IPL 2023 DC vs PBKS: நடப்பு ஐபிஎல் தொடரின் 59ஆவது லீக் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று இரவு நடைபெற்றது. டெல்லி கேப்பிடல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் மோதிய இப்போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, பஞ்சாப் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மோசமான பஞ்சாப் பேட்டிங்


ஆனால், பஞ்சாப் அணியின் பேட்டிங்கில் பிரப்சிம்ரன் சிங்கை தவிர்த்து வேறு யாரும் சோபிக்கவில்லை. அவர் ஓப்பனிங்கில் தவாணுடன் களமிறங்கினார். தவாண் 7, லிவிங்ஸ்டன் 4, ஜித்தேஷ் சர்மா 5 ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழக்க சாம் கரன் 20 ரன்கள் எடுத்து சற்று நேரம் தாக்குப்பிட்டிதார். தொடர்ந்து, ஹர்பிரீத் ப்ரர் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். 



பிரப்சிம்ரன் சதம்


ஆனால், ஒருபுறம் விக்கெட் சரிவதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட்டார், பிரப்சிம்ரன் சிங். அவர் 65 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என 103 ரன்களை குவித்தார். பிரப்சிம்ரன் சிங்கின் சதம் மட்டுமே பஞ்சாபை இந்த ஸ்கோருக்கு எடுத்துவந்தது. 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 167 ரன்களை மட்டும் எடுத்தது. இஷாந்த் சர்மா 2, அக்சர் படேல், பிரவின் தூபே, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். 


மேலும் படிக்க | IPL 2023: பிளேஆப் ரேஸில் லக்னோ... வெளியேறும் ஹைதராபாத்!


பவர்பிளேவில் அசத்தல்


தொடர்ந்து, 168 ரன்கள் என்ற இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு நல்ல தொடக்கம் அமைந்தது. கேப்டன் வார்னரும், பில் சால்ட்டும் பஞ்சாப் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டனர். பவுர்பிளேவில் 69 ரன்களை எடுத்திருந்த டெல்லி அணிக்கு, அதன்பின் அனைத்தும் தவறாக முடிந்தது. 


பவர்பிளேவுக்கு பின் சொதப்பல்


பில் சால்ட் 21, மிட்செல் மார்ஷ் 3, ரூசோ 5 என அடுத்தடுத்து ஆட்டமிழக்க பஞ்சாப் அணிக்கு நம்பிக்கை துளிர்விட்டது. ரூசோ ஆட்டமிழந்த அதே 9ஆவது ஓவரில் செட்டிலாகி அரைசதம் கடந்த வார்னரும் 54 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதையடுத்து, அக்சர் படேல் 1, மணீஷ் பாண்டே 0 என சொதப்ப அமான் கானும், தூபேவும் சிறிது ஓவர்கள் தாக்குபிடித்தனர். 


ஹர்பிரீத் 4 விக்கெட்டுகள் 


இந்த ஜோடி, சுமார் 5 ஓவர்களில் 20 ரன்களை எடுத்து நிதானமாக விளையாடினர். அமான் கான் 16, தூபே 16 ரன்களில் ஆட்டமிழக்க டெல்லி அணி 20 ஓவர்களில் 136 ரன்களை மட்டுமே எடுத்து, 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. குல்தீப் 10 ரன்களுடனும், முகேஷ் குமார் 6 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பஞ்சாப் பந்துவீச்சில் ஹர்பிரீத் 4 விக்கெட்டுகளையும், நாதன் எல்லீஸ், ராகுல் சஹார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 



இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி 12 புள்ளிகளுடன் 6ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அந்த அணி 12 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளையும், 6 தோல்விகளையும் பெற்றுள்ளது. டெல்லி அணி 8 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் நீடிக்கிறது. அந்த அணி 12 போட்டிகளில் 8 தோல்விகளையும், 4 வெற்றிகளையும் பெற்றுள்ளன. 


மேலும் படிக்க | சூரியகுமார் யாதவின் அதிரடி: புகழ்ந்த ரோகித் ஷர்மா
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ