ஐபிஎல் 2023 மூலம் முகேஷ் அம்பானிக்கு இத்தனை கோடி வருமானமா? முழு விவரம்!
Mumbai Indians: தி ட்ரிப்யூன் கருத்துப்படி, மும்பை இந்தியன்ஸின் பிராண்ட் மதிப்பு ரூ.10,070 கோடிக்கு மேல் உயர்ந்தது, இது கடந்த ஆண்டை விட சுமார் ரூ.200 கோடி வளர்ச்சி அடைந்துள்ளது.
Mumbai Indians: நீதா அம்பானிக்கு சொந்தமான ஐபிஎல் அணியான மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் 2023ன் குவாலிபயர் 2 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது. குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு வந்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை கடைசி பந்தில் இழந்துவிட்டது. சென்னை அணியுடனான இறுதி போட்டியில் 2 பந்துகளுக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சென்னை அணி வெற்றி பெற்றது. ஐபிஎல் 2023ல் கோப்பையை பெற்றதன் மூலம் 5 முறை கோப்பை வென்று சாதனை படைத்துள்ளது. இருப்பினும், இந்தியன் பிரீமியர் லீக்கின் பதினாறாவது சீசன் மூலம் அம்பானி நூறு கோடிகளை சம்பாதித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. நீதா அம்பானியும், முகேஷ் அம்பானியும் ஐபிஎல் அணியான மும்பை இந்தியன்ஸின் 100 சதவீத பங்குகளை வைத்திருக்கின்றனர், 2008 ஆம் ஆண்டில் அணியை வாங்க மில்லியன் கணக்கான டாலர்களை செலவிட்டுள்ளனர்.
மேலும் படிக்க | கோப்பையை கையில் வாங்கியதும் தோனி செய்த காரியம்! ரசிகர்கள் நெகிழ்ச்சி!
தற்போது வெளியாகியுள்ள அறிக்கைகளின்படி, முகேஷ் அம்பானி ஐபிஎல் முதல் சீசனில் அணியை வாங்க ரூ.916 கோடி செலவு செய்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் தொடரில் ஐந்து சீசன்களில் வெற்றி பெற்று 2023 வரை அதிக எண்ணிக்கையிலான ஐபிஎல் போட்டிகளில் வெற்றி பெற்ற அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி புகழப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாது அதிக எண்ணிக்கையிலான ஸ்பான்சர்களைப் பெற்ற அணியென்றால் அது இந்த மும்பை இந்தியன்ஸ் அணி தான். இத்தகைய சிறப்புகளை மும்பை இந்தியன்ஸ் அணி பெற்றிருக்கிறது. முகேஷ் அம்பானியின் நிறுவனமான ரிலையன்ஸ் ஐபிஎல் அணியான மும்பை இந்தியன்ஸின் ஒரே உரிமையாளராக விளங்கி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். மும்பை இந்தியன்ஸ் அணி தான் இதுவரை அதிக லாபம் ஈட்டும் ஐபிஎல் அணி என்பது குறிப்பிடத்தக்கது. தி ட்ரிப்யூன் கருத்துப்படி, மும்பை இந்தியன்ஸின் பிராண்ட் மதிப்பு ரூ.10,070 கோடிக்கு மேல் உயர்ந்தது, இது கடந்த ஆண்டை விட சுமார் ரூ.200 கோடி வளர்ச்சி அடைந்துள்ளது.
வணிகப் பொருட்கள், டிக்கெட் விலைகள், ஊடக ஸ்பான்சர்ஷிப்கள் மற்றும் விளம்பரங்கள் மூலம் நீதா அம்பானி மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோர் பணம் சம்பாதிக்கின்றனர். இது தவிர, அம்பானி குடும்பத்தின் மற்றொரு முக்கிய வருமானம் ஜியோ சினிமாவுக்கு விற்கப்பட்ட ஐபிஎல் உரிமையாகும். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரிலிருந்து ஐபிஎல் உரிமை நீக்கப்பட்டது, ரிலையன்ஸின் பிராண்டான வியாகாம்18 ஜியோ சினிமாவுக்கான ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை ரூ.22,290 கோடிக்கு வாங்கியது. மேலும் ஜியோ சினிமா ஐபிஎல் ஹோஸ்டிங் மூலம் ரூ. 23,000 கோடி வருவாயை ஈட்டியது, இது இன்னும் சில ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான கோடிகளை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாத மும்மை அணி இந்த ஆண்டு குவாலிபயர் 2 வரை தகுதி பெற்றது. குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியை தழுவியதால் போட்டியில் இருந்து வெளியேறியது.
மேலும் படிக்க | உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கவுண்ட்டவுன் ! ரோஹித் ஷர்மாவுக்கு குவியும் பாராட்டு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ