IPL 2023 MI vs CSK, Arjun Tendulkar: ஐபிஎல் தொடரில் ஒட்டுமொத்த ரசிகர்களும் எதிர்பார்த்துக் காத்திருந்த போட்டி தற்போது நெருங்கிவிட்டது. 5 முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் கோட்டையான மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து 4 முறை சாம்பியனான சென்னை மோத உள்ளது. இப்போது என்று இல்லை எப்போதும் இந்த அணிகள் மோத வந்தாலே பரபரப்பும், விறுவிறுப்பும் ரசிகர்களுக்கு தொற்றிவிடும் எனலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடப்பு தொடரில், மும்பை அணி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடி உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடனான போட்டியில் மும்பை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. கடந்த தொடரிலேயே கடைசி இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்த மும்பை இந்த தொடரின் முதல் போட்டியிலேயே தோற்றது கூடுதல் ஏமாற்றத்தை அளித்தது எனலாம். இருப்பினும், கடந்த போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. 


மேலும் படிக்க | ஐபிஎல் அணிகளில் யாருக்கு அதிக ரசிகர்கள்...? இதோ முழு விவரம்!


மும்பையின் பிளான் என்ன?


நீண்ட நாளுக்கு பின் மும்பை இந்தியன்ஸ் அணி வான்கடேவில் விளையாட உள்ளதால், அந்த அணி பலமான கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும், தனது பரம எதிரியான சென்னையுடன் மோதுவதால், போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், சிஎஸ்கேவை வீழ்த்த அந்த அணி என்ன விதமான திட்டத்தை வைத்துள்ளது என்பதுதான் கேள்வியாக உள்ளது. 



அந்த கேள்விக்கு வகையில், இடதுகை வேகப்பந்துவீச்சாளரான அர்ஜுன் டெண்டுல்கர் நாளை நடைபெறும் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. வேகப்பந்துவீச்சாளர் என கூறப்பட்டாலும் அர்ஜுனால் பேட்டிங்கிலும் சிறப்பான பங்களிப்பை அளிக்க முடியும். உள்ளூர் போட்டிகளில் அவர் ரன்களை குவித்திருப்பது இதற்கு சான்றாகும். 


வான்கடேவில் அர்ஜுனின் தேவை


மும்பை வான்கடே மைதானத்தை பொறுத்தவரை, புது பந்தில் ஸ்விங் அதிகம் இருக்கும் என்பதாலும், இடதுகை பந்துவீச்சாளர் என்ற கூடுதல் சிறப்பும் உள்ளதாலும் பவர்பிளே, டெத் ஓவர்கள் மும்பை அணிக்கு உதவக்கூடியவாரக அர்ஜுன் விளங்குகிறார். அவரால், அழுத்தத்தை சமாளிக்க முடியும் என்ற நிலையில், அவரை பிளேயிங் லெவனில் கொண்டு வருவது சரியாகவே இருக்கும். கடந்த போட்டியில் பந்துவீசிய அர்ஷத் கான் நன்றாக வீசியிருந்தாலும், அர்ஜுனுக்கும் தொடரின் தொடக்கத்திலேயே வாய்ப்பளிப்பது மும்பையின் நீண்டகால செயல்பாட்டுக்கு ஒரு தொடக்கமாக அமைய வாய்ப்புள்ளது எனவும் ரசிகர்கள் கருதுகின்றனர். 



ரசிகர்கள் குதூகலம்


ரசிகர்களின் கோரிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அர்ஜுன் டெண்டுல்கர் பயிற்சி புரியும் புகைப்படத்தை ட்வீட் செய்துள்ளது. இதையடுத்து, மும்பை அணி ரசிகர்கள் அர்ஜுனின் வருகையை தற்போதே கொண்டாட தொடங்கிவிட்டனர். சென்னை அணி, நடப்பு தொடரில் 2 போட்டிகளில் விளையாடி தலா ஒரு தோல்வி, வெற்றியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மும்பை - சென்னை போட்டி நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. 


மேலும் படிக்க | 'ரன் அடிக்கிறதே இல்லை.. இவர ஏன் எடுக்கிறாங்க?' கொல்கத்தா வீரரை விளாசிய கவாஸ்கர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ