இந்த சீசனுடன் ஓய்வா? தோனி பதிலால் கண்கலங்கிய ரசிகர்கள்! என்னா மனுஷம் யா?
MS Dhoni: எனக்கு வயதாகிவிட்டது. வயதாகும் போது தான் அனுபவம் என்பது வரும். சச்சின் டெண்டுல்கர் தனது 16,17 வயதிலேயே விளையாடத் தொடங்கிவிட்டதால், அவருக்கு மட்டும் இளம் வயதிலேயே அந்த அனுபவம் வந்துவிட்டது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றது. இந்த போட்டி முடிந்த பின் பேட்டி அளித்த தோனி, தனக்கு இதுதான் கடைசி ஐபிஎல் என சூசகமாக பேசியது ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது. அப்படி என்ன பேசினார் தோனி என்பதை காணலாம்.
சென்னை - ஹைதராபாத் அணிகள் மோதிய ஐபிஎல் போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்று நடப்பு ஐபிஎல்லில் தனது 4-வது வெற்றியை பதிவு செய்தது. நேற்றைய போட்டியில் தோனி அபார சாதனை ஒன்றை படைத்தார். ஐபிஎல்லில் ஸ்டம்பிங், கேட்ச் என 200 முறை பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனை தான் அது. போட்டி முடிந்ததும் பரிசளிப்பு நிகழ்ச்சியின் சிஎஸ்கே கேப்டன் தோனி பேட்டி அளித்தார். அப்போது அதிவேகமாக ஸ்டம்பிங் செய்து வருகிறீர்களே எப்படி என கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே எம்.ஸ்.தோனியிடம் கேட்க, அவர் அளித்த பதில் தான் பலரையும் கலங்க செய்துவிட்டது.
'வயதாகும் போது தான் அனுபவம் என்பது வரும். சச்சின் டெண்டுல்கர் தனது 16,17 வயதிலேயே விளையாடத் தொடங்கிவிட்டதால், அவருக்கு மட்டும் இளம் வயதிலேயே அந்த அனுபவம் வந்துவிட்டது. எனக்கு வயதாகிவிட்டது. அதை மறைக்க முடியாது என கூறினார் மாகி. மேலும், சிஎஸ்கே ரசிகர்கள் காட்டும் அன்பு உங்களை தொடர்ந்து விளையாட வைக்குமா என்ற கேள்விக்கு பேசிய தோனி, நான் என் கரியரின் கடைசி கட்டத்தில் இருக்கிறேன்.
மேலும் படிக்க | ஏய் சும்மா இருடா.. மைதானத்தில் ஜடேஜாவை எச்சரித்த தோனி! என்ன நடந்தது?
இப்போது மகிழ்ச்சியாக விளையாட வேண்டும் என்று மட்டுமே நினைக்கிறேன். சென்னைக்கு வரும் போது எனக்கு நல்ல பீலிங் இருக்கும். அதற்கு காரணம் தமிழ்நாட்டு ரசிகர்கள் எனக்கு அளிக்கும் அன்பும், ஆதரவும் தான். நான் என்ன செய்தாலும் அவர்கள் ரசிக்கிறார்கள்' என செண்டிமெண்டாக பேசினார். இதனைக் கேட்ட ஒட்டு மொத்த சிஎஸ்கே ரசிகர்களின் கண்களும் குளமாகின.
இதனையடுத்து தோனி நிச்சயம் இந்த ஐபிஎல் சீசனுடன் ஓய்வு பெற உள்ளதாகவும், அதனை சூசகமாக இப்படி சொன்னதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். தோனிக்கு 43 வயதாகிறது. ஆனாலும், அவருக்கென உலக அளவில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதோடு இன்னும் சிறப்பான ஆட்டத்தையும் அவர் வெளிப்படுத்தி வருகிறார். இதனால் நிச்சயம் அடுத்த சில சீசன்களை அவர் விளையாட வேண்டும் என்று சிஎஸ்கே ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். வயதானாலும் சிங்கம் சிங்கம் தானே..! வி லவ் யூ தோனி..!
மேலும் படிக்க | IPL Records: இந்த ஐபிஎல் சாதனைகள் என்றாவது முறியடிக்கப்படுமா? சந்தேகம் தான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ