ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது இந்த போட்டியில் குர்ணல் பாண்டியா தலைமையிலான லக்னோ அணியை வீழ்த்தி ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி அபார வெற்றி பெற்றது . இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. லக்னோ தரப்பில் நவீன் உல் ஹக் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி பேட்டிங்கில் மிகவும் சொதப்பியது மார்க்கஸ் ஸ்டானிக்ஸ் மட்டும் 40 ரன்கள் எடுத்திருந்தார் அடுத்து வந்தவர்கள் சொற்பரன்களில் ஆட்டமிழக்க லக்னோ அணி 16.3 ஓவரில் 101 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வியை தழுவியது. இதன் மூலமாக ஐபிஎல் தொடரிலிருந்து லக்னோ அணி வெளியேறியது. இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய ஆகாஷ் மேத்வால் 3.3ஓவர்களில் 5 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
அந்தப் போட்டியில் மும்பை அணி பவுலர்கள் ரன்களை விட்டுக் கொடுக்கக் கூடாது என்ற நோக்கில் பந்துவீசி கொண்டிருக்க ஆகாஷ் மேத்வால் மட்டும் தான் வீசிய (3.3 ஓவரில்) 21 பந்துகளில் 5 ரன்களை கொடுத்து வரிசையாக மன்கட், ஆயுஸ் பதோணி, பூரான், ரவி பிஸ்னாய், மோஷன் கான் என 5 வீரர்களின் விக்கட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலமாக ஐபிஎல் தொடரில் மிக குறைந்த ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய அணியின் முன்னாள் வீரர் அணில் கும்ப்ளே வின் சாதனையை மேத்வால் சமன் செய்துள்ளார். அணில் கும்ப்ளேவை பொருத்தவரை கடந்த 2009 ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கும்ப்ளே 5 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை விழ்த்தி அசத்தினார்.
மேலும் படிக்க | அம்பயர்களுடன் விவாதம்! ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் தோனி விளையாட தடை?
யார் இந்த ஆகாஷ் மேத்வால்?
உத்தரகாண்டில் இருக்கும் ரூர்கி பகுதியில் சேர்ந்தவர் தான் ஆகாஷ் மேத்வால் 29 வயதாகும் இவர் ஒரு சிவில் இன்ஜினியரிங் பட்டதாரி . 24 ஆவது வயதில் கிரிக்கெட்டில் நுழைந்திருக்கிறார். ஆரம்பத்தில் இவர் உத்தரகாண்டில் விளையாடிய நாட்களில் டென்னிஸ் பந்துகளை வைத்தே கிரிக்கெட் விளையாடுவாராம். பின்னர் இந்திய நட்சத்திர வீரரான ரிஷப் பணட்டுக்கு இளம் வயதில் பயிற்சி கொடுத்த பயிற்சியாளர் அவதார் சிங் தான் ஆகாஷ் மேத்வாலுக்கும் பயிற்சி கொடுத்திருக்கிறார். இந்நிலையில் அவரது திறமையை கண்டு வியந்த உத்தரகாண்ட் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்களான வாசிம் ஜாஃபரும் மனிஷ் ஜாதவும் சேர்ந்து மேத்வாலுக்கு ரெட் பாலில் பயிற்சி அளிக்க ஆரம்பித்தனர்ஆரம்பித்தனர்.
ஆரம்பகால கிரிக்கெட்
தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு உள்ளூர் போட்டிகளில் உத்தரகாண்ட் அணிக்காக விளையாடிய மேத்வால் அடுத்தடுத்து விக்கட்டுகளை சரித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அவர் உத்தரகாண்ட் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். இதனை அடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் முதலாக ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியில் நெட் பௌலராக சேர்க்கப்பட்டார்.2022 வரை அவரை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை
IPL இல் மேத்வால்
பின்னர் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்தார் ஐபிஎல் ஏலத்தின் அடிப்படை விலையான 20லட்சம் ரூபாய்க்கு அவர் எடுக்கப்பட்டார். அந்த ஆண்டு சூரியகுமார் யாதவ் காயம் காரணமாக விலகவே மேத்வாலுக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த ஆண்டு பும்ரா மற்றும் ஆர்ச்சர் போன்ற மும்பை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர்கள் காயம் காரணமாக வெளியேறி இருக்கும் நிலையில் ஆகாஷ் மேத்வாலுக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதனை அவர் கச்சிதமாகவும் பயன்படுத்தி இருக்கிறார்.
5/5 சாதனை
இந்நிலையில் லக்னோவுக்கு எதிரான போட்டியில் வென்ற பிறகு மேத்வால் பேசுகையில், இந்த வாய்ப்புக்காக தான் நான் காத்திருந்தேன் நான் இன்ஜினியரிங் படித்தவன் ஆனால் கிரிக்கெட் மீது இருந்த ஆர்வம் காரணமாக டென்னிஸ் பாலில் கிரிக்கெட் விளையாடினேன் இன்ஜினியர்கள் விரைவில் எதையும் கற்றுக் கொள்ளும் திறன் கொண்டவர்கள். நாங்கள் இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டோம் நான் என்னைப் பற்றி பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்
ரோகித் சர்மா பாராட்டு
மேத்வால் பற்றி பேசிய ரோஹித் சர்மா. கடந்த ஆண்டு நெட் பௌலர்களில் ஒருவராக மேத்வால் இருந்தார். அவருக்கு நிறைய திறமைகள் இருக்கிறது. அதனை நாங்கள் உணர்ந்தோம் அதனால் தான் ஆர்ச்சர் விலகியதும் மேத்வாலை அணியில் சேர்த்தோம். பல ஆண்டுகளாக மும்பை இந்தியன் அணியிலிருந்து பல வீரர்கள் இந்திய அணிக்காக விளையாட இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
பாராட்டிய அணில் கும்ப்ளே
மேத்வால் சாதனையை அனில் கும்ப்ளே வெகுவாக பாராட்டியுள்ளார் இக்கட்டான ஆட்டத்தில் சிறப்பான பவுலிங் 5 பந்துக்கு 5 விக்கெட் அணிக்கு உங்களை வரவேற்கிறேன் என்று மேத்வால் பற்றி பதிவிட்டுள்ளார் கும்ப்ளே
(@anilkumble1074) May 24, 2023
மேலும் மேத்வாலின் இந்த சாதனையை பும்ரா, சேவாக் ,ஜாகீர் கான் உள்ளிட்ட முன்னாள் இந்நாள் வீரர்கள் பலரும் பாராட்டியுள்ளனர். ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்காக எப்போதுமே இந்திய அணிக்கான நுழைவு வாயில் திறக்கப்படும் அந்த அடிப்படையில் மேத்வாலும் வருங்காலத்தில் இந்திய அணியில் ஜொலிப்பார் என்கிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள்.
மேலும் படிக்க | CSKvsGT: தோனி இறுதிப் போட்டியில் விளையாடுவதில் சிக்கல்..! விதி என்ன சொல்கிறது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ