IPL 2023: ராஜஸ்தான் தோல்வியால் 10 அணிகளுக்குமே பிளே ஆஃப் வாய்ப்பு : சன்ரைசர்ஸ் குதூகலம்
இந்த ஆண்டு ஐபில் போட்டியில் இதுவரை பிளே ஆஃப் வாய்ப்பை ஏறத்தாழ உறுதி செய்த அணியாக குஜராத் டைட்டன்ஸ் அணி மட்டுமே உள்ளது. மற்றபடி அனைத்து அணிகளுக்கும் இப்போதைய சூழலில் பிளே ஆஃப் வாய்ப்பு இருக்கிறது.
நடப்பு ஐபிஎல் தொடர் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு போட்டியும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை வேறொரு லெவலுக்கு எடுத்துச் செல்லும் விதமாக அமைந்திருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியும் இதற்கு ஏற்ப அமைந்திருந்தது. இந்த போட்டியில் தோல்வியடைந்திருந்தால் சன்ரைசர்ஸ் அணிக்கான பிளே ஆஃப் வாய்ப்பு என்பது மிகவும் மங்கிப்போய் இருக்கும். ஆனால், அதற்கு இடம் கொடுக்காமல் ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயத்த 214 ரன்கள் இலக்கை அபாரமாக விளையாடி சேஸிங் செய்தது.
சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்
ஜெய்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் இறங்கிய ராஜஸ்தான் அணி அதிரடியாக விளையாடி 214 ரன்கள் எடுத்தது. பட்லர் 95 ரன்களும், சாம்சன் 66 ரன்களும் குவித்தனர். இமாலய இலக்கை நிர்ணயித்துவிட்டதால் ராஜஸ்தான் அணி எப்படியும் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையில் பீல்டிங் இறங்கினர். ஆனால், சன்ரைசர்ஸ் அணியின் இந்த முறை வேறு மாதிரியாக இருந்தது. ஆரம்பமே அதிரடியாக விளையாடி ஸ்கோர்களை குவித்தனர்.
மேலும் படிக்க | 'ரோகித் இது நல்லா இல்ல போய்டுங்க' கவாஸ்கர் காட்டமாக சொன்ன விஷயம்
சஞ்சு சாம்சனின் தவறு
இருப்பினும் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்து ஓவர் கொடுப்பதில் ராஜஸ்தான் கேப்டன் சாம்சன் செய்த தவறுகள் சன்ரைசர்ஸ் அணிக்கு வாய்ப்பாக அமைந்தது. குறிப்பாக இறுதி இரண்டு ஓவர்களில் அனுபவம் இல்லாத ஓவர்களுக்கு கொடுத்து சொதப்பினார். 2 ஓவர்களில் 42 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. அப்போது 19 ஓவரை குல்தீப்புக்கு கொடுத்து 25 ரன்களை வாரி வழங்கினார். கடைசி ஓவரை சந்தீப் சர்மாவுக்கு வீச, அவரும் சொதப்பினார். கடைசி பந்தை நோபால் வீசாமல் இருந்திருந்தால் கூட வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், எதிர்பாராத விதமாக அவர் நோபால் வீச கடைசி பந்தில் சன்ரைசர்ஸ் அணி சிக்சர் அடித்து வெற்றி பெற்றது.
10 அணிகளுக்கும் வாய்ப்பு
இதன் மூலம் 4வது வெற்றியை பெற்ற சன்ரைசர்ஸ் அணி, பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது. புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தாலும், இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் அந்த அணிக்கான பிளே ஆஃப் வாய்ப்பு சற்று இருக்கிறது. அதேநேரத்தில் அதிக ரன்ரேட்டும் அந்த அணிக்கு தேவைப்படுகிறது. ஒருவேளை ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்தால் சன்ரைசர்ஸ் அணிக்கான வாய்ப்பு என்பது சற்று குறைவாகியிருக்கும். ஆனால், இப்போதைய சூழலில் 10 அணிகளுக்குமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு இருகிறது. இனி வரும் போட்டிகளில் அந்த அணிகள் விளையாடுவதை பொறுத்து, தொடரில் இருந்து வெளியேறுவதும், நீடிப்பது முடிவாகும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ