ஐபிஎல் 2023 போட்டியில் சென்னை அணியின் வெற்றியின் சீக்ரெட் இதுதான்!
இந்த வருட ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி ஒவ்வொரு போட்டியிலும் எப்படி எல்லாம் விளையாடி பைனலுக்கு வந்திருக்கிறார்கள் என்பதை பற்றி பார்க்கலாம்.
ஐபிஎல் 2023 சீசன் 16 முதல் போட்டியே சிஎஸ்கே அணிக்கு தான் நடந்தது, இந்த போட்டியில் சிஎஸ்கே குஜராத் அணியுடன் விளையாடியது. இந்தப் போட்டியை பொருத்த வரைக்கும் முதலில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணிக்கு தொடக்கம் கொஞ்சம் தடுமாற்றமாக தான் இருந்தது, கான்வே ஒரு ரன்லையே போல்ட் ஆனார். ஆனால் ருதுராஜ் கைக்வாட் அதிரடி காட்டினார். 50 பந்துகளில் 9 சிஸ்ஸ் உள்பட 92 ரன்கள் எடுத்திருந்தார். இதில் சென்னை அணி மொத்தம் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்திருந்தனர். 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு குஜராத் அணி களம் இறங்கினார்கள். குஜராத்துக்கு சுப்மன் கில் நன்றாக சப்போர்ட் செய்திருந்தார், அவர் 63 ரன்கள் எடுத்திருந்தார். பின்னர் வந்தவர்கள் ஓரளவுக்கு ரன்கள் சேர்த்தாலும் சுப்மன் கில்லின் நல்ல தொடக்கம் குஜராத் அணிய வெற்றி பாதைக்கு கொண்டு சேர்த்தது.
19.2 ஓவர்களிலேயே இலக்க துரத்தி 182 ரன்களை எடுத்து குஜராத் வெற்றி பெற்றார்கள். இந்த போட்டியில் ரஷித் கான் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு மூன்று பந்துகளில் ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸர் உள்பட 10 ரன்கள் அடித்து குஜராத் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தார். இதனால் ரஷித் கானுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த மேட்ச் முடிந்ததும் சென்னை அணி ரசிகர்கள் கொஞ்சம் ஏமாற்றம் ஆனார்கள்.
மேலும் படிக்க | IPL 2023: பத்திரனா குடும்பத்திடம் தோனி சொன்ன முக்கிய விஷயம்! இணையத்தில் வைரல்!
Match 2: சென்னை அணி தன்னுடைய இரண்டாவது போட்டியில் லக்னோ அணியுடன் விளையாடியது. இந்த போட்டிய பொருத்தவரைக்கும் லக்னோ அணி டாஸ் வென்று பௌலிங்க தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணிக்கு ருத்துராஜ் அதிகபட்சமா 57 ரன்கள் அடித்தார். இறுதியாக சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களை சேர்த்தது. பின்னர் களம் இறங்கிய லக்னோ அணியும் நன்றாகவே டப் கொடுத்தனர், இந்த அணியில் kail mayers அதிகபட்சமா 53 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால லக்னோ அணியால் ரன் சேர்க்க முடியாமல் 7 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்களை மட்டுமே அடித்தனர். இதன் மூலம் சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வென்றது.
Match 3: சென்னை அணி தன்னுடைய மூன்றாவது போட்டியில் மும்பை அணியுடன் விளையாடியது. இந்தப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களை அடித்தது. அதிகபட்சமா இஷாந்த் கிஷன் 32 ரன்களும் மற்றும் டேவிட் 31 ரன்களும் எடுத்திருந்தார். 158 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்கில் சென்னை அணி களமிறங்கியது. ரஹானே 61, ருத்துராஜ் 40 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தனர். சென்னை அணி 18.1 ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Match 4: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது நான்காவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதியது. சென்னையில் உள்ள சிதம்பரம் ஸ்டேடியத்தில் இந்த போட்டி நடைபெற்றது, இதில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணி மொத்தமாக 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை சேர்த்தது, அதிகபட்சமாக பட்லர் 52 ரன்களை எடுத்து இருந்தார். 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது. இதில் அதிகபட்சமாக கான்வே 50 ரன்களும் தோனி 32 ரண்களும் எடுத்தனர், இருந்த போதிலும் சந்திப் ஷர்மாவின் சிறப்பான பௌலிங்கால் சென்னை அணி தோல்வியை தழுவியது. வெறும் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் ஆட்டநாயகனாக அஸ்வின் தேர்வு செய்யப்பட்டார்
மேலும் படிக்க | ஒரு வழியாக விராட் கோலி குறித்து மனம் திறந்த லக்னோ வீரர் - என்ன சொன்னார் தெரியுமா?
Match 5: சிஎஸ்கே தனது ஐந்தாவது போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு கான்வே ரஹானே ஜோடி நல்லா தொடக்கத்தை கொடுத்தனர். கான்வே 83 ரன்களும் ரஹானே 37 ரன்களும் எடுத்தனர். பின்பு வந்த தூபே சிக்ஸர் மழை பொழிந்தார். 52 ரன்களை குவித்த அவர் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்களை சேர்த்தது. பின்பு களமிறங்கிய பெங்களூரு அணியின் டு பெளிசி, மேக்ஸ்வெல் ஆகியோர் ரன்களை சேர்த்தனர். பின்பு வந்தவர்கள் ரன் எடுக்க தவறினர். இதனால் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 218 ரண்களை மட்டுமே எடுத்தது. இந்த போட்டியில் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆட்டநாயகன் விருதை கான்வே தட்டி சென்றார்.
Match 6: இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி விளையாடிய 6 போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது, இதில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச முடிவு செய்தது, அதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக ஜடேஜா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. ருதுராஜும், கான்வேயும் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர், இதனால் 18.4 ஓவரிலேயே சென்னை அணி இலக்கை எட்டியது. 3 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது, இதன் மூலமாக 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கான்வே 77 ரன்களை எடுத்தார். ஆட்ட நாயகனாக ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார்
Match 7: சென்னை அணி தனது 7 போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதியது. இந்தப் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது, இதில் முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ரகானே 71 ரகளை எடுத்தார், தூபே கான்வே ஆகியோரும் அரை சதம் கடந்து அசத்தினர். இது சென்னை அணிக்கு ஹை ஸ்கோரிங் கேமாக அமைத்தது. தொடர்ந்து 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களம் இறங்கியது. இதில் அதிகபட்சமாக ஜேசன் ராய் 61 ரன்களை எடுத்திருந்தார். பின்னர் வந்தவர்கள் ரன் சேர்க்கவில்லை, இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்களை மட்டுமே எடுத்தது. சென்னை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ரஹானே தேர்வு செய்யப்பட்டார்.
மேலும் படிக்க | CSKvsGT: தோனி இறுதிப் போட்டியில் விளையாடுவதில் சிக்கல்..! விதி என்ன சொல்கிறது?
Match 8: சென்னை அணி தனது எட்டாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதியது. இந்த போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது, இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் சேர்த்தது. ஜெய்ஸ்வால் அதிக்கபட்சமாக 77 ரன்களை சேர்த்தார். ஜூரெல், படிக்கல் ஆகியோர் நல்ல பினிஷிங்கை கொடுத்தனர். சென்னை அணி சார்பில் தேஷ் பாண்டே இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தினார். 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களம் இறங்கியது. இதில் அதிகபட்சமாக ருதுராஜ் 47 ரன்களும் துபே 52 ரன்களும் எடுத்தனர். இருந்தாலும் ராஜஸ்தான் அணியின் சுழல் பந்துவீச்சால் சென்னை அணி தோல்வி அடைந்தது. ராஜஸ்தான் தரப்பில் அஸ்வின் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டியில் ஆட்ட நாயகனாக ராஜஸ்தான் அணியின் ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டார்.
Match 9: இந்த ஐபிஎல் சீசனில் தனது ஒன்பதாவது போட்டியில் பஞ்சாப் அணியை சந்தித்தது சிஎஸ்கே. இந்தப் போட்டி சென்னையில் நடைபெற்றது, இதில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சென்னை அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களை சேர்த்தது. கான்வே அதிகபட்சமாக 92 ரன்களும், ருத்துராஜ் 37 ரண்களும் எடுத்தனர். இந்த போட்டியில் கடைசியில் களமிறங்கிய தோனி மாசாக 2 சிக்சர் அடித்தார். 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு பிரப்சிம்ரன், லிவிங்ஸ்டன் ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன் மூலமாக பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களை சேர்த்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பொதுவாக ஜெயிக்கும் அணியில் இருக்கும் வீரரே மேன் ஆஃப் தி மேட்ச் வாங்குவார் ஆனால் இந்த போட்டியை பொருத்தவரை நன்றாக பெர்ஃபார்மன்ஸ் செய்தவர் என்ற அடிப்படையில் கான்வேவுக்கு மேன் ஆஃப் தி மேட்ச் வழங்கப்பட்டது
Match 10: இந்த ஐபிஎல் சீசனில் சென்னை அணி தனது பத்தாவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 19.2வது ஓவரில் 125 ரன் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது, இதனால் ஆட்டம் தடைப்பட்டது. பின்னர் போட்டி கைவிடப்பட்டு கடைசியில் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.
Match 11: சென்னை அணி தனது 11 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச முடிவு செய்தது, அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணி ஆரம்பத்தில் சொதப்பியது. பின்னர் நேகல் வதேரா 64 ரன்களை எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். பின்னர் வந்தவர்கள் ரன் சேர்க்க தவறினர், இதனால் 8 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்களை மட்டுமே எடுத்தது. 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களம் இறங்கியது. இந்தப் போட்டிக்கு ருத்ராஜும் கான்வேயும் நல்லா தொடக்கம் கொடுத்தனர் . இதனால் மிகவும் எளிதாக 17.4 ஓவரிலேயே சென்னை அணி இலக்கை எட்டி ஆட்டம் முடிவடைந்தது. ஆறு விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றது. ஆட்ட நாய்களாக பதிரானா தேர்வு செய்யப்பட்டார்.
மேலும் படிக்க | லக்னோ அணியை "Luck No" ஆக்கிய இன்ஜினியர்.. யார் இந்த ஆகாஷ் மேத்வால்!
Match 12: சென்னை அணி தன்னுடைய 12வது போட்டியில் டெல்லி அணியை எதிர்கொண்டது. இந்த போட்டி சென்னையில் நடைபெற்றது. சென்னை அணி 167 ரன்களை மட்டுமே அடித்தது. 30 ரன்கள் கூட யாரும் எட்டவில்லை. இதில் அதிகபட்சமா சிவம் துபே, 25 ரன்களை எடுத்திருந்தார். பின்னர் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் டெல்லி அணி களம் இறங்கினார்கள். டெல்லி அணியில் ரூசோ மட்டும் 35 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி கடைசியாக 20 ஓவர்கள் முடிவுல எட்டு விக்கெட் இழப்பிற்கு 140 ரண்களை மட்டுமே எடுத்தனர். இதன் மூலமாக சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஜடேஜா மேன் ஆஃப் தி மேட்ச் வாங்கி இருந்தார்
Match 13: 13வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதியது சென்னை அணி. இந்த போட்டி சென்னையில் நடந்தது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தனர். சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமா தூபே 48 ரன்கள் எடுத்திருந்தார். 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு கொல்கத்தா அணி களமிறங்கியது. இதில் அதிகபட்சமாக நித்திஷ் ரானா 57 ரிங்கு சிங் 54 ரன்கள் எடுத்தனர். இதன் மூலமாக விரைவாகவே 18.3 ஓவர்களில் கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்களை எடுத்தது. நித்திஷ் ராணாவின் அதிரடியால் கொல்கத்தா அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆட்டநாயகனா ரிங்கு சிங் தேர்வு செய்யப்பட்டார்.
Match 14: சென்னை அணி 14வது மற்றும் கடைசி லீக் போட்டியை டெல்லி அணியுடன் விளையாடியது. இந்த போட்டி சென்னை அணிக்கு ரொம்பவே முக்கியமானதாக பார்க்கப்பட்டது. இதில் வெற்றி பெரும் பட்சத்தில் குவாலிபயர் ஒன்றுக்கு நேரடியாக சென்றுவிடலாம். இந்த மேட்ச் டெல்லியில் நடந்தது. இதில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். இந்த போட்டியில் தொடக்கமே அதிரடியாக இருந்தது ருத்துராஜ் 79, கான்வே 87 ரன்கள் என அதிரடி காட்டினர். இந்த ஜோடி 166 ரன்களை எடுத்து இருந்தனர். சென்னை அணியின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் என்று பார்த்தோமானால் அது இந்த போட்டியில் தான் இருந்தது. 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 223 ரண்களை சேர்த்தது. 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு டெல்லி அணி களமிறங்கியது. ஒன் மேன் ஆர்மியாக டேவிட் வார்னர் மட்டும் 86 ரன்கள் அடித்தார். பின்னர் அடுத்தடுத்து விக்கட்டுகள் சரிந்ததால் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது. சென்னை அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ஆட்ட நாயகனாக ருத்துராஜ் தேர்வு செய்யப்பட்டார்
மேலும் படிக்க | தோனியுடன் ஜடேஜா மீண்டும் மோதலா? டிவிட்டர் பதிவும் ரசிகர்களின் ரியாக்ஷனும்..!
Qualifier 1: சென்னை அணியை பொறுத்த வரைக்கும் மொத்தம் 14 போட்டிகளில் 8 போட்டிகளில் வெற்றி பெற்று 17 புள்ளிகளுடன் 2வது அணியாக குவாலிபயர் சுற்றுக்கு முன்னேறியது. அதன்படி குவாலிஃபயர் ஒன்று போட்டியில் குஜராத் அணியை எதிர்கொண்டனர். இந்தப் போட்டியில் வெற்றி பெரும் அணி நேரடியாக பைனல் போட்டிக்கு சென்று விடலாம். இந்தப் போட்டி சென்னையில் நடந்தது, டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு கான்வே, ருத்துராஜ் ஜோடி அதிரடி தொடக்கம் கொடுத்தது, கான்வே 40, ருத்துராஜ் 60 ரன்களும் எடுத்தனர். கடைசியாக 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு சென்னை அணி 172 ரன்களை சேர்த்தது, 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களம் இறங்கியது, இந்த போட்டியில் அதிகபட்சமாக சும்மான் கில் 42 ரன்களை சேர்த்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகளை குஜராத் அணி பறி கொடுக்க 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்களை மட்டுமே எடுத்தது குஜராத் அணி. இதன் மூலமாக சென்னை அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த போட்டியில் ருத்துராஜ் மேன் ஆஃப் தி மேட்ச் விருதை தட்டி சென்றார்.
ஐபிஎல் பிளே ஆப் பொருத்தவரைக்கும் ஒரு அணி 10 முறை playoff க்கு செல்வது என்பது ஈஸியான விஷயம் இல்லை. இதனை சாத்தியப்படுத்தியதற்கு முக்கியமான காரணம் ஒரு நல்ல தலைமை. அதாவது எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் தல தோனியின் கேப்டன்சி என்று சொல்லலாம். சென்னை அணியைப் பொருத்தவரை ஒரு டீமை எப்படி கட்டமைக்க வேண்டும் போன்ற அனைத்து விஷயங்களையும் தல தோனி மிகவும் நேர்த்தியாக செய்திருந்தார். அதன் காரணமாக தான் சென்னை அணி இவ்வளவு தூரம் செல்ல முடிந்தது. டெத் பௌலிங்கில் சென்னை அணி இவ்வளவு வெற்றிகரமா இருக்கிறது என்பதற்கு முக்கிய காரணம் தோனியின் பிளானிங் தான். இந்த முறை தோனியின் கேப்டன்சியின் கீழ் சென்னை அணி ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
மேலும் படிக்க | அம்பயர்களுடன் விவாதம்! ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் தோனி விளையாட தடை?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ