IPL 2023 GT vs LSG: நடப்பு ஐபிஎல் தொடரின் 51ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் மோதியது. இப்போட்டி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற  நிலையில், லக்னோ அணிக்கு குர்னால் பாண்டியாவும், குஜராத் அணிக்கு ஹர்திக் பாண்டியாவும் கேப்டனாக செயல்பட்டனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

20 பந்துகளில் அரைசதம்


போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய குஜராத் அணிக்கு, சுப்மன் கில், விருதிமான் சாஹா ஆகியோர் அசத்தலான தொடக்கத்தை அளித்தனர். குறிப்பாக, சாஹா 20 பந்துகளில் அரைசதம் அடித்து மிரட்டினார். 


கில் சிக்ஸர் மழை


பவர்பிளே முடியும் வரை பதுங்கிய கில், அதன்பின் அவரும் அதிரடியை கைக்கொண்டார் இந்த ஜோடி, 12 ஓவர்களில் 142 ரன்களை குவித்தபோது, முதல் விக்கெட்டாக சாஹா 81(43) எடுத்து ஆட்டமிழந்தார். அதில், 10 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் அடங்கும். கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் சற்று நேரம் தாக்குபிடிக் 25 ரன்களில் வெளியேறினார்.


மேலும் படிக்க | ICC World Cup 2023: 'இந்த கண்டீஷனுக்கு ஓகே சொன்னா நாங்க இந்தியா வரோம்' - பாகிஸ்தானின் பிளான் என்ன?


8 பவுலர்கள்


கில் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை ஆடி வந்தார். மில்லரும் இறுதிக்கட்டத்தில் பவுண்டரிகள் அடிக்க 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 227 ரன்களை குஜராத் அணி எடுத்தது. சுப்மன் கில் 51 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என 94 ரன்களுடன்; மில்லர் 12 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகள் என 21 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மோஷின் கான், ஆவேஷ் கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். குறிப்பாக, லக்னோ மொத்தம் 8 பந்துவீச்சாளர்களை இதில் பயன்படுத்தினர்.


அசாத்திய தொடக்கம்


குஜராத் அணியில் கில் இம்பாக்ட் வீரராக வெளியேறி, அல்ஸாரி ஜோசப் உள்ளே வந்தார். 228 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கினர். கேஎல் ராகுல் விலகலால், லக்னோ ஓப்பனர்களாக டி காக் - கைல் மேயர்ஸ் குஜராத்தை போன்றே வேகமாக ரன்களை குவித்தனர். இந்த ஜோடி 8.2 ஓவர்களில் 88 ரன்களை எடுத்திருந்தபோது மேயர்ஸ் 48 ரன்களில் மோகித் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 


மோகித் அசத்தல்


மோகித் சர்மா லக்னோவின் ரன் வேகத்தை குறைத்ததில் முக்கிய பங்காற்றினார். குறிப்பாக, அவர் 2 ஓவர்களில் 9 ரன்களை மட்டும் கொடுத்து, 1 விக்கெட்டையும் பெற்றார்.  டி காக் எவ்வளவு முயற்சி செய்தாலும் மிடில் ஓவர்களில் பவுண்டரி வருவதே குதிரை கொம்பாக இருந்தது. 


கில் ஆட்டநாயகன்


மேலும், ஹூடா 11, ஸ்டாய்னிஸ் 4 என அடுத்தடுத்து வெளியேற டி காக் 41 பந்துகளில் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 70 ரன்களுடன் ஆட்டமிழந்தார். பூரன் 3, குர்னால் பாண்டியா 0, பதோனி 21 என வெளியேற லக்னோ அணியால் 20 ஓவர்களில் 171 ரன்களையே எடுக்க முடிந்தது. இதன்மூலம், குஜராத் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மோகித் சர்மா 4, நூர் அகமது, ரஷித் கான், ஷமி ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். கில் ஆட்டநாயகனாக தேர்வானார். 


புள்ளிகள் பட்டியலில் குஜராத் அணி 11 போட்டிகளில் விளையாடி (8 வெற்றி, 3 தோல்வி) 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறது. லக்னோ அணி 11 போட்டிகளில் விளையாடி (5 வெற்றி, 6 தோல்வி, 1 முடிவில்லா போட்டி) 11 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் நீடிக்கிறது. 


மேலும் படிக்க | 'ரோகித் இது நல்லா இல்ல போய்டுங்க' கவாஸ்கர் காட்டமாக சொன்ன விஷயம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ