IPL 2023 Playoff Prediction: பலரும் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த ஐபிஎல் 2023 தொடர் நாளை (மார்ச் 31) குஜராத்தின் அகமதாபாத் நகரில் மிகவும் கோலாகலமாக தொடங்க உள்ளது. தொடக்க விழாவில் பல்வேறு நடிகர்களின் கலைநிகழ்ச்சிகள், வாணவேடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டனஸ் அணி, நான்கு முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோத உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐபிஎல் தொடர் என்றாலே முதல் போட்டியில் இருந்தே சுவாரஸ்யம் தொற்றிக்கொள்ளும் என்பதால், ரசிகர்கள் தற்போது முழு வைப்பிற்குள் வந்துவிட்டார்கள். அணிகள் குறித்த விவரம், பிளேயிங் லெவன் கணிப்பு, இம்பாக்ட் பிளேயர் ஆப்ஷன்கள் என தங்களுக்கு பிடித்த அணியை மட்டுமின்றி, வீழ்த்த நினைக்கும் எதிரணி வரை டாப் டூ பாட்டம் அனைத்து தகவல்களையும் தற்போது விரல் நுனியில் வைத்திருப்பார்கள். 


ரசிகர்கள் ஒருபுறம் என்றால், கிரிக்கெட் வர்ணையாளர்கள், மூத்த வீரர்கள் ஆகியோருக்கும் இது உற்சாகம் அளிக்கும் காலகட்டம் எனலாம். ஐபிஎல் தொடரை திருவிழாவாகவே பலரும் பார்க்கின்றனர். ஐபிஎல் தொடங்கிவிட்டால், அடுத்த இரண்டு மாதங்களுக்கு வேறு எது குறித்தும் அவர்களுக்கு யோசனையே இருக்காது எனலாம். மேலும், ரசிகர்கள், வீரர்கள், வர்ணனையாளர்கள் என அனைவரும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் தங்களின் கணிப்புகளை கூறிவருகின்றனர்.


மேலும் படிக்க | IPL 2023: காயத்தில் அவதிபடும் பென் ஸ்டோக்ஸ்! சென்னை அணி எடுத்த முக்கிய முடிவு!


ஸ்டீவ் ஸ்மித் கணிப்பு


அந்த வகையில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தும் தனது பிளே ஆஃப் கணிப்பை கூறியுள்ளார். இந்த முறை அவர் ஐபிஎல் போட்டியில் விளையாடவில்லை. ஆங்கில வர்ணனையாளராக முதல்முறையாக பணியாற்ற உள்ளார். இந்நிலையில், ஸ்டீவ் ஸ்மித் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி சேனலில் நடந்த உரையாடலில், இந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் நான்கு அணிகள் குறித்த கணிப்பை கூறியுள்ளார். 


அதில் முதல் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார். இதையடுத்து, நடப்பு சாம்பியன் குஜராத் அணி இரண்டாவது அணியாக தகுதிபெறும் என கணித்துள்ளார். இதையடுத்து, அடுத்த இரண்டு அணிகளாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளை அவர் தேர்வு செய்துள்ளார். 



மேலும், தான் ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக பணியாற்றுவது குறித்து அவர் கூறுகையில்,"நான் விளையாட்டை நன்றாகப் படித்துள்ளேன் என்று நினைக்கிறேன். மேலும், இங்கு ஐபிஎல் பார்க்கும் அனைவருக்கும் சில நல்ல நுண்ணறிவுகள் இருக்கும் என்று நம்புகிறேன். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழுவுடன் சேர்வதில் நான் நிச்சயமாக உற்சாகமாக இருக்கிறேன், இந்த புதிய அனுபவத்தை மிகவும் எதிர்பார்த்துள்ளேன்" என கூறியிருந்தார். 


ஐபிஎல் போட்டியில் அவர் கடைசியாக 2021இல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடியிருந்தார். அங்கு அவர் டெல்லி அணிக்காக எட்டு போட்டிகளில் 152 ரன்களை எடுத்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | IPL 2023: ரிஷப் பண்டுக்கு பதிலாக விளையாடப்போவது இவரா...?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ