கேப்டன் எம்எஸ் தோனிக்கு அடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த ஒருவர், ரசிகர்களின் அதிக அன்பைப் பெறுகிறார் என்றால் அது சுரேஷ் ரெய்னாதான். தோனி தல என்றால், ரெய்னா சின்ன தல. அவர்கள் இருவரும் தங்கள் ஐபிஎல் வாழ்க்கையை சென்னை சூப்பர் கிங்ஸில் தொடங்கினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிஎஸ்கே மீது இரண்டு வருட தடை இருந்தபோது, ​​இருவரும் வேறு வேறு அணிக்கு போனாலும் மீண்டும் சென்னை அணியில் அவர்கள் ஒன்றிணைந்தனர். அப்பிடியிருக்க, அதே சிஎஸ்கே முகாமில் இருந்த ஒரு வீரர், சிஎஸ்கே குறித்த தனது அனுபவம் முழுவதையும் பகிர்ந்துள்ளார். அதில், தோனியும், ரெய்னாவும் நிறைந்துள்ளனர். 


சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இரண்டு சீசனில் மட்டுமே விளையாடியவர் ராபின் உத்தப்பா. அதில், 2021ஆம் ஆண்டு கோப்பையை வென்ற அணியில் முக்கிய பங்கை வகித்திருந்தார். தற்போது, அவர் ஓய்வுபெற்றிருந்தாலும், சிஎஸ்கே அணியுடனான அனுபவத்தை அற்பும் என்று வர்ணிக்கிறார். 


மஞ்சள் ஜெர்சிக்காக காத்திருந்தேன்


ஜியோ சினிமா ஒரிஜினல் தொடரான 'Legends Loung' இன் புதிய எபிசோடான 'Success Mantra' சமீபத்தில் வெளியானது. அதில்தான், ராபின் உத்தப்பா சிஎஸ்கே அணியுடனான நாட்கள் குறித்தும், அதன் அனுபவம் குறித்தும் பகிர்ந்து கொண்டார். 


2021ஆம் ஆண்டு சென்னை அணிக்கு வந்த ராபின் உத்தப்பா,  அந்த அணியின் தகவல் தொடர்பு, நெருக்கம் ஆகியவை மூலம் தனித்துவமான அணியாக இருந்ததாக தெரிவித்தார்."பிளேயிங் லெவனில் இல்லாத வீரர்களின் பாதுகாப்பு மற்றும் நெருக்கமான உணர்வு மூலம் ஒரு சிறந்த சூழ்நிலையை உருவாக்கி கொடுத்தது" என்று உத்தப்பா விளக்கினார்.



மேலும் படிக்க | என்னப்பா பந்து போடுறா? அர்ஷ்தீப் சிங்கை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்!


அந்த 'மஞ்சள் ஜெர்சியை அணியை நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனாலும், நான் அணியில் இருந்து ஒதுக்கப்பட்டவனாக உணரவேயில்லை. 12 ஆட்டங்கள் நீங்கள் பெஞ்சில் இருப்பது எளிதானது அன்று. அதுவும் குறிப்பாக, நீங்கள் 195 போட்டிகளில் விளையாடிய பிறகு.


செல்லக் குழந்தை நான்


வீரர்களின் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரையும் சிஎஸ்கே அணியின் ஒரு பகுதியாகவே அது கருதுகிறது. நாங்கள் குழந்தைகளுடன் பயணம் செய்தபோது, குழந்தை பாதுகாவலர்கள் அணியில் ஒரு பகுதியாக இருந்ததைப் போல உணர வைக்கப்பட்டனர். 2021இல் நாங்கள் வென்றபோது, அணி புகைப்படத்தில் ஒரு பகுதியாக குழந்தை பாதுகாவலர்களும் இருந்தனர்," என்று உத்தப்பா கூறினார்.


அதே நிகழ்ச்சியில், ரெய்னா,"சிஎஸ்கே நிறைய போனஸ் கொடுக்கும்" என்று கூறிவிட்டு இடையிடையே சிரித்தார். "நீங்க எப்போதும் அவர்களுக்காக ஏதாவது சிறப்பாக செய்யணும்னு தோன்றும். நீங்கள் செல்லக் குழந்தையைப் போல் அங்கு உணர்வீர்கள்" என்றார். 


மேலும் படிக்க | IND vs NZ: தோனி ஊரில் தோனியாகவே மாறிய இளம் வீரர் - அசரவைக்கும் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ