RCBvsSRH: விராட் கோலி - டூ பிளசிஸ் அதிரடியில் ஆர்சிபி அணி அபார வெற்றி: பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்
சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் அதிரடியாக விளையாடிய ஆர்சிபி அணி அபாரமான வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றி மூலம் பிளே ஆப்புக்கான வாய்ப்பில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நீடிக்கிறது.
ஆர்சிபி அணிக்கு நெருக்கடி
ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும், ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் இடையிலான லீக் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நிலையில் பெங்களூரு அணி களமிறங்கியது. டாஸ் வெற்றி பெற்ற டூப்பிளசிஸ், ஆர்சிபி அணி பவுலிங் செய்வதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் இறங்கியது. வழக்கம்போல அந்த அணி வீரர்கள் ஓப்பனிங்கில் சொதப்பினர்.
சன்ரைசர்ஸ் அணி தடுமாற்றம்
ஷர்மா 11, திரிபாதி 15, மார்கிரம் 18 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் தடுமாற்றத்தில் சன்ரைசர்ஸ் அணி இருந்தபோது களமிறங்கினார் ஹென்றிச் கிளாசன். அவர் மட்டுமே இந்த ஐபிஎல் தொடரில் அந்த அணியின் பேட்டிங் நட்சத்திரமாக இருந்ததால், மீண்டும் ஒருமுறை அணியை தூக்கிய நிறுத்த வேண்டிய பொறுப்பு கிளாசன் மீது விழுந்தது. அதனை புரிந்து கொண்ட அவர், ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார். வந்து விழுந்த பந்துகளையெல்லாம் பவுண்டரி சிக்சருகளுமாக விளாசிய அவர், 51 பந்துகளில் 104 ரன்கள் விளாசினார். இதில் 6 மெகா சிக்சர்களும், 8 பவுண்டரிகளும் அடங்கும். அவரின் அதிரடியால் சன்ரைசர்ஸ் அணி 186 ரன்கள் குவித்தது.
மேலும் படிக்க | IPL Records: ஐபிஎல் வரலாற்றில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பெளலர்கள்
டூபிளசிஸ் - விராட் விளாசல்
சவாலான ஸ்கோர் என்றாலும், கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே ஐபிஎல் பிளே ஆஃப் வாய்ப்பு என்பதால் கேப்டன் டூபிளசிஸூம், விராட் கோலியும் சன்ரைசர்ஸ் பந்துவீச்சை அடித்து துவைத்து எடுத்தனர். இருவரும் சந்தித்த பந்துகளை எல்லாம் பவுண்டரியும், சிக்சருமாக விளாசி எடுத்தனர். தவறான கிடைத்தபோதெல்லாம் எல்லை கோட்டுக்கு தவறாமல் அடித்தனர். இதனால் இருவரும் அரைசதம் விளாசினர். அப்போதே ஆர்சிபி அணியின் வெற்றி ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.
விராட் கோலி அபார சதம்
இருப்பினும் கடைசி வரை அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த இந்த இணையின் விக்கெட்டை எடுக்க முடியாமல் சன்ரைசர்ஸ் அணி தவித்தது. எந்த பந்துவீச்சாளரை பயன்படுத்தினாலும் அவரை வெளுத்தெடுத்தனர் டூப்ளசிஸ் - விராட் கோலி ஜோடி. தொடர்ந்து சிறப்பாக ஆடிய விராட் கோலி அபாரமாக சிக்சர் அடித்து தன்னுடைய சதத்தை நிறைவு செய்தார். சதமடித்த அடுத்த பந்தில் அவர் அவுட்டானான நிலையில், கேப்டன் டூப்ளசிஸ் 71 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இருப்பினும் ஆர்சிபி அணி 19.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் என்ற வெற்றி இலக்கை எட்டியது. இந்த வெற்றி மூலம் ஆர்சிபி அணி 14 புள்ளிகளுடன் பிளே ஆப் ரேசில் தொடர்ந்து இருக்கிறது. இப்போது அந்த அணிக்கு வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ