SRHvsLSG: வானத்துக்கும் பூமிக்கும் குதித்த காவ்யா மாறன்..! கடைசி வரை அந்த சந்தோஷம் நீடிக்கலையே
லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் கைல் மெயர்ஸ் விக்கெட்டை எடுத்தவுடன் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த காவ்யா மாறனின் மகிழ்ச்சி, கடைசி வரை நீடிக்கவில்லை.
ஐபிஎல் தொடரின் 10 லீக் போட்டியில் லக்னோ அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் களம் கண்டன. முதல் போட்டியில் படுதோல்வியை சந்தித்த சன்ரைசர்ஸ் அணி, இப்போட்டியில் வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் அணியில் பல மாற்றங்களை செய்தது. அந்த அணியின் முழுநேர கேப்டன் ஏய்டன் மார்கிரம் அணியுடன் இணைந்த நிலையில், புது தெம்புடன் களம் கண்டது. டாஸ் வெற்றி பெற்றவுடன் பேட்டிங்கை தேர்வு செய்த அந்த அணி அதிரடி வாண வேடிக்கைகளை காட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பழைய ஃபார்மையே தொடர்ந்தது. முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர்.
மேலும் படிக்க | IPL 2023 LSG vs SRH: முதலிடத்தில் லக்னோ... ஹைதராபாத்தின் தடுமாற்றம் தொடர்கிறது!
கேப்டன் மார்கிரம் களம் கண்ட முதல் பந்திலேயே அவுட்டாகி கோல்டன் டக் என்ற முறையில் பெவிலியனுக்கு திரும்பினார். இங்கிருந்தே அந்த அணியின் உரிமையாளரான காவ்யா மாறனின் மகிழ்ச்சி சரியத் தொடங்கியது. 20 ஓவர் முடிவில் தட்டு தடுமாறி சன்ரைசர்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்களை எடுத்தது. அடுத்து களம் கண்ட லக்னோ அணி நிதானமான தொடக்கத்தை கண்டது.
அந்த அணியின் அதிரடி மன்னனாக ஜொலிக்கும் கைல் மெயர்ஸ் 13 ரன்களில் ஆட்டமிழக்க, காவ்யா மாறனின் முகத்தில் மகிழ்ச்சி குதூகலித்தது. ஸ்டேடியத்தில் இருந்த அவர், அப்போது துல்லிக் குதித்தார். இதன் பிறகு சன்ரைசர்ஸ் அணி கம்பேக் கொடுக்கும் என அவர் எதிர்பார்த்தார். ஆனால், அது நடக்கவில்லை. மாறாக அந்த அணியின் கேப்டன் கேஎல் ராகுல், குருணால் பாண்டியா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் வெற்றியை பெற்றது.
இதனை பார்த்த காவ்யா மாறன் மீண்டும் சோக நிலைக்கு திரும்பினார். இந்த வெற்றியின் மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது. கடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக அந்த அணி தோல்வியை தழுவியிருந்த நிலையில் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளனர். இதுவரை ஆடிய ஆட்டங்களில் அந்த அணி 2 வெற்றிகளை பெற்றிருக்கிறது. இந்த வெற்றிக்குப் பிறகு காம்பீர் புன் சிரிப்புடன் மைதானத்தில் காணப்பட்டார். சென்னைக்கு எதிரான போட்டியில் காம்பீரின் சோகமான ரியாக்ஷன் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | LSG vs SRH ஐபிஎல் போட்டியில் காவியா மாறனின் கொண்டாட்டம் வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ