IPL Ticket Booking: IPL 2023 போட்டிக்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் எடுப்பது எப்படி?
IPL Ticket Booking: சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், ஜெய்ப்பூர், மொஹாலி, பெங்களூரு, அகமதாபாத், லக்னோ, தர்மசாலா மற்றும் கவுகாத்தி ஆகிய நகரங்களில் ஐபிஎல் போட்டி நடைபெறுகிறது.
IPL Ticket Booking: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 மார்ச் 31-ம் தேதி முதல் நடைபெற உள்ளது, இந்த ஆண்டு ஐபிஎல் 16-வது சீசன் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையே போட்டியுடன் தொடங்குகிறது. இந்த ஆண்டு முதல் ஐபிஎல் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. 2019 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக இந்த 2023-ம் ஆண்டில் தான் இந்தியன் பிரீமியர் லீக் போட்டி ஹோம்-அண்ட்-அவே ஃபார்மேட்டில் நடைபெறவுள்ளது. இந்த சீசனில் மொத்தம் 12 இந்திய நகரங்கள் 74 ஐபிஎல் போட்டிகளை நடத்துகின்றன. சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், ஜெய்ப்பூர், மொஹாலி, பெங்களூரு, அகமதாபாத், லக்னோ, தர்மசாலா மற்றும் கவுகாத்தி ஆகிய நகரங்களில் ஐபிஎல் போட்டி நடைபெறுகிறது. ஏற்கனவே சில இடங்களுக்கான டிக்கெட்டுகள் விற்பனைக்கு வந்துவிட்டது.
மேலும் படிக்க | ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் சொன்ன அதிரடி மாற்றங்கள்! ஐசிசி முடிவு என்ன?
மார்ச் 31 அன்று குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிக்கான டிக்கெட்டுகள் Paytm Insider-ல் கிடைக்கின்றது. ஜிடி-ன் முதல் மூன்று ஹோம் கேம்களில் அகமதாபாத்தில் நடக்கும் போட்டிகளுக்கான ஆரம்ப விலை ரூ.400 முதல் ரூ.800 வரை இருக்கும். ஹைதராபாத்தில் டிக்கெட் விலை ரூ.499 முதல் ரூ.11,719 வரை இருக்கும். டெல்லி கேப்பிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகளுக்கான அதிகாரப்பூர்வ டிக்கெட் பார்ட்னராக Paytm Insider உள்ளது. BookMyShow-ல் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்சி) ஹோம் மேட்ச்களுக்கான டிக்கெட்டுகள் கிடைக்கும். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரின் (ஆர்சிபி) ஹோம் மேட்ச்களுக்கான டிக்கெட்டுகள் அவர்களின் இணையதளத்திலேயே கிடைக்கும். ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் (கேகேஆர்) டிக்கெட் முன்பதிவு தளம் குறித்து இதுவரையில் எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2023 டிக்கெட்டுகள் Paytm Insider - அகமதாபாத், மொஹாலி, தர்மசாலா, டெல்லி, ஹைதராபாத் மற்றும் லக்னோ.
ஐபிஎல் 2023 டிக்கெட்டுகள் RCB-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் - பெங்களூரு
ஐபிஎல் 2023 டிக்கெட்டுகள் Bookmyshow - மும்பை, ஜெய்ப்பூர் மற்றும் கவுகாத்தி
சென்னை மற்றும் கொல்கத்தாவிற்கான ஐபிஎல் 2023 டிக்கெட்டுகள் பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ