சனை என்று பார்க்க வேண்டும், செயல்படுத்தலிலா அல்லது திட்டத்திலா என்று. பத்திரனா சிறப்பாக பந்து வீசினார். முதல் ஆறு ஓவர்களில் சிறப்பாகச் செயல்பட வேண்டும். என்ன லைனில் பந்து போட வேண்டும் என்பதில் தெளிவானால் அதில் சிறப்பாக செயல்பட முடியும்.


மேலும் படிக்க | DC Player: டெல்லி கேபிடல்ஸ் அணி விருந்தில் பெண்களை சீண்டிய கிரிக்கெட்டர் யார்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ