சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக விராட் கோலியின் அற்புதமான சதம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணிக்கு உத்வேகத்தைக் கொடுத்தது. ஐபிஎல் 2023 புள்ளிகள் அட்டவணையில் முதல் இரண்டு இடங்களுக்குள் வருவதற்கும், குவாலிஃபையர் 1 இல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக விளையாட வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்குமா இந்த அதிரடி ஆட்டம் என்ற கேள்வியையும் எழுப்பிய சுவாரசியமான போட்டி அது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், இறுதிப் போட்டியில் விளையாட, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இருக்கும் வாய்ப்புகள் என்ன?


ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெறும் போட்டியில் விராட் கோலியின் RCB வென்றால், 14 புள்ளிகளில் இருந்து 16 புள்ளிகளைப் பெற முடியும்.  அதுமட்டுமல்ல, MS தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) சனிக்கிழமையன்று முறையே டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸிடம் தோற்றால் 15 புள்ளிகளுடன் இருக்கும்.
 
ஐந்து முறை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியை விட நிகர ரன்-ரேட்டை அதிகமாக இருக்கும் நடப்பு சாம்பியன் குஜராத் அணி, ஹர்திக் பாண்டியாவின் தலைமையில் நல்ல ஃபார்மில் இருக்கிறது. எனவே ஆர்சிபி அடுத்தப் போட்டியில்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.


சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெற்றாலும் பெங்களூரு அணி16 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கும்.


மேலும் படிக்க | IPL 2023: மும்பை இந்தியன்ஸ் பிளேஆஃப்களுக்கு தகுதி பெற முடியுமா?


புள்ளிகள் அட்டவணையில் RCB 2வது இடத்தைப் பெறும் சாத்தியக்கூறுகள்
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் 16 புள்ளிகளை எட்ட RCB, குஜராத் அணியை வீழ்த்த வேண்டும்


சென்னை அணி சிஎஸ்கே மற்றும் லக்னோ அணிகள் தங்களது கடைசி லீக் ஆட்டங்களில் தோற்க வேண்டும்


சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை அணி தோற்க வேண்டும் அல்லது அந்த விளையாட்டில் பெறும் ரன் ரேட் பெங்களூரு அணியை விட அதிகமாகக்கூடாது.  


ஆர்சிபி தவிர, சிஎஸ்கே, எம்ஐ, எல்எஸ்ஜி, கேகேஆர், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளும் தற்போது பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறலாம். மற்ற அணிகள் ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவதற்கான வாய்ப்புகள் என்ன?



 
சென்னை சூப்பர் கிங்ஸ்: எம்.எஸ். தோனியின் அணி 17 புள்ளிகளை எட்டிய பிறகு, டிசிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் சனிக்கிழமை வெற்றி பெற்று பிளேஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்.


லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: க்ருனால் பாண்டியா தலைமையிலான எல்எஸ்ஜி 17 புள்ளிகளை எட்டுவதற்கும், பிளேஆஃப்ஸ் வாய்ப்பை பதிவு செய்வதற்கும் சனிக்கிழமை நடைபெறும் போட்டியில் KKR ஐ வீழ்த்த வேண்டும்.


மேலும் படிக்க | 2023 ODI உலகக் கோப்பை போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பிருக்கும் 5 இளம் வீரர்கள்


மும்பை இந்தியன்ஸ்: RCB, CSK மற்றும் LSG அணிகள் தங்களது கடைசி லீக் ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற்றாலும், 16 ரன்களுடன் தகுதி பெறுவதை உறுதிசெய்ய ரோஹித் ஷர்மாவின் அணி தனது இறுதிப் போட்டியில் SRH-ஐ மிகப்பெரிய வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும். CSK மற்றும் LSG தங்கள் கடைசி ஆட்டங்களில் தோற்று வெற்றி பெற்றால் அல்லது RCB தங்கள் கடைசி ஆட்டத்தில் தோற்றால் அவர்கள் தகுதி பெறலாம்.


கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: பிளேஆஃப்களுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. 14 புள்ளிகளை பெறவே, சனிக்கிழமை எல்எஸ்ஜியை வெல்ல வேண்டும். அதன் பிறகு, RCB மற்றும் MI தங்கள் கடைசி போட்டியில் தோல்வியடைய வேண்டும் என்று அவர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும். 


ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சனின் RR அவர்களின் NRR ஐ மேம்படுத்த பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான இறுதி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும். KKR, RCB மற்றும் MI ஆகியவை தங்கள் கடைசிப் போட்டிகளில் தோல்வியடைய வேண்டும்.


பஞ்சாப் கிங்ஸ்: ஷிகர் தவான் அணிக்கு தகுதிபெறும் நம்பிக்கையும் குறைவு. வெள்ளிக்கிழமை இரவு RRஐ அதிக வித்தியாசத்தில் வெல்ல வேண்டும் என்பதால், ராயல்ஸுக்கு சமன்பாடு ஒத்திருக்கிறது. KKR, RCB மற்றும் MI ஆகியவை தங்கள் கடைசி போட்டிகளில் தோல்வியடைய வேண்டும்.


மேலும் படிக்க | 2023 ODI உலகக் கோப்பை போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பிருக்கும் 5 இளம் வீரர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ