தோனி - சச்சின் மாதிரி நினைச்சுக்காதீங்க ரிங்கு சிங்...உங்களால் இதை மீண்டும் செய்ய முடியாது - சேவாக்

Virender Sehwag on Rinku Sing: ரிங்கு சிங் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ஆடியதுபோல் அவரால் மீண்டும் ஒருமுறை விளையாட முடியாது என தெரிவித்திருக்கும் சேவாக், தோனி மற்றும் சச்சின்போல் நினைத்துக் கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 15, 2023, 10:38 AM IST
தோனி - சச்சின் மாதிரி நினைச்சுக்காதீங்க ரிங்கு சிங்...உங்களால் இதை மீண்டும் செய்ய முடியாது - சேவாக் title=

கொல்கத்தா அணியின் ஸ்டார் பிளேயராக உருவெடுத்திருக்கும் ரிங்கு சிங், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் அதிரடியாக விளையாடி 28 ரன்களை சேஸிங் செய்து உலக கிரிக்கெட்டை திரும்பி பார்க்க வைத்தார். ஐபிஎல் வரலாற்றில் சேஸிங்கில் கடைசி ஓவரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக பதிவாகி, ரிங்கு சிங் மகத்தான சாதனையை படைத்தார். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அவருக்கு உலகம் முழுவதும் இருந்து முன்னணி கிரிக்கெட் பிரபலங்களிடம் இருந்து வாழ்த்துகள் வந்து கொண்டே இருக்கிறது. இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் சேவாக்கும் ரிங்கு சிங்கிற்கு வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார். 

மேலும் படிக்க | குஜராத்-பஞ்சாப் போட்டியில் 8 பெரிய சாதனைகளை செய்த ஷுப்மான் கில்

இது குறித்து சேவாக் பேசும்போது, ரிங்கு சிங் விளையாடிய விதத்தை பார்க்கும்போது மிகவும் வியப்பாக இருந்தது. அவருடைய முயற்சி மற்றும் திறமையினால் மட்டுமே இது சாத்தியமானது. மறுபுறம் பந்துவீச்சாளர் யார் என்று பார்க்கும்போது, பல ஆண்டுகளாக ரிங்கு சிங்குடன் விளையாடிய யாஷ் தயால். அவர் கடைசி ஓவரை வீச வரும்போது ரிங்கு சிங் மன ரீதியாக மிகவும் தைரியமாகவும் உற்சாகமாகவும் இருந்திருப்பார். யாஷ் எப்படி பந்துவீசுவார் என்பது ரிங்கு சிங்கிற்கு நன்றாக தெரிந்திருக்கும். அந்த ஓவரை அல்சாரி ஜோசப் வீசியிருந்தால் நிச்சயம் முடிவு வேறாக இருந்திருக்கும். 

இது ரிங்கு சிங்கிற்கு நன்றாக தெரியும். ஏனென்றால் அல்சாரி ஜோசப்பை அவரால் இப்படி அடித்திருக்க முடியாது. இந்த இடத்தில் சிறிய அளவிலாவது அதிர்ஷ்டம் தேவை. தொடர்ச்சியாக 5 சிக்சர்களை விளாசிய ரிங்கு சிங், இதேபோல் தொடர்ச்சியாக 6 சிக்சர்களை அடித்து இந்த சாதனையை அவரால் முறியடிக்க முடியும் என்று இனிமேல் சொல்ல முடியாது. சேஸிங்கில் அப்படி அவரால் செய்ய முடியாது, அப்படி ஒரு வாய்ப்பும் அமையாது. இது முடிந்த ஒன்று. அவருக்கான நாளாக அமைந்துவிட்டது. 90களில் சச்சின் இருந்தால் இந்தியா வெற்றி பெறும் என்ற நம்பிக்கையும், அதன்பிறகு தோனி இருந்தால் போதும் இந்தியா வெற்றி பெறும் என்ற நம்பிக்கையும் இருந்தது.

அதனைப்போல் கொல்கத்தா அணிக்கு ரஸ்ஸல் இருந்தால் அணி வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது என்ற நிலை, இப்போது ரிங்கு சிங்கிற்கு கிடைத்திருக்கிறது. ஆனால், அவரால் தோனி - சச்சின் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என கருதவில்லை. ஆனால் ரிங்கு சிங்குக்கு இப்போது நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதனை பயன்படுத்திக் கொண்டால் நிச்சயம் மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது. அவருடைய பேட்டிங்கில் சில முன்னேற்றங்களை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | IPL 2023: கொல்கத்தாவை இந்த முறை காக்க தவறினார் ரிங்கு சிங்... ஹைதராபாத் வெற்றி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News