CSKvsSRH: சேப்பாக்கத்தில் சன்ரைசர்ஸை எதிர்கொள்ளும் சிஎஸ்கே..! பிளேயிங் லெவனில் பென்ஸ்டோக்ஸ்?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சேப்பாகத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளும் நிலையில், பென்ஸ்டோக்ஸ் பிளேயிங் லெவனில் விளையாடுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. சிஎஸ்கே சொந்த மைதானத்தில் விளையாடுவதால் கூடுதல் பலத்துடன் இருக்கும். அதேபோல், எய்டன் மார்கிரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணியும் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறது. புள்ளிப் பட்டியலில் சென்னை அணி, 3வது இடத்திலும், சன்ரைசர்ஸ் அணி 9வது இடத்திலும் இருக்கின்றன. இரு அணிகளும் இந்த போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதால் போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
அதேநேரத்தில் இரு அணிகளும் ஏற்கனவே மோதிய வரலாற்றை எடுத்துப் பார்த்தால் சென்னை அணியின் கை ஓங்கி இருக்கிறது. 18 முறை இரு அணிகளும் நேருக்கு நேர் சந்தித்திருக்கும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டும் 13 முறை வெற்றி பெற்றிருக்கிறது. சன்ரைசர்ஸ் அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த மோசமான சாதனை தொடரக்கூடாது என்பதற்காகவாவது சன்ரைசர்ஸ் இன்றைய போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என அந்த அணி ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
தோனிக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டதால் அவர் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்குவாரா? என்ற கேள்வி எழுந்தது. அதற்கேற்ப டெவோன் கான்வே விக்கெட் கீப்பிங் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ வைரலானது. இது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியதால், உடனடியாக தோனி பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டது. இதனால் தோனி தலைமையில் தான் சிஎஸ்கே களமிறங்கும் என்பது உறுதியாகிவிட்டது. அதேபோல், காயம் காரணமாக கடந்த சில போட்டிகளில் விளையாடாத பென்ஸ்டோக்ஸ் மீண்டும் பிளேயிங் லெவனுக்கு திரும்ப இருக்கிறார். அவரும் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.
அவர் அணிக்குள் வந்தால் கடந்த போட்டியில் சிறப்பாகா ஆடிய கான்வே, மொயீன்அலி, தீக்ஷனா, பதிரத்னா ஆகியோரில் யாரேனும் ஒருவர் நீக்கப்பட வேண்டிய சூழல் வரும். டாஸ் பொறுத்து யாரை நீக்குவது என்பதை தோனி முடிவு செய்வார். சன்ரைசர்ஸ் அணியிலும் எய்டன் மார்க்கரம், ஹாரி புருக், ராகுல் திருபாதி நல்ல பார்மில் இருக்கின்றனர். பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், நடராஜன் உள்ளனர். இதனால் இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி கடும் சவாலாக இருக்கும்.
மேலும் படிக்க: ஆர்சர், பும்ரா இடத்தை நிரப்பிய அர்ஜுன்... மும்பையின் எதிர்காலம் இவர் தானா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ