Chennai Super Kings vs Royal Challengers Bangalore: இந்தியன் பிரீமியர் லீக் 2023 தொடரின் 24வது ஆட்டத்தில் ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மற்றும் நான்கு முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸை (சிஎஸ்கே) அணிகள் இன்று (ஏப்ரல் 17, திங்கட்கிழமை) இரவு நடைபெறவுள்ள ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பெங்களூரில் உள்ள எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் மோதுகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐபிஎல் 2023 புள்ளிகள் பட்டியல் -சென்னை அணி 
ஐபிஎல் 2023 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 ஆட்டங்களில் இரண்டில் வெற்றி பெற்றுள்ளது. சிஎஸ்கே தனது கடைசி ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. தற்போது சென்னை அணி ஐபிஎல் 2023 புள்ளிகள் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. நான்கு ஆட்டங்களில் 65.66 சராசரி மற்றும் 155.11 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 197 ரன்களை குவித்துள்ளதால், ருதுராஜ் கெய்க்வாட் சிஎஸ்கே அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சிஎஸ்கே அணி இன்றைய ஆட்டத்தில் ஆர்சிபியை தோற்கடித்து மீண்டும் வெற்றிப் பாதைக்கு முன்னேறும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு. 


மேலும் படிக்க: ஓவரா ஆட்டம் போட்டு கடுப்பேற்றிய விராட் கோலி - கை கொடுக்காமல் தவிர்த்த கங்குலி


ஐபிஎல் 2023 புள்ளிகள் பட்டியல்- பெங்களூர் அணி
இந்த ஐபிஎல் 2023 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை விளையாடிய 4 ஆட்டங்களில் இரண்டில் வெற்றி பெற்றுள்ளது. ஆர்சிபி தனது கடைசி ஆட்டத்தில் 23 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது. தற்போது ஐபிஎல் 2023 புள்ளிகள் அட்டவணையில் ஏழாவது இடத்தில் இருக்கிறது. பெங்களூரு அணியில் விராட் கோலி நல்ல ஃபார்மில் உள்ளார். நான்கு ஆட்டங்களில் 71.33 சராசரியுடன் 214 ரன்களைக் குவித்துள்ளார். அவரின்ஸ்ட்ரைக் ரேட் 147.58 ஆக உள்ளது. எனவே சிஎஸ்கேக்கு எதிராக விராட் கோலி அதிரடி காட்டுவார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். ஆர்சிபி தனது வெற்றியின் பயணத்தை தொடரும் முனைப்பில் களம் இறங்கும்.


சென்னை vs பெங்களூர் நேருக்கு நேர் நிலவரம்: 
இரு அணிகளுக்கும் விளையாடிய 30 ஆட்டங்களில், சிஎஸ்கே 19 வெற்றியும், பெங்களூர் 10 வெற்றிகளும் பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு எட்டவில்லை. 


>> நேருக்கு நேர் மோதிய ஆட்டம் - 30
>> சென்னை சூப்பர் கிங்ஸ் - 19
>> ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் -10



இன்றைய சிஎஸ்கே vs ஆர்சிபி போட்டி விவரங்கள்:
>> ஐபிஎல் 2023: போட்டி 24, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs சென்னை சூப்பர் கிங்ஸ்.
>> இடம்: எம் சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு
>> தேதி & நேரம்: திங்கள், ஏப்ரல் 17, மாலை 7:30
>> டெலிகாஸ்ட் & ஸ்ட்ரீமிங் விவரங்கள்: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஜியோசினிமா


மேலும் படிக்க: 'நாங்கள் அதனால் தான் தோற்றோம்' - கேப்டன் தோனி கூலாக சொன்னது என்ன?


எம்.சின்னசாமி மைதானத்தின் புள்ளி விவரங்கள்:
எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் புள்ளிவிவரங்கள் மற்றும் பதிவுகள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக உள்ளது. அதேநேரத்தில் இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணி அதிக வெற்றிகளை குவித்துள்ளது. இந்த மைதானத்தில் 84 ஆட்டங்களில் 34 வெற்றிகள் முதலில் பேட்டிங் செய்யும் அணி பெற்றுள்ளது. மறுபுறம் இரண்டாவது பேட்டிங் செய்த அணி பெற்ற வெற்றிகள் 46. நான்கு போட்டிகள் முடிவுகள் எட்டப்படவில்லை. டாஸ் வென்ற அணிகள் சேஸிங் செய்வதை விரும்பும். ஐபிஎல் 2023ல், மூன்று ஆட்டங்களில் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணிகள் வெற்றி பெற்றுள்ளன.


>> விளையாடிய போட்டிகள் - 84


>> முதலில் பேட்டிங் செய்த அணிகள் பெற்ற வெற்றிகள் - 34


>> இரண்டாவது பேட்டிங் அணிகள் பெற்ற வெற்றிகள் - 46


>> சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் - 169.7


>> சராசரி பவர்பிளே ஸ்கோர் - 45.7


>> சராசரி டெத் ஓவர்கள் ஸ்கோர் -53.9


மேலும் படிக்க: தோனி - சச்சின் மாதிரி நினைச்சுக்காதீங்க - சேவாக் அட்வைஸ்


CSK  vs RCB: அதிக மற்றும் குறைந்த ரன்கள் விவரங்கள்:


>> சிஎஸ்கேக்கு எதிராக ஆர்சிபியின் அதிகபட்ச ஸ்கோர் - 205
>> ஆர்சிபிக்கு எதிராக சிஎஸ்கே எடுத்த அதிகபட்ச ஸ்கோர் - 215
>> சிஎஸ்கேக்கு எதிராக ஆர்சிபியின் குறைந்த ரன்கள் - 70 
>> ஆர்சிபிக்கு எதிராக சிஎஸ்கே அடித்த குறைந்த ரன்கள் - 71


இன்றைய போட்டியில் களம் இறங்கும் சாத்தியமான 11 பேர் (கணிப்பு):


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி): விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), வெய்ன் பார்னெல், வனிந்து ஹசரங்க, ஹர்ஷல் படேல், வைஷாக் விஜய்குமார், முகமது சிராஜ்.


சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே): டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ். தோனி (கேப்டன் / விக்கெட் கீப்பர்), மிட்செல் சான்ட்னர், மகேஷ் தீக்ஷனா, ஆகாஷ் சிங், துஷார் தேஷ்பாண்டே. 


மேலும் படிக்க: குஜராத்-பஞ்சாப் போட்டியில் 8 பெரிய சாதனைகளை செய்த ஷுப்மான் கில்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ