DC vs RCB: ஆர்சிபி-ஐ புரட்டி எடுத்த சால்ட்... ஒருவழியாக ஒரு இடம் முன்னேறிய டெல்லி!
IPL 2023 DC vs RCB: ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், டெல்லி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தங்களின் 4ஆவது வெற்றியை பதிவு செய்தது.
IPL 2023 DC vs RCB: நடப்பு ஐபிஎல் தொடரின் 50ஆவது லீக் போட்டி டெல்லி கேப்பிடல்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் இன்று (மே 6) இரவு மோதின. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், பெங்களூரு அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
மாஸ் தொடக்கம்
அதன்படி, முதலில் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு, விராட் கோலி - டூ பிளேசிஸ் ஆகியோர் சிறந்த தொடக்கத்தை அளித்தனர். இவரும் இணைந்து 10.3 ஓவர்களில் 82 ரன்களை குவித்து அசத்தினர். டூ பிளேசிஸ் 45 ரன்களில் ஆட்டமிழந்த அடுத்த பந்தே மேக்ஸ்வெல் டக்-அவுட்டாகி ஆட்டமிழந்தார். தொடர்ந்து, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி 55 ரன்கள் எடுத்து 16ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார்.
லோம்ரோர் அதிரடி
மறுமுனையில் லோம்ரோர் அதிரடி காட்டினார். தினேஷ் கார்த்திக் 11 ரன்களில் ஆட்டமிழந்து இம்முறையும் சொதப்பினர். 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 181 ரன்களை எடுத்தது. மிட்செல் மார்ஷ் 2, கலீல் அகமது, முகேஷ் குமார் 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
முரட்டு ஓப்பனிங்
தொடர்ந்து, 182 என்ற இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு, வார்னர் - சால்ட் ஜோடி அதிரடியான தொடக்கத்தை அளித்தது. 5 ஓவர்களில் 50 ரன்களை எடுத்த ஜோடியை ஹேசில்வுட் பிரித்தார். வார்னார் 22 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மிட்செல் மார்ஷ் அடுத்த களமிறங்கினார். ஒருபக்கம் பில் சால்ட் வாணவேடிக்கை காட்ட, மார்ஷ் அவருக்கு துணையாக நின்றார். மார்ஷ் 26 ரன்களில் ஆட்டமிழக்க, ரூசோ அடுத்து களமிறங்கினார்.
ஆட்ட நாயகன் சால்ட்
சால்ட் - ரூசோ பார்டனர்ஷிப்பும் அதிரடியை தொடர ஆர்சிபியின் வெற்றி நம்பிக்கை தகர்ந்தது. அதன்படி, சால்ட் 45 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் என 87 ரன்களை குவித்து 16ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். கடைசியில் 16.4 ஓவர்களிலேயே டெல்லி இலக்கை அடைந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. பில் சால்ட் ஆட்ட நாயகனாக தேர்வானார்.
ஒரு இடம் முன்னேறிய டெல்லி
புள்ளிப்பட்டியலில், பெங்களூரு அணி 10 போட்டிகளில் (5 வெற்றி, 5 தோல்வி) என 10 புள்ளிகளுடன் 10ஆவது இடத்திலும், டெல்லி அணி 10 போட்டிகளில் (4 வெற்றி, 6 தோல்வி) என 8 புள்ளிகளுடன் 9ஆவது இடத்திலும் உள்ளன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ