விராட் கோலியை கிண்டல்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வருட ஐபிஎல் சீசனில் ரிங்கு சிங், ஜெய்ஸ்வால், திலக் வர்மா போன்ற இளம் வீரர்கள் அபாரமாக செயல்பட்டது குறித்து பரவலாக பேசப்பட்டது. மற்றொரு பக்கம் விராட் கோலி லக்னோ அணிக்கு எதிராக விளையாடிபோது, கௌதம் கம்பீர் மற்றும் நவீன் உல் ஹக்  ஆகியோருடன் நடந்த வாக்குவாதம் பற்றி இன்னும் பரவலாக பேசப்பட்டது. நவீன் உல் ஹக், இதை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டு சமூக வலைதளங்களில், குறிப்பாக ஆர்சிபி அணி விளையாடும் போட்டிகளின் போது விராட் கோலியை கிண்டல் செய்து வந்தார்.


மேலும் படிக்க | CSKvsGT: தோனி இறுதிப் போட்டியில் விளையாடுவதில் சிக்கல்..! விதி என்ன சொல்கிறது?


நவீன் உல்ஹக் சிறப்பான பந்துவீச்சு 


இதை சற்றும் விரும்பாத விராட் கோலியின் ரசிகர்கள், லக்னோ அணி விளையாடும் போட்டிகளுக்கு சென்று நவீன் உல் ஹக் நிற்கும் பகுதியில் “விராட் கோலி.. விராட் கோலி” என்று கரகோஷம் எழுப்பியுள்ளனர். முதலில் ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய மைதானங்களில் இதனை செய்தனர். கடைசியாக நடந்த பிளேஆப் எலிமினேட்டர் போட்டியின் போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள ரசிகர்களும் நவீன் உல் ஹக் இடம் சென்று “விராட் கோலி” என்று கரகோஷம் எழுப்பினர். எலிமினெட்டர் போட்டியில் அபாரமாக பந்துவீசி நான்கு முக்கியமான விக்கெடுகளை கைப்பற்றினார் நவீன் உல் ஹக். 


11 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்


இந்த சீசன் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட அவர், எட்டு போட்டிகளில் 11 விக்கெட் கைப்பற்றியுள்ளார. எலிமினேட்டர் போட்டியில் துரதிஷ்டவசமாக லக்னோ அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி தொடரை விட்டே வெளியேறியது. போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த நவீன் உல் ஹக், ரசிகர்கள் தன்னிடம் விராட் கோலி என்று கரகோசம் எழுப்புவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்தார். இது குறித்து அவர் பேசும்போது,  “இந்த வருட ஐபிஎல் சீசன் எனக்கு ஸ்பெஷல் ஆக இருந்தது. தனிப்பட்ட முறையில் நல்ல விதமாகவும் அமைந்தது. பல முன்னணி வீரர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். 


விராட் கோலியிடம் மன்னிப்பு 


மைதானத்தில் ரசிகர்கள் என்னிடம் வந்து யாரேனும் ஒருவர் பெயரை குறிப்பிட்டு கத்தினால் அது என்னை ஒருபோதும் கோபப்படுத்தாது. மாறாக, என் வளர்ச்சிக்கு உதவுகிறது. அப்படி கத்துவதை நான் விரும்புகிறேன். இந்த சூழலில் தான் என்னுடைய அணிக்கு என்னால் இன்னும் நன்றாக செயல்பட முடிகிறது.” என்று நம்பிக்கையாக பேசினார்.


மேலும் படிக்க | லக்னோ அணியை "Luck No" ஆக்கிய இன்ஜினியர்.. யார் இந்த ஆகாஷ் மேத்வால்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ