IPL El Clasico MI vs CSK: நடப்பு ஐபிஎல் தொடரின் 12ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி நாளை (ஏப்ரல் 8) மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் சந்திக்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான போட்டியை ஐபிஎல் தொடரின் 'எல்-கிளாசிகோ' (El Clasico) என்று அழைக்கப்படுகிறது, ஐபிஎல் வரலாற்றில் அவர்களுக்கு இடையேயான கடும் மோதலை குறிக்கும் வகையில் இப்படி அழைக்கப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐபிஎல் தொடரில் மும்பை அணி 5 முறையும், சென்னை அணி 4 முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. இந்த இரண்டு அணிகளும், ஐபிஎல், சாம்பியன் லீக் என இரு தொடர்களையும் சேர்த்து மொத்தம் 36 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன.



மேலும் படிக்க | IPL 2023: வருகிறார் அர்ஜுன் டெண்டுல்கர்... வாரிசை துணிவாக களமிறக்க மும்பை மெகா திட்டம்!


ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணியாக விளங்கும் இரண்டு அணிகளும், கடந்தாண்டு மிக மோசமாக விளையாடியது. சென்னை 9ஆவது இடத்தையும், மும்பை 10ஆவது இடத்தையும் பிடித்தன. நடப்பு தொடரில், சென்னை இரண்டு போட்டிகளில் விளையாடி தலா ஒரு தோல்வி, ஒரு வெற்றியை பெற்றுள்ளது. மும்பை பெங்களூரு அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியடைந்தது. அந்த வகையில், சென்னை வெற்றி பயணத்தை தொடரவும், மும்பை தனது வெற்றிக் கணக்கை தொடங்கவும் முயற்சிக்கும் எனலாம். இந்நிலையில், ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளுக்கும் இடையிலான போட்டிகளை புள்ளிவிவரங்கள் அடிப்படையில் இங்கு காணலாம். 



ஐபிஎல் வரலாற்றில் சென்னை vs மும்பை


  • விளையாடிய போட்டிகள் - 34

  • மும்பை வென்ற போட்டிகள் - 20

  • சென்னை வென்ற போட்டிகள் - 14

  • சமன், முடிவில்லாத போட்டிகள் - 0

  • மும்பையின் அதிகபட்ச ஸ்கோர் - 219

  • சென்னையின் அதிகபட்ச ஸ்கோர் - 218

  • மும்பையின் குறைந்தபட்ச ஸ்கோர் - 136 

  • சென்னையின் குறைந்தபட்ச ஸ்கோர் - 79

  • அதிக ரன்களை எடுத்தவர் - சுரேஷ் ரெய்னா (710 ரன்கள்)

  • அதிக விக்கெட்டுகளை எடுத்தவர் - டுவைன் பிராவோ (35 விக்கெட்டுகள்)


மேலும் படிக்க | மும்பை அணி ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி - நீடா அம்பானியின் முடிவால் சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ