IPL 2023 CSK vs RR: நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று (ஏப். 12) 17ஆவது லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி, சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்றிரவு நடைபெறுகிறது. இரு அணிகளும், இத்தொடரில் 3 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 1 தோல்வியை பெற்றுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரு அணிகளும் இன்று, 3ஆவது வெற்றியை பெற கடுமையாக போறாடும் எனலாம். ராஜஸ்தான் தனது கடந்த போட்டியில் டெல்லி அணியை பதம்பார்த்த நிலையில், சென்னை அணி பரம எதிரணியான மும்பையை கடந்த போட்டியில் வீழ்த்தியிருந்தது. 


ராஜஸ்தான் அணி, சென்னை அணியுடனான கடந்த 5 போட்டிகளில் 4இல் வெற்றி பெற்றுள்ளது. மேலும், சிஎஸ்கே இன்றைய போட்டியில் தோல்வியை தவிர்க்க கடுமையாக போராடும் எனலாம். சென்னை சேப்பாக்கத்தில் போட்டி நடைபெறுவதால், உள்ளூர் ரசிகர்கள் ஆதரவும், ஆடுகளமும் சிஎஸ்கேவுக்கு சாதகமாக உள்ளது. 



மேலும் படிக்க | IPL 2023: அரைசதம் அடித்தும் கொண்டாடாத ரோஹித் சர்மா - காரணம் இதுதான்!


சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தின் ஆடுகளம், கடினமான ஒன்றாக கருதப்பட்டாலும், பந்து வீச்சாளர்களுக்கு குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக உள்ளது. எனவே, இரு தரப்பு சுழற்பந்து வீச்சாளர்களும் ஆடுகளத்தில் இருந்து அதிகப் பலன்களைப் பெற விரும்புவார்கள் மற்றும் தேவையான முன்னேற்றங்களைப் பெறலாம். 160-180 ஸ்கோர் சற்று கடினமாக இலக்காக அமையலாம். டாஸ் வென்ற கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யவே அதிக வாய்ப்புள்ளது.


சென்னை அணி தரப்பில் ருதுராஜின் மிரட்டல் ஃபார்ம் பெரும் நம்பிக்கை அளிக்கிறது. ராஹேனவின் எழுச்சி மிடில் ஆர்டரில் சற்று பலத்தை கொடுத்துள்ளது. மேலும், சுழற்பந்துவீச்சில், மகேஷ் தீக்ஷனா இன்று களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. 



ராஜஸ்தானை பொறுத்தவரை பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் உலகத்தர வீரர்களை கொண்டுள்ளனர். பட்லர், ஜெய்ஸ்வால், சாம்சன், ஹெட்மயர், ஹோல்டர், சாஹல், அஸ்வின், போல்ட் என இவர்களிடம் இருந்து தற்காப்பதே சென்னை அணிக்கு சாவாலாக அமையலாம். இருப்பினும், சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான சென்னையில், ஜடேஜா, மொயீன் அலி, சான்ட்னர், தீக்ஷனா என உலகத்தர சுழற்பந்துவீச்சாளர்கள் இருப்பதால் சென்னை அணி வெற்றிக்கு அதிக வாய்ப்பிருப்பதாகவும் கணிக்கப்படுகிறது. 


சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK): டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, சிவம் டூபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கேப்டன்), மிட்செல் சான்ட்னர், மகேஷ் தீக்ஷனா, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், துஷார் தேஷ்பாண்டே.


ராஜஸ்தான் ராயல்ஸ் (RR): ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், டிரெண்ட் போல்ட், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்.


மேலும் படிக்க | Virat Kholi: ஒரு டீமையும் விட்டு வைக்காத விராட் கோலி - அடுத்தடுத்து அரைசதம் அடித்து அபார சாதனை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ