ஐபிஎல் தொடரில் எல்லாருடைய கணிப்பையும் தவிடு பொடியாக்கி டி20 கிரிக்கெட்டுக்கு இன்னொரு வடிவத்தை கொடுத்திருக்கிற அணி குஜராத் டைட்டன்ஸ். இந்த அணியில் தற்போது தமிழகத்தைச் சேர்ந்த இடதுகை பேட்ஸ்மேன் இளம் வீரர் சாய் சுதர்சன் முக்கிய பேட்ஸ்மேனாக உயர்ந்திருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டியில் 96 ரன்கள் விளாசி, தன் திறமையின் மூலம் எல்லோரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | CSK Champion: 5வது முறையாக சிஎஸ்கே சாம்பியன்..! தோனி ஆனந்த கண்ணீர்


இது குறித்து அவர் பேட்டி ஒன்றில் பேசும்போது, " என்னுடைய முந்தைய அனைத்து ஆட்டங்களிலும் நான், கில் உடன் இணைந்து விளையாடினேன். அவர் வேகமாக ரன்கள் எடுத்தார். நான் இந்த முறை சகாவுடன் இணைந்து விளையாடினேன். ரன் விகிதம் சரிந்தது. நாங்கள் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து இருந்தோம். எனவே அடிப்பதற்கான வாய்ப்புகளை எடுப்பது நல்லது என்று நினைத்தேன். நான் அந்த நோக்கத்துடன் விளையாடினேன். நான் எதையும் வித்தியாசமாகச் செய்யவில்லை. ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்பாக நாங்கள் எங்கள் ஆயத்த முகாம்களை நடத்தினோம். 


அதில் நாங்கள் எங்களைப் பற்றியே நிறைய கற்றுக் கொண்டோம். மேலும் அணியில் எங்களது பங்கு என்னவாக இருக்கும்? நாங்கள் எவ்வாறு சிறந்த பங்களிப்பது? என்று தெளிவாகிக் கொண்டோம். ஹர்திக் பாண்டியா போன்ற கேப்டன் கிடைத்தது ஒரு வரப்பிரசாதம். அவர் உங்களை வெளிப்படுத்துவதற்கான தளத்தையும் தன்னம்பிக்கையும் தருகிறார். அன்றைய நாள் ஆட்டத்தைப் பொருட்படுத்தாமல் அவர் உங்களை மிகவும் வசதியாக உணர வைக்கிறார். என்னுடைய கடைசி இன்னிங்ஸில் கூட நான் அடித்திருக்க வேண்டிய சில பந்துகளைத் தவறவிட்டேன். ஆனால் அவர் என்னால் இன்னும் நிறைய பந்துகளை அடித்து சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தார். 


வெவ்வேறு போட்டிச் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு எப்படி விளையாடுவது? என்று நான் பயிற்சியாளர் கிரிஸ்டனிடம் இருந்து கற்றுக் கொள்கிறேன். பதிரனா பந்தைத் தாழ்வாக வீசுகிறார். அதனால் நான் இன்னும் கீழே சென்று விளையாடினேன். நான் இதை மிகவும் மனப்பூர்வமாக திட்டமிட்டு செய்யவில்லை. அதை எப்படி என்று உங்களுக்கு விளக்க முடியாது. இது இயற்கையாகவே நடந்தது. நான் இப்பொழுது சிறப்பாக விளையாடி இருக்கலாம். ஆனால் நான் மிடில் மற்றும் டெத் ஓவர்களில் எனது ஆட்டத்தை இன்னும் மேம்படுத்த வேண்டும்" என தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | CSK Equalls MI: மும்பை அணியின் 5 முறை ஐபிஎல் பட்டம் சாதனையை சமன் செய்த சிஎஸ்கே! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ