IPL Records: ஐபிஎல் வரலாற்றில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பெளலர்கள்

IPL Records Which Created History: இந்தியன் பிரீமியர் லீக்கில் பல மனதைக் கவரும் பேட்டிங் திறமைகளும், எடுக்கப்பட்ட ரன்களும் அதிகம் பேசப்படும். பேட்ஸ்மென்கள் அதிகம் பாராட்டப்படுவார்கள்.  

20 ஓவர் போட்டிகளில் ஒற்றை ரன் கூட மிகவும் முக்கியம் என்பதால், ரன்களும், பேட்ஸ்மென்களும் அதிகம் பேசப்படும் நிலையில், எப்போதும் குறைவாகப் பாராட்டப்படும் பெளலர்களும் பல சாதனைகளை செய்துள்ளனர்.

மேலும் படிக்க | IPL Records: ஐபிஎல் போட்டிகளிலேயே மிகவும் அதிக ரன் கொடுத்த ஓவர்களை வீசிய பவுலர்கள்

1 /6

ஐபிஎல் வரலாற்றில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் (Image source: Twitter)

2 /6

பால்க்னர் தனது பல ஐபிஎல் போட்டிகளில் பல்வேறு அணிகளுக்காக (GL/KXIP/PWI/RR) மொத்தம் 59 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் தனது ஐபிஎல் வாழ்க்கையில் இரண்டு முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.  (Image source: Twitter)

3 /6

தனது ஐபிஎல் வாழ்க்கையில் மொத்தம் 91 விக்கெட்டுகளை எடுத்துள்ள ஜெய்டன் உனட்கட், லீக் வரலாற்றில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது பந்து வீச்சாளர் ஆவார். (Image source: Twitter)

4 /6

இந்தியா இதுவரை உருவாக்கிய சிறந்த டி20 பந்துவீச்சாளர்களில் புவனேஷ்வர் குமார் ஒருவர். அவர் இந்தியன் பிரீமியர் லீக்கில்  இதுவரை 168 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் மற்றும் இரண்டு முறை (PWI/SRH) ஐந்து விக்கெட்டுகளை எடுத்துள்ளார். (Image source: Twitter)

5 /6

ஐபிஎல் 2023 சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG)க்காக இங்கிலாந்து வீரர் மார்க் வூட் சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் 5/14 என்ற சிறந்த எண்ணிக்கையுடன் ஒரு போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை எடுத்துள்ளார். (Image source: Twitter)

6 /6

இந்தியன் பிரீமியர் லீக்கில் விளையாடிய பாகிஸ்தான் வீரர் சோஹைல் தன்வீர், ஐபிஎல்லில் ஒரு போட்டியில் ஐந்து விக்கெட்டுகளையும், மொத்த ஐபில் போட்டிகளிலும் ஒட்டுமொத்தமாக 22 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.