ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் குஜராத் மாநிலம் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற இருந்த நிலையில், அங்கு பெய்த கனமழை காரணமாக ரசர்வ் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 4 முறை சென்னை அணிக்கு கோப்பயை வென்று கொடுத்த தோனி, இந்தமுறையும் 5வது முறையாக கோப்பையை வென்று கொடுத்து மகதான சாதனைப் பட்டியலில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. மறுபுறம் சுப்மன் கில் போன்ற தரமான நல்ல ஃபார்மில் இருக்கும் குஜராத் அணி தங்களின் சொந்த மைதானமாக அகமதாபாத்தில் சென்னையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் முனைப்பிலும் இருந்தது. ஆனால், இந்த போட்டிக்கு பதிலாக மழை வெளுத்து வாங்கியது.  இரவு 7.30 மணிக்கு போட்டி துவங்குவதற்கு முன்பாகவே ஜோராக வந்த மழை, களத்தில் விளையாடியது. 


மேலும் படிக்க | மாஸ்டர் vs மாணவன்: மீண்டும் சாம்பியனாகுமா சிஎஸ்கே... பைனலில் பந்தயம் அடிக்கும் வீரர்கள் யார் யார்?


விடாத மழையால் ரிசர்வ் டேக்கு மாற்றம்


இருப்பினும் ஃபைனல் என்பதால் 9 மணி வரை ஓவர்கள் குறைக்காமல் போட்டி நடத்துவதற்கு நடுவர்கள் திட்டமிட்ட போதிலும் தொடர்ந்து மழை பெய்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. அதனால் காத்திருந்து காத்திருந்து பார்த்து நடுவர்கள் இரவு 11 மணி வரை எதிர்பார்த்தும் மழை விடாததால் ஃபைனல் ரத்து செய்யப்பட்டு ரிசர்வ் நாளுக்கு மாற்றப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஐபிஎல் வரலாற்றில் இப்படி ஃபைனல் மழையால் பாதிக்கப்பட்டு ரிசர்வ் நாளுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும். இதைத் தொடர்ந்து மே 29ஆம் தேதி மீண்டும் அகமதாபாத் மைதானத்தில் இவ்விரு அணிகள் மோதும் ஃபைனல் நடைபெற உள்ளது. அதில் இரவு 7:00 மணிக்கு டாஸ் வீசப்பட்டு இரவு 7.30 மணிக்கு போட்டி துவங்க உள்ளது. 


மீண்டும் மழை பெய்தால் என்ன நடக்கும்?



இருப்பினும் மழை மனது வைத்து வழிவிட்டால் மட்டுமே அப்போதும் போட்டி நடைபெறும். இல்லையேல் இதே போலவே தாமதம் அதிகரிக்க அதிகரிக்க ஓவர்கள் குறைக்கப்பட்டு முடிவு காண்பதற்கு நடுவர்கள் முயற்சிப்பார்கள். அதன் உச்சகட்டமாக இரவு 12.05 மணிக்கு குறைந்தபட்சம் தலா 5 ஓவர்கள் கொண்ட போட்டியில் நடத்தி வெற்றியாளரை தீர்மானிப்பதற்கு அம்பயர்கள் முயற்சிப்பார்கள். ஒருவேளை தொடர் மழையால் அதுவும் சாத்தியம் இல்லாமல் போனால் குறைந்தபட்சம் தலா 1 ஓவர் அதாவது சூப்பர் ஓவரை நடத்தி அதில் வெற்றியாளரை தீர்மானிப்பதற்கு நடுவர்கள் முயற்சிப்பார்கள். ஆனால் அதையும் நடத்துவதற்கு மழை விடாமல் போகும் பட்சத்தில் இந்த வருடம் 70 போட்டியில் கொண்ட லீக் சுற்றில் முடிவில் முதலிடம் பிடித்த அணி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு சாம்பியன் பட்டம் கொடுக்கப்படும். 


சென்னை அணி பரிதாபம்


அந்த வகையில் 18 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் மீண்டும் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து சாதனை படைக்கும். இது பற்றி ஐபிஎல் விதிமுறை கூறுவது பின்வருமாறு. “ஃபைனல் போட்டியில் சூப்பர் ஓவரில் முடிவு காண முடியாமல் போனால் 70 போட்டியில் கொண்ட லீக் சுற்றின் முடிவில் டாப் இடத்தைப் பிடித்த அணி பிளே ஆஃப் அல்லது இறுதிப் போட்டியை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்” என்று கூறப்பட்டுள்ளது. அப்படி பார்க்கும் போது சென்னை இவ்வளவு தூரம் போராடி வந்தும் வெறும் கையுடன் திரும்பும் நிலைமை ஏற்படும்.


மேலும் படிக்க | CSKvsGT IPL 2023 Final: ஐபில் இறுதிப்போட்டி நடைபெறாவிட்டால் என்ன ஆகும்? ரூல்ஸ் இதுதான்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ