ஐபிஎல் ஏலம் வந்துவிட்டாலே டெல்லி கேப்பிட்டல்ஸ் இணை உரிமையாளர் கிரண் குமார் கிராந்தியும் ஹைலைட்டாக மாறிவிடுவார். இவர் டெல்லி அணிக்கு பிளேயர்கள் வாங்குவதோடு மட்டும் நிற்காமல் மற்ற அணிகள் வாங்கும் பிளேயர்களின் விலையையும் சரமாரியாக ஏற்றிவிட்டுவிடுவார். இவரின் இந்த செயல்பாட்டுக்காகவே மற்ற அணிகள் இவர் மீது செம கடுப்பில் இருந்தாலும், ரசிகர்கள் இவரின் ஏல விளையாட்டை வெகுவாக ரசிக்கின்றனர். கடந்த ஐபிஎல் ஏலத்தில்கூட மற்ற அணிகள் வாங்க நினைத்திருந்த வீரர்களின் விலையை தாறுமாறாக ஏற்றிவிட்டார். அதேநேரத்தில் தங்கள் அணிக்கு வேண்டிய வீரர்களை குறைந்த விலைக்கு வாங்குவதிலும் கைதேர்ந்தவராக இருக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

யார் இந்த கிரண்குமார் கிராந்தி?


GMR-ன் CEO & MD கிரண் குமார் கிராந்தி டெல்லி கேபிடல்ஸ் ஏலத்தில் வழக்கமாக இருப்பவர். சமீபத்திய சீசன்களில், டெல்லிகாக ஒரு நல்ல அணியை உருவாக்க நிர்வாகத்தின் ஒட்டுமொத்த முயற்சியின் ஒரு பகுதியாக அவர் இருந்தார். ஐபிஎல் 2022 ஏலத்திலும் சிறப்பாக செயல்பட்டார். கிராந்தி 6 வெவ்வேறு நிறுவனங்களின் தலைவராக இருந்து தற்போது ஜிஎம்ஆர் குழுமத்தின் இணைத் தலைவராகவும், ஜிஎம்ஆர் ஏர்போர்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இணை-நிர்வாக இயக்குநராகவும், ஜிஎம்ஆர் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் உள்ளார்.  அவர் அசோசியேட்டட் சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் & இண்டஸ்ட்ரி ஆஃப் இந்தியாவின் துணைத் தலைவராகவும், இளம் தலைவர்கள் அமைப்பின் (இந்தியா) உறுப்பினராகவும், மேலும் 16 நிறுவனங்களின் குழுவிலும் உள்ளார்.  கடந்த காலத்தில் கிராந்தி மன்றத்தின் மொண்டியல் டி எல்'எகனாமியின் உறுப்பினராக இருந்தார்.  உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.


மேலும் படிக்க | ஐபிஎல் மினி ஏலம் 2023: அணிகள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய 5 விதிகள்


ஐபிஎல் ஏலத்தில் கிங் மேக்கர்


ஒவ்வொரு முறை ஏலத்திலும் சிறப்பாக காய்களை நகர்த்தி நல்ல பிளேயர்களை அணிக்கு கொண்டுவருவதிலும், மற்ற அணிக்கு செல்ல இருக்கும் பிளேயர்களின் விலையை கிடுகிடுவென உயர்த்திவிடுவதிலும் கில்லாடியாக இருக்கிறார் கிரண்குமார் கிராந்தி. அதாவது, இவர் நினைக்கும் பிளேயர் டெல்லிக்கு கிடைக்காத சூழல் வந்தால், விலையை தாறுமாறாக உயர்த்திவிட்டுவார். இன்று நடைபெற இருக்கும் மினி ஏலத்திலும் இவரின் ஏல விளையாட்டு எப்படி இருக்கும்? என்பதை பார்க்க கிரிக்கட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


மேலும் படிக்க | IPL Mini Auction : ஏலத்திற்கு வரும் டை பிரேக்கர் விதி... அடடே புதுசா இருக்கே!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ