Umran Khan: நடப்பு ஐபிஎல் சீசனில் உம்ரான் மாலிக்கை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதிகப் போட்டிகளில் பிளேயிங் லெவனில் சேர்த்துக்கொள்ளவில்லை. இதனால், நேற்றைய பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின் டாஸில் ஹைதராபாத் அணி கேப்டன் மார்க்ரம்மிடம், உம்ரான் மாலிக் ஒரங்கட்டப்பட்டது குறித்து கேட்கப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனக்கு உறுதியாக தெரியவில்லை என்று மார்க்ரம் அதற்கு பதிலளித்தார். "திரைக்குப் பின்னால் அவருக்கு என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை," என்றார். மேலும், அவர் எங்கள் அணியின் எக்ஸ்-ஃபேக்டர் எனவும் குறிப்பிட்டார். மார்க்ரம்மின் இந்த பதில் பல மூத்த வீர்ரகளிடமும், வல்லுநர்களிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 


முறையாக கையாளப்படவில்லை


அந்த வகையில், மார்க்ரம்மின் இந்த பேச்சு குறித்து முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் கருத்து தெரிவித்துள்ளார். உம்ரான் மாலிக்கை ஹைதராபாத் அணி போதுமான அளிவில் பயன்படுத்தவில்லை என்றும் கூறினார். ஜாகீர் கான், "உம்ரான் மாலிக் ஹைதராபாத் அணியால் சரியாகக் கையாளப்படவில்லை என்று நான் நினைக்கிறேன். அவருடைய திறனை அந்த அணி பயன்படுத்தியிருக்க வேண்டும்" என்றார். 


மேலும் படிக்க | 1490 நாளுக்கு பின் சதம்... உடனே விராட் போட்ட வீடியோ கால் - அந்த பக்கம் யார் தெரியுமா?


பயிற்சியாளர்களின் முடிவா?


காஷ்மீரைச் சேர்ந்த இளைஞரான உம்ரான் கடந்த ஆண்டு இதே அணியில் விளையாடி ஐபிஎல் தொடரில் பெரும் திருப்புமுனையைப் பெற்றார். தொடர்ந்து 150 கிமீ வேகத்தில் வீசும் இவர், கடந்த தொடரில் 14 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை எடுத்தார். இந்த சீசனில், மாலிக் பாதி ஆட்டங்களில் விளையாடி 10.35 என்ற எகானமியில் ஐந்து விக்கெட்டுகளை எடுத்துள்ளார். தலைமை பயிற்சியாளர் பிரையன் லாரா, வேகப்பந்துவீச்சு பயிற்சியாளர் டேல் ஸ்டெய்ன் ஆகியோர் உம்ரான் மாலிக்கை பெஞ்ச்சில் அமரவைத்தனர்.


ஜாகீர் அறிவுரை


"நீங்கள் ஒரு இளம் பந்துவீச்சாளர் குறித்து யோசிக்கும்போது, ​​அவருக்கு ஏதுவான சூழலையும், உதவியையும் உருவாக்குவது குறித்தும் யோசிக்க வேண்டும். அந்த வழிகாட்டுதல் அவருக்கு தேவை" என்று ஜியோசினிமாவின் நிபுணர் குழுவின் ஒருவரான ஜாகீர் கான் கூறினார். "துரதிர்ஷ்டவசமாக, இது சன்ரைசர்ஸ் அணியால் உருவாக்கப்படவில்லை. அதனால்தான் இந்த ஆண்டு அவர் இத்தகைய சூழலை பெற்றுள்ளார்" என்றார். 


சன்ரைசர்ஸ் அணி ஏற்கெனவே, பிளேஆப் ரேஸில் இருந்து வெளியேறிவிட்டது. நேற்றைய பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், கிளேசன் மட்டுமே அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் சதம் அடித்தும் இலக்கு 187 ஆக தான் இருந்தது.


பந்துவீச்சிலும் பெரிய நெருக்கடி ஏதும் கொடுக்கப்படவில்லை. விராட் கோலி சதம் அடித்தார். டூ பிளேசிஸ் - விராட் ஜோடி 172 ரன்களை எடுத்தது. ஒட்டுமொத்த அணியாக இணைந்து விளையாட சன்ரைசர்ஸ் தடுமாறியது. இந்த அணி தனது கடைசி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் உடன் நாளை மறுதினம் மோதுகிறது. 


மேலும் படிக்க | PBKS vs RR: ஹல்லா போல்... கொஞ்சம்... இன்றைய போட்டியில் மாஸ் காட்டப்போகும் பவுலர்கள் யார் யார்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ