IPL 2023: பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் அஸ்வின் விளையாடாதது ஏன்?
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியில் ரவிச்சந்திரன் நீக்கப்பட்டுள்ளார். அவர் நீக்கத்துக்கான காரணம் என்ன என்பது குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் - ஆர்ஆர் மோதல்
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் போட்டி தர்மசாலாவில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு என்பது மங்கிவிட்டது. குறிப்பாக ராஜஸ்தான் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றுஉ, மற்ற அணிகளின் முடிவு சாதகமாக இருந்தால் ஒரு வாய்ப்பு இருக்கிறது. மற்றபடி வாய்ப்பு என்பது மிக கடினம் தான். ஆர்சிபி, மும்பை அணிகள் அடுத்தடுத்த போட்டிகளில் தோற்க வேண்டும். அந்த தோல்விகளும் குறிப்பிட்ட வித்தியாசத்தில் இருந்தால் மட்டுமே ராஜஸ்தானுக்கு வாய்ப்பு.
ரவிச்சந்திரன் அஸ்வின் நீக்கம்
அதற்கும் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே, அந்த கணக்குகள் ஒத்துவரும். இப்படியான இடியாப்ப சிக்கலில் தான் ராஜஸ்தான் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு முதுகுபிடிப்பு ஏற்பட்டிருப்பதால் அணியில் சேர்க்கப்படவில்லை என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அஸ்வின் இல்லாததால் நவ்தீப் சைனி பிளேயிங் லெவனில் இடம்பிடித்துள்ளார்.
பஞ்சாப் கிங்ஸூக்கு வாய்ப்பு?
ராஜஸ்தான் அணிக்கு கூட ஒரு வாய்ப்பு இருக்கிறது. பஞ்சாப் அணிக்கு இந்த போட்டியில் வெற்றி பெற்றாலும் மிகமிக சொற்ப அளவிலான வாய்ப்பு மட்டுமே இருக்கிறது என்று சொல்லலாம். ஏனென்றால் அந்த அணியின் ரன்ரேட் என்பது மைனஸில் இருக்கிறது. இதனால் ராஜஸ்தான் அணியை வீழ்த்தினால் கூட பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு அந்த அணிக்கு இல்லை. மற்ற அணிகளின் முடிவுகள் கூட பஞ்சாப் அணிக்கு உதவாது என்பதால் ஏறத்தாழ சம்பிரதாயமாகவும், புள்ளிப்பட்டியலில் கவுரமான இடத்தை பிடிக்கும் வகையிலுமே அந்த அணி இந்தப் போட்டியில் விளையாடுகிறது.
ராஜஸ்தான் பந்துவீச்சு
இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் வெற்றி பெற்று பவுலிங் தேர்வு செய்தார். பிளேயிங் லெலவனைப் பொறுத்தவரை பஞ்சாப் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ராஜஸ்தான் பிளேயிங் லெவனில் கடும் விமர்சனத்தால் சில போட்டிகளில் விளையாடாமல் இருந்த ரியான் பராக் மீண்டும் அணிக்குள் வந்திருக்கிறார். அதேபோல் நவ்தீப் சைனியும் பிளேயிங் லெவனில் இடம்பிடித்துள்ளார்.
பஞ்சாப் அணி விவரம்: ஷிகர் தவான், பிரப்சிம்ரன் சிங், அதர்வா தய்டே, லிவிங்ஸ்டன், சாம் கரண், ஜித்தேஷ் சர்மா, ஷாரூக் கான், ஹர்ப்ரீத் ப்ரார், ராகுல் சஹர், ரபாடா, அர்ஷ்தீப் சிங்
ராஜஸ்தான் அணி விவரம்: ஜெய்ஸ்வால், பட்லர், சஞ்சு சாம்சன், தேவ்தத் படிக்கல், ஹெட்மயர், ரியான் பராக், ஆடம் ஷாம்பா, போல்ட், நவ்தீப் சைனி, சந்தீப் சர்மா, சாஹல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ