IPL 2023: 10ஆவது முறையாக இறுதிப்போட்டியில் சிஎஸ்கே... தல தோனியின் அசத்தல் கேப்டன்ஸி!
CSK Qualifies To IPL Final 2023: நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டியில் குஜராத் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
CSK Qualifies To IPL Final 2023: 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி, தங்களின் பேட்டிங்கை தொடங்கியது. சுப்மன் கில், சாஹா ஆகியோர் வழக்கம்போல் ஓப்பனர்களாக களமிறங்கியது. தீபக் சஹார், தேஷ்பாண்டே ஆகியோர் ஓப்பனிங் ஸ்பெல்லை சிறப்பாக வீசினர். இதில், 3ஆவது ஓவரை வீசிய தீபக் சஹார், சாஹாவை 12(11) ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார்.
ஜடேஜாவின் கட்டுக்கோப்பு
அடுத்த வந்து பாண்டியாவை 8 ரன்களில் தீக்ஷனா தூக்கினார். தொடர்ந்து, கில் உடன் ஜோடி சேர்ந்த ஷனகா சற்று நிதானம் காட்டி விளையாடினார். இருப்பினும், மிகவும் கட்டுக்கோப்புடன் வீசிய ஜடேஜா, ஷனகாவை 17 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார். அடுத்து வந்த மில்லரை 4 ரன்களில் ஜடேஜா ஆட்டமிழக்கச் செய்தார்.
ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தோனி
சுப்மன் கில் ரன் அடிக்க திணறிய நிலையில், அவரும் 38 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸர் அடக்கம். இதில், தீபக் சஹாரை சர்ப்ரைஸாக 14 ஓவரில் வீச வைத்து கில்லின் விக்கெட்டை தோனி தூக்கினார் எனலாம். சாஹாவை போலவே அதே திசையில் கில்லும் தோனியின் வலையில் விழுந்தார். திவாட்டியா 3, நல்கண்டே 0 என அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ரஷித் கான் மட்டும் சிக்ஸர்களையும், பவுண்டரிகளை அடித்து வந்தார்.
மேலும் படிக்க | தோனியுடன் ஜடேஜா மீண்டும் மோதலா? டிவிட்டர் பதிவும் ரசிகர்களின் ரியாக்ஷனும்..!
ரஷித் 'காலி'
துஷார் தேஷ்பாண்டே தொடர்ந்து ரன்களை கசியவிட்டு வந்த நிலையில், அவர் வீசிய 19ஆவது ஓவரின் மூன்றாவது பந்தில் ரஷித் கான், கான்வேயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மேலும், பதிரானா கடைசி பந்தில் ஷமியையும் ஆட்டமிழக்கச் செய்ய குஜராத் அணி 157 ரன்களில் ஆல்-அவுட்டானது. இதன்மூலம், 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
10ஆவது முறை
சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய 14 சீசன்களில், 12 சீசன்கள் பிளேஆப் சென்றுள்ள நிலையில், தற்போது 10ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது. இதன்மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் மே 28ஆம் தேதி, அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் விளையாட உள்ளது.
முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் அதிகபட்சமாக ருதுராஜ் 60, கான்வே 40 ரன்களை எடுத்தனர். குஜராத் சார்பில் ஷமி, மோகித் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். முதல்முறையாக குஜராத் டைட்டன்ஸ் அணியை, அதுவும் முக்கியமான போட்டியில் சிஎஸ்கே தோற்கடித்துள்ளது. எலிமினேட்டரில் லக்னோ - மும்பை அணிகள் இதே சேப்பாக்கம் மைதானத்தில் மோத உள்ளன. இதில் வெற்றி பெறுவோர் வரும் மே 26ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெறும் குவாலிஃபயர் 2 போட்டியில் விளையாடும்.
மேலும் படிக்க | RCB Vs GT: நீயா நானா? ராயல் சேலஞ்சர்ஸை தோற்கடித்த குஜராத் அணி! போட்டியின் ஹைலைட்ஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ