ஐபிஎல் 2023 பிரம்மாண்ட கிரிக்கெட் திருவிழா அகமதாபாத்தில் இருக்கும் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. கண்கவர் வாணவேடிக்கைகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளுக்கு மத்தியில் ஐபிஎல் 2023 சீசன் கலக்கலாக தொடங்குகிறது. முதல் போட்டியில் தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தோனி இந்தப் போட்டியில் டாஸ் போட களமிறங்கும்போதே ஐபிஎல் வரலாற்றில் மேலும் ஒரு மிகப்பெரிய சாதனையை படைக்க இருக்கிறார். அதனை ரசிகர்கள் காண ஆர்வமாக இருக்கின்றனர்.



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | IPL 2023: பிரம்மாண்டமாக தொடங்கும் ஐபிஎல் - நடைமுறைக்கு வரும் புதிய விதிகள்


தோனி படைக்கப்போகும் சாதனை



எம்எஸ் தோனி 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டியில் விளையாடி வருகிறார். அப்போது முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் அவர், அன்று ஐபிஎல் தொடங்கியபோது கேப்டனாக இருந்த வீரர்களில் இப்போதும் கேப்டனாக ஐபிஎல் விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு பிளேயராக இருக்கிறார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் டாஸ்போட களமிறங்கும்போது ஐபிஎல் தொடரில் அதிக வயதுடன் ஒரு அணியை தலைமை தாங்கும் வீரர் என்ற சாதனை தோனி வசம் வர காத்திருக்கிறது. ஏற்கனவே பல சாதனைகளை தன்வசம் வைத்திருக்கும் எம்எஸ் தோனிக்கு இந்த சாதனையும் அந்தப் பட்டியலில் இணைய இருக்கிறது.   


தோனி ஓய்வு அறிவிப்பு 



41 வயதாகும் தோனி இந்த ஐபிஎல் போட்டியுடன் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடைசியாக விளையாடிய பிறகே என்னுடைய ஐபிஎல் ஓய்வு இருக்கும் என கடந்த ஐபிஎல் போட்டியின்போது அவர் தெரிவித்திருந்தார். அதன்படி இந்த முறை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி ஐபிஎல் லீக் போட்டியை விளையாடும்போது ஓய்வு அறிவிப்பை வெளியிட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


நட்சத்திர வீரர்கள் கருத்து 


தோனியின் ஓய்வு குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா பேசும்போது, கடந்த சில ஆண்டுகளாகவே தோனியின் ஓய்வு குறித்து பல முறை கேட்டுவிட்டார்கள். ஆனால் அவர் இன்னும் விளையாடிக் கொண்டு தான் இருக்கிறார். தோனியின் பிட்னஸை பார்க்கும்போது இன்னும் சில சீசன்கள் ஐபிஎல் விளையாடுவார் என எதிர்பார்க்கலாம் என கூறினார். இதேபோல் ஹர்பஜன் சிங், விராட் கோலி உள்ளிட்டோரும் தோனி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வுபெற வாய்ப்பில்லை என கூறியுள்ளனர்.


மேலும் படிக்க | IPL 2023: முதல் நாளை கெடுக்குமா மழை... அகமதாபாத்தில் வானிலை நிலவரம் என்ன? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ