IPL 2023 PBKS vs RCB: நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று மாலை நடைபெற்ற லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை செய்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பஞ்சாப் அணியில் ஷிகர் தவாணுக்கு பதிலாக சாம் கரன் கேப்டனாக செயல்பாட்டார். தவாணுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அதேபோல, பெங்களூரு அணியின் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டார். டூ பிளேசிஸ் இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக இம்பாக்ட் சப் வீரராக பேட்டிங் மட்டும் விளையாடினார். 


அதன்படி, ஓப்பனிங்கில் களமிறங்கிய விராட் - டூ பிளேசிஸ் ஜோடி, 16 ஓவர்களுக்கு 137 ரன்களை எடுத்தது. கோலி 59 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், அடுத்து வந்த மேக்ஸ்வெல் டக்-அவுட்டானார். சிறிதுநேரத்தில், அரைசதம் கடந்த டூ பிளேசிஸ் 84 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அந்த அணி 174 ரன்களை எடுத்தது. பஞ்சாப் சார்பில், ஹர்பிரீத் பிரர் 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், நாதன் எல்லீஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.



மேலும் படிக்க | அர்ஜுன் டெண்டுல்கருக்கு பயிற்சி போறாது! பாகிஸ்தான் கிரிக்கெட்டரின் ‘ஃப்ரீ’ அட்வைஸ்


தொடர்ந்து, பந்துவீசிய பெங்களூரு அணிக்கு சிராஜ் சிறப்பான பங்களிப்பை அளித்தார். பவர்பிளே ஓவர்களிலேயே டைடே, லிவிங்ஸ்டன் ஆகியோரின் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். ஹசரங்கா மாட் ஷார்ட்டின் விக்கெட்டையும் கைப்பற்றினார். மேலும், ஹர்பிரீத் சிங் பாட்டியாவை சிராஜ் ரன்-அவுட் செய்தார். இதனால், பஞ்சாப் அணி பவர்பிளே ஓவர்களில் 49 ரன்களை எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்தனர். 


கேப்டன் சாம் கரன் 10 ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடியாக விளையாடிய பிரப்சிம்ரன் சிங் 46(30) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை அடுத்து, ஜித்தேஷ் சர்மா மட்டுமே சற்று ஆறுதல் அளித்தார். இதனால், 18.2 ஓவர்களிலேயே பஞ்சாப் 150 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதன்மூலம், பெங்களூரு 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 



பெங்களூரு அணியில் சிராஜ் 4 விக்கெட்டுகளையும், ஹசரங்கா 2 விக்கெட்டுகளையும், ஹர்ஷல் படேல், பர்னல் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். சிராஜ் ஆட்ட நாயகனாக தேர்வானார். சிராஜ் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி, பர்பிள் தொப்பியையும் கைப்பற்றினார். டூ பிளேசிஸ் 84 ரன்களை எடுத்து, ஆரஞ்சு தொப்பியையும் கைப்பற்றினார்.


புள்ளிப்பட்டியலில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 போட்டிகளில் 3 வெற்றி, 3 தோல்வி என 6 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியது. பஞ்சாப் அணி, 6 போட்டிகளில் 3 வெற்றி, 3 தோல்வி என 6 புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் ஏழாவது இடத்தில் உள்ளது. பெங்களூரு அணி இந்த வெற்றியின் மூலம், கடந்த 2 ஆண்டுகளாக பஞ்சாப்பிடம் பெற்றுவந்த தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளியையும் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.  


மேலும் படிக்க | IPL 2023: ’சேஸிங் மட்டும் எங்க கிட்ட மறந்துடுங்க’ ராஜபாட்டை நடத்தும் கேஎல் ராகுல் டீம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ