CSK vs MI: பினிஷ் செய்த தோனி... மும்பையை மீண்டும் வீழ்த்திய சிஎஸ்கே - ஜொலிக்கும் பிளேஆப் கனவு!
IPL 2023 CSK vs MI: ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கான்வே 44 ரன்களை எடுத்தார்.
IPL 2023 CSK vs MI: நடப்பு ஐபிஎல் தொடரின் 49ஆவது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மாலை நடைபெற்றது. நான்கு முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதியது. இத்தொடரில், முன்னதாக மும்பை வான்கடே மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற போட்டியில், சென்னை அணி வென்றிருந்தது.
இந்த தொடரில், கடந்த சில போட்டிகளாக மும்பை வெற்றிகளையும், சென்னை அணி தோல்விகளையும் பெற்று வந்த நிலையில் இந்த போட்டி மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. போட்டியின் டாஸை வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
பவரான பந்துவீச்சு
சிஎஸ்கே அணி மிரட்டலான பந்துவீச்சில் கிரீன், இஷான் கிஷான், ரோஹித் ஆகியோர் பவர்பிளே ஓவர்களிலேயே ஆட்டமிழந்தனர். இதனால், பந்துவீச்சின் போது பவர்பிளே ஓவர்களில் ரன்களை கசியவிட்ட சிஎஸ்கே இந்த போட்டியில் சிறப்பாக வீசியது எனலாம். பவர்பிளேவில், சஹார், தேஷ்பாண்டே ஆகியோர் தலா 3 ஓவர்களை வீசினர்.
தொடர்ந்து, சூர்யகுமாரும் 26 ரன்களில் ஆட்டமிழக்க, மற்ற வீரர்களும் சொதப்பினர். ஒருபக்கம் வதேரா மட்டும் நிலைத்து நின்று விளையாடி அரைசதம் கடந்தார். அவர் 61 ரன்களை எடுத்து ஆட்டமிழக்க, 20 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி 139 ரன்களை எடுத்தது. சிஎஸ்கே பந்துவீச்சில் பதிரானா 3, தேஷ்பாண்டே, சஹார் 2, ஜடேஜா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
ருதுராஜ் அதிரடி
140 என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி, மும்பை போல் இல்லாமல் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடியது. நான்கு ஓவர்களில் 46 ரன்களை எடுத்திருந்தபோது, ருதுராஜ் கெய்க்வாட் 30 (16) ரன்களில் சாவ்லா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஹானேவும் கான்வே உடன் இணைந்து ரன்களை குவித்தார். இருப்பினும், ரஹானே 21(17) ரன்களில் சாவ்லாவிடம் வீழ்ந்தார். தொடர்ந்து ராயுடு 12(11) வெளியேறினார். அரைசதம் நோக்கி சென்றுகொண்டிருந்தபோது, கான்வே 44(42) ரன்களில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
முடித்து வைத்த தோனி
அப்போது, சிஎஸ்கே அணி வெற்றிக்கு 10 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அந்த சூழலில், கேப்டன் தோனி களமிறங்க மைதானத்தில் கரவொலியில் அதிர்ந்தது எனலாம். இருப்பினும், வெற்றிக்கு 8 ரன்கள் தேவை என்ற நிலையில் தூபே சிக்ஸர் அடித்து, தோனிக்கு ஸ்ட்ரைக் கொடுத்தார். தோனி அதை தனது ஸ்டைலில் கூலாக சிங்கிள் அடித்து ஆட்டத்தை நிறைவு செய்தார். இதன்மூலம், சிஎஸ்கே 17.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 140 ரன்களை எடுத்து, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது. மும்பை பந்துவீச்சு தரப்பில் சாவ்லா 2, ஆகாஷ் மாத்வால், ஸ்டப்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பிளே ஆப் ரேஸில் சிஎஸ்கே
புள்ளிப்பட்டியலில் சென்னை அணி 11 போட்டிகளில் விளையாடி (6 வெற்றி, 4 தோல்வி, 1 முடிவில்லா போட்டி) என 13 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் இருக்கிறது. மும்பை அணி 10 போட்டிகளில் விளையாடி (5 வெற்றி, 5 தோல்வி) என 10 புள்ளிகளுடன் 6ஆவது இடத்தில் உள்ளது.
மேலும் படிக்க | ஒரே ஒரு ஐபிஎல் போட்டியில் விளையாடிய பிரபல கிரிக்கெட் வீரர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ