IPL 2023 GT vs CSK Weather and Pitch Report: நீண்ட நாளாக கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருந்த இந்தியன் பிரீமியர் லீக் என்ற ஐபிஎல் டி20 தொடர் இன்று முதல் தொடங்குகிறது. குஜராத் அகமதாபாத் நகரின் நரேந்திர மோடி மைதானத்தில் தொடக்க விழா நிகழ்ச்சிகளுடன் ஐபிஎல் தொடர் தொடங்குகிறது. சுமார் நான்கு வருடங்களுக்கு பின், ஐபிஎல் தொடக்க விழா நிகழ்வு நடத்தப்படுகிறது.
தொடக்க விழாவில் யார், யார்?
2018ஆம் ஆண்டில்தான், கடைசியாக ஐபிஎல் தொடக்க விழா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 2019இல், புல்வாமா தாக்குதல் சம்பவத்தில் உயிர் தியாகம் செய்த ராணுவத்தினரை நினைவுக்கூரும் பொருட்டு, அந்த சீசனின் தொடக்க விழா கைவிடப்பட்டது. தொடர்ந்து, கொரோனா தொற்று காரணமாகவும், பார்வையாளர்கள் அனுமதி குறைவு காரணமாகவும் 2020, 2021, 2022 ஆகிய கடந்த மூன்று சீசன்களிலும் ஐபிஎல் தொடக்க விழா நடைபெறவில்லை.
அந்த வகையில், இன்று நடைபெறும் தொடக்க விழா நிகழ்வில் பிரபல பாலிவுட் பாடகர் அர்ஜித் சிங் பாடல்களை பாடி ரசிகர்களுக்கு விருந்து படைக்க உள்ளார். நடிகைகள் தமன்னா, ராஷ்மிகா ஆகியோரின் நடனமும் இன்றைய கலை நிகழ்ச்சிகளின் குறிப்பிடத்தகுந்தவையாகும். மேலும், கேத்ரினா கைஃப், டைகர் ஷெராஃப் ஆகியோரும் இன்றைய நிகழ்வில் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
மேலும் படிக்க | IPL 2023: ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக தோனியின் மாஸ்டர் பிளான்
மழையும்... வீரர்களும்...
அந்த வகையில், இன்று நடைபெறும் இந்த தொடரின் தொடக்க போட்டியில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி, தோனி தலைமையிலான நான்கு முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது. தொடக்க போட்டியே அனல் பறக்கும் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கையில், அவர்களுக்கு சற்று ஏமாற்றம் அளிக்கக்கூடிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
Who are you when it rains, #TitansFAM#AavaDe | #TATAIPL2023 pic.twitter.com/X8AXZvaKV0
— Gujarat Titans (@gujarat_titans) March 30, 2023
நேற்றைய தினம், குஜராத் வீரர்கள் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டிருந்தபோது திடீரென மழை பெய்தது. அந்த அணி ட்விட்டரில் பகிர்ந்துள்ள வீடியோவில், நியூசிலாந்து அணி நட்சத்திர வீரரும், குஜராத் அணி வீரருமான கேன் வில்லியம்சன் நான்கு பேட்களை தூக்கிக்கொண்டு, ஆடுகளத்தில் இருந்து பெவிலியன் நோக்கி ஓடுவது தெரிகிறது. மற்றவர்களும் மழை நனையாமல் இருக்க மறைவை நோக்கி ஓடினர்.
Choosing the right rain snack #WhenInGujarat #WhistlePodu pic.twitter.com/FyskXh1URj
— Chennai Super Kings (@ChennaiIPL) March 30, 2023
மறுப்புறம், சிஎஸ்கே அணி வீரர்கள் பெவிலியனில் அமர்ந்து மழையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். மேலும், குஜராத் அணியின் பயிற்சியாளரும், மூத்த இந்திய வீரருமான ஆஷிஷ் நெஹ்ரா மழைத்துளிகளுடன் விளையாடுவதும் வீடியோவில் தெரிந்தது. போட்டி தொடங்கும் முந்தைய நாள் இப்படி மழை பெய்திருப்பது பலருக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இன்றைய வானிலை
இந்நிலையில், மார்ச் 31 ஆம் தேதியான இன்று அகமதாபாத்தில், குறிப்பாக மாலையில் ஒரு சதவீதம்தான், மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 7.30 மணிக்கு போட்டி தொடங்கும் போது தெளிவான வானம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இடியுடன் கூடிய மழை இல்லை எனவும் வெப்பநிலை 23 டிகிரியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிட்ச் நிலவரம்
நரேந்திர மோடி மைதானத்தில் உள்ள ஆடுகளம் பொதுவாக பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். ஆட்டத்தின் ஆரம்ப கட்டத்திற்கு ஒரு நல்ல மேற்பரப்புடன் இருக்கும். இருப்பினும், போட்டி செல்ல செல்ல, சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஆடுகளம் சாதகமாக மாறும். இந்த ஆடுகளத்தில் சராசரி முதல் இன்னிங் ஸ்கோர் சுமார் 170 ஆகும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சேசிங் செய்யும் அணிகளே வென்றுள்ளன.
அணிகள் விவரம்
குஜராத் டைட்டன்ஸ்: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சுப்மான் கில், கே.எஸ் பாரத் (விக்கெட் கீப்பர்), விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), கேன் வில்லியம்சன், ராகுல் தெவாட்டியா, அபினவ் மனோகர், முகமது ஷமி, பிரதீப் சங்வான், சாய் கிஷோர், விஜய் சங்கர், சாய் சுதர்ஷன், ரஷித் கான், சிவம் மாவி, மேத்யூ வேட், ஒடியன் ஸ்மித், உர்வில் படேல், தர்ஷன் நல்கண்டே, டேவிட் மில்லர் (முதல் 2 ஆட்டங்களில் பங்கேற்க மாட்டார்), ஜோஷ் லிட்டில் (முதல் போட்டி பங்கேற்க மாட்டார்), யாஷ் தயாள், ஜெயந்த் யாதவ், ஒடியன் ஸ்மித், நூர் அகமது, அல்ஜாரி ஜோசப்.
சென்னை சூப்பர் கிங்ஸ்: மகேந்திர சிங் தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ், ரவீந்திர ஜடேஜா, அஜிங்க்யா ரஹானே, சிசண்டா மகலா, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, டுவைன் பிரிட்டோரியஸ், அஹய் மண்டல், நிஷாந்த், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், மிட்செல் சான்ட்னர், சுபர்ன்ஷு சேனாபதி, சிமர்ஜீத் சிங், மதீசா பத்திரனா, மகேஷ் தீக்ஷனா, பகத் வர்மா, பிரசாந்த் சோலங்கி, ஷேக் ரஷீத், துஷார் தேஷ்பாண்டே.
மேலும் படிக்க | ஐபிஎல் போட்டிகளை டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இலவசமாகக் காண்பிக்கும் ரிலையன்ஸ் அம்பானி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ