மாஸ்டர் vs மாணவன்: மீண்டும் சாம்பியனாகுமா சிஎஸ்கே... பைனலில் பந்தயம் அடிக்கும் வீரர்கள் யார் யார்?

IPL Final 2023: நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டனஸ் அணிகள் மோத உள்ள நிலையில், போட்டி குறித்த முழு தகவல்களையும் இதில் காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : May 28, 2023, 11:18 AM IST
  • குஜராத் அணி தொடர்ந்து 2ஆவது முறையாக சாம்பியன் ஆகும் முனைப்பில் உள்ளது.
  • சிஎஸ்கே அணி தனது 5ஆவது கோப்பை வெல்லும் முனைப்பில் உள்ளது.
  • தோனிக்கு இது கடைசி ஐபிஎல் போட்டியாக அமைய அதிக வாய்ப்பு.
மாஸ்டர் vs மாணவன்: மீண்டும் சாம்பியனாகுமா சிஎஸ்கே... பைனலில் பந்தயம் அடிக்கும் வீரர்கள் யார் யார்? title=

IPL Final 2023 Dream 11 Predictions: நடப்பு ஐபிஎல் தொடர் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 70 லீக் போட்டிகள், 3 பிளே ஆப் போட்டிகள் என சுமார் இரண்டு மாதங்களாக கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வந்த ஐபிஎல், இன்றைய இறுதிப்போட்டியுடன் நிறைவுபெற உள்ளது. 10 அணிகளின் கடும் போட்டிக்கு மத்தியில், இந்த தொடர் விறுவிறுப்புடனும், பரப்பரப்புடனும் நடைபெற்றது எனலாம். 

தரமான ஆட்டம்!

அந்த வகையில், அனைத்து அணிகளையும் விட தரமான ஆட்டத்தை வெளிகொணர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இந்த இறுதிப்போட்டி எனும் இறுதி யுத்தத்திற்கு வந்துள்ளது. இந்த இறுதி யுத்தம் குஜராத் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. 

மாஸ் vs கிளாஸ்

இன்றைய போட்டியில் டாஸ் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது. சிஎஸ்கே மாஸாகவும், குஜராத் கிளாஸாகவும் இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது எனலாம். சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் குவாலிஃபயர் போட்டியில், இதே குஜராத் அணியை சிஎஸ்கே வீழ்த்தியிருந்தாலும், அகமதாபாத் மைதானத்தில் சிஎஸ்கேவை விட குஜராத் அணிக்கே கூடுதல் நன்மைகள் உள்ளன எனலாம். 

சுணங்குமா சிஎஸ்கே?

சிஎஸ்கேவின் பேட்டிங்கில் ஓப்பனிங் நன்றாக இருந்தாலும், மிடில் ஓவர்கள் சற்று சுணக்கமாக காணப்படுகிறது. ரஹானே, தூபே, ராயுடு, மொயின் அலி ஆகியோரின் முழு திறனும் பேட்டிங்கில் இன்று வெளிப்பட வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது. பந்துவீச்சில் பதிரானா, ஜடேஜா, சஹார் ஆகியோர் தொடர்ச்சியாக நன்றாக செயல்பட்டு வருகின்றனர். இருப்பினும், தீக்ஷனா, தேஷ்பாண்டே போன்றோர் ரன்களை வாரிவழங்குவது பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இன்று இவர்கள் சிறப்பாக செயல்பட்டாலே சிஎஸ்கேவுக்கு பாதி வெற்றி எனலாம். 

மேலும் படிக்க | CSK Rewind: சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்து வந்த பாதை... முழு தகவல்

அசூர பலத்தில் குஜராத்

குஜராத் அணியை பொறுத்தவரை பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் தரமான வீரர்களை கொண்டிருக்கிறது. மேலும், ஹர்திக் பாண்டியா 6ஆவது பந்துவீச்சாளராக வருவது கூடுதல் பலனை அளிக்கும்.  சாஹா தொடக்க ஓவர்களில் ரன்களை கொண்டுவதால், அது குஜராத்துக்கு போனஸ் எனலாம். கில்லின் அசூர ஃபார்ம் இன்றும் தொடருமா என்பது பில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. ரஷித் கான், ஷமி, லிட்டில் போன்றோர் சிஎஸ்கேவுக்கு நிச்சயம் பெரிய அச்சுறுத்தல் தான். 

மாற்றமே இருக்காது!

அந்த வகையில், இன்றைய இறுதிப்போட்டியின் ஃபேன்டஸி அணியை தேர்வு செய்வது சற்று கடினம் தான். இருப்பினும், ஹே-ஸ்கோரிங் மேட்ச் என்பதால் புள்ளிகளும் எகிறும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இரு அணிகளின் பிளேயிங் லெவனிலும் பெரிய மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை. இம்பாக்ட் பிளேயரிலும் மாற்றங்கள் இருப்பது வாய்ப்பு குறைவுதான். 

பிளேயிங் XI கணிப்பு

சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, சிவம் துபே, மொயீன் அலி, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா

குஜராத் டைட்டன்ஸ்: சுப்மன் கில், விருத்திமான் சாஹா, ஹர்திக் பாண்டியா, சாய் சுதர்சன், விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், மோகித் சர்மா, நூர் அகமது, முகமது ஷமி  

ஃபேன்டஸி XI கணிப்பு

விக்கெட் கீப்பர்: எம்எஸ் தோனி

பேட்டர்கள்: சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, சாய் சுதர்சன்

ஆல்-ரவுண்டர்கள்: ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா

பந்துவீச்சாளர்கள்: தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, ரஷித் கான், முகமது ஷமி

IPL 2023 Final: பிட்ச் ரிப்போர்ட்

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தின் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு உதவிகரமாக இருந்துள்ளது. மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 165 ஆகும். மைதானத்தில் சேஸ்ஸிங் செய்வது நல்ல முடிவாக இருக்கும். மேலும் போட்டியில் வெற்றி பெறுவதற்கான அதிக வாய்ப்பு சேஸ்ஸிங் அணிக்கு இருக்கும்.

IPL 2023 Final: யாருக்கு கோப்பை?

லீக் சுற்றின் அடிப்படையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் முன்னிலை பெற்றுள்ளது. ஆனால் இறுதிப் போட்டிக்கு வருவதற்கு முன்பு அவர்கள் கொண்டு வந்த அணிகள் மற்றும் ஃபார்ம் ஆகியவற்றைப் பார்த்தால், ஐபிஎல் கோப்பையை வெல்ல சிஎஸ்கேவுக்கு தான் அதிக வாய்ப்பு இருக்கும்.

நேருக்கு நேர்

ஐபிஎல் வரலாற்றில் குஜராத் டைட்டன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நான்கு முறை மோதியுள்ளன, இதில் குஜராத் மூன்று முறையும், சென்னை அணி ஒருமுறையும் வெற்றி கண்டுள்ளன. 

மேலும் படிக்க | தட்றோம் தூக்குறோம் Cup நமக்கு தான்!! CSK Fans உற்சாகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News