சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான 12வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. 4 முறை ஐபிஎல் சாம்பியன், 5 முறை ஐபிஎல் சாம்பியனை எதிர்கொண்டதால், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. குறிப்பாக, மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தும் என்றே பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்கள் நினைத்திருந்த நிலையில், சிஎஸ்கே அபார வெற்றி பெற்றது. தோனியின் கேப்டன்சியில் கிங் என மீண்டும் ஒருமுறை நிரூபித்திருப்பதாக ரசிகர்கள் அவரை வாழ்த்திக் கொண்டிருக்கின்றனர்.
தோனி செய்த சம்பவம்
டாஸ் வெற்றி பெற்றவுடனேயே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான பவுலிங்கை தேர்வு செய்தார் தோனி. இதனை தீர்க்கமாக முடிவெடுத்துவிட்டே டாஸூக்கு வந்திருந்தார். ஏனென்றால் மும்பை பிட்ச் சேஸிங்கிற்கு சூப்பரான பிட்ச் என்பது அவருக்கு தெரியும். 2011 ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் கூட இந்திய அணி இந்த பிட்சில் தான் சேஸிங் செய்து கோப்பையை கைப்பற்றியது. அந்த வின்னிங் ரன்னை அடித்தவரும் தோனி என்பதால், அவருக்கு தெரியாதா வான்கடே பிட்சில் என்ன செய்ய வேண்டும் என்று?.
Dhoni review system and the celebration with all CSK players. pic.twitter.com/cJAltuciSe
— Johns. (@CricCrazyJohns) April 8, 2023
மேலும் படிக்க | LSG vs SRH ஐபிஎல் போட்டியில் காவியா மாறனின் கொண்டாட்டம் வைரல்
ஆனால், முதல் ஓவரிலேயே தோனிக்கு மிகப்பெரிய சவால் காத்திருந்தது. தீபக் சாஹர் காயம் காரணமாக வெளியேற, அடுத்த பவுலரை இறக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார் தோனி. இருந்தாலும் ஸ்மார்ட்டாக இருக்கிற பவுலர்களை பயன்படுத்தினார் தோனி. தேஷ்பாண்டே, பிரிட்டோரியஸ், சானட்டர் ஆகியோர் துல்லியமாக வீசிய பந்தில் மும்பை அணி தடுமாறியது.
ரஹானே அதிரடி
மும்பை அணி ஒருவழியாக 158 ரன்களை எடுக்க, பின்னர் சேஸிங் இறங்கியது சென்னை அணி. ஆரம்பத்திலேயே டெவோன் கான்வே விக்கெட்டை பறிகொடுத்ததால் சென்னை அணியும் தடுமாற்றத்திற்குள்ளாகும் என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், எல்லோருக்கும் வியப்பூட்டும் வகையில் ரஹானே களமிறங்கிய அதிரடி வாணவேடிக்கைகளை மைதானத்தில் நிகழ்த்தினார். 19 பந்துகளிலேயே அரைசம் விளாசிய ரஹானே, 21 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
வான்கடேவில் ஒலித்த தோனி பெயர்
முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.1 ஓவர்களில் 159 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. இதனைத் தொடர்ந்து மைதானத்தில் இருந்த அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் தோனியின் பெயரை முழக்கமிட்டனர். தோனி.... தோனி என அவர்கள் அழைத்தது மைதானத்தை அதிர வைத்தது. மும்பையின் சொந்த மைதானமான வான்கடேவில் மும்பையை சிஎஸ்கே அணி வீழ்த்தியது, மும்பை ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. சென்னை அணியைப் பொறுத்தவரை 3 போட்டிகளில் 2ல் வெற்றிப் பெற்று புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தில் இருக்கிறது. 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவியிருக்கும் மும்பை அணி 8வது இடத்தில் இருக்கிறது. அடுத்த போட்டியிலாவது வெற்றி கணக்கை தொடங்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார் கேப்டன் ரோகித் சர்மா.
மேலும் படிக்க | டெல்லி கேப்டல்ஸ் அணியின் மிட்செல் மார்ஷ் ஆஸ்திரேலியா திரும்பிய காரணம் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ