IPL 2023: ரிஷப் பண்டுக்கு பதிலாக விளையாடப்போவது இவரா...?

IPL 2023 Rishabh Pant Replacement: ஐபிஎல் 2023 தொடர் நாளை மறுதினம் தொடங்க உள்ள நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணி ரிஷப் பந்திற்கு மாற்று வீரரை முதல் போட்டிக்கு போட்டிக்கு முன்னதாக நியமிக்க உள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Mar 29, 2023, 03:26 PM IST
  • டெல்லி அணி கேப்டனாக டேவிட் வார்னர் செயல்படுகிறார்.
  • கடந்தாண்டு டெல்லி அணி ஐந்தாவது இடத்துடன் நிறைவு செய்தது.
IPL 2023: ரிஷப் பண்டுக்கு பதிலாக விளையாடப்போவது இவரா...? title=

IPL 2023 Rishabh Pant Replacement: கடந்தாண்டு டிசம்பரில் ரிஷப் பண்ட், கார் விபத்தில் சிக்கி காயமடைந்தார். விபத்தை நடந்து மூன்று மாதங்களாகும் நிலையில், அவர் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. எனவே, அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியிருந்தார். 

மாற்று வீரர்

இதனையடுத்து, இந்தாண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு டேவிட் வார்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டார். மேலும் அந்த அணிக்கு முழு நேர விக்கெட் கீப்பர் பேட்டர் இன்றி சிரமப்பட்டது. மேலும், நீண்ட நாளாக அவருக்கு பதிலான வீரரை அணி நிர்வாகம் அறிவிக்கவேயில்லை. 

மேலும் படிக்க | IPL 2023: காயத்தில் அவதிபடும் பென் ஸ்டோக்ஸ்! சென்னை அணி எடுத்த முக்கிய முடிவு!

இந்நிலையில், ரிஷப் பண்டுக்கு பதிலாக பெங்கால் விக்கெட் கீப்பர் பேட்டர் அபிஷேக் போரல் நியமிக்கப்படுவார் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. போரல் ஒரு நல்ல விக்கெட் கீப்பர் ஆவார். அவர் ரஞ்சி டிராபியில் பெங்கால் அணிக்காக விளையாடிகிறார். இவரும் ரிஷப் பண்டை போலவே இடதுகை பேட்டர்தான். 

பிளே ஆஃப் கனவு

லக்னோவின் பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் டெல்லி தனது முதல் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிராக வரும் ஏப். 1ஆம் தேதி விளையாடுகிறது. 20 வயதான போரல் கடந்த சீசனில் ரஞ்சியில் அறிமுகமானார். தற்போது அதில் இருந்து ஒரு வருட காலத்தில், ஐபிஎல் தொடரில் வலிமையான டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம் பெற்றிருக்கிறார். இருப்பினும், அதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. அவர்களின் முதல் போட்டிக்கு முன் அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்தாண்டு ரிஷப் பந்த், டெல்லி கேபிடல்ஸ் அணியை வழிநடத்தினார். ஆனால் அவர்கள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. அந்த அணி 14 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் 5வது இடத்தைப் பிடித்தது. இந்த ஆண்டு, வார்னரின் தலைமையின் கீழ், டெல்லி முதலில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதை இலக்காக வைத்திருக்கும். முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கவும் அந்த அணிக்கு கூடுதல் வாய்ப்பு உள்ளதாகவே தெரிகிறது.

டெல்லி கேபிடல்ஸ் மேட்ச் வின்னர்கள்

டெல்லி அணியில் தற்போது வார்னர், பிருத்வி ஷா, குல்தீப் யாதவ், அக்சர் படேல் போன்றவர்கள் முன்னணி வீரர்களாக இருந்து போட்டியின் பொறுப்பை ஏற்று விளையாட வேண்டும். மேலே குறிப்பிடப்பட்ட நான்கு வீரர்களைத் தவிர, டெல்லியின் பெரிய வீரர்களில் ஒருவர் ஆஸ்திரேலியாவின் மிட்செல் மார்ஷ். டெல்லி அணியின் 3ஆவது இடத்தில் மார்ஷ் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவுக்கு எதிரான ODI தொடரில் மார்ஷ் சிறப்பான ஃபார்மில் இருந்தார். அதில் அவர் 3 போட்டிகளில் 97 சராசரி மற்றும் 131.08 ஸ்டிரைக் ரேட்டில் 194 ரன்கள் எடுத்து அதிக ரன் எடுத்த வீரராக இருந்தார்.

மேலும் படிக்க | IPL 2023: மும்பை அணிக்கு திடீர் சிக்கல்... ரோகித் இல்லை இனி இவர்தான் கேப்டன்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News