IPL 2023 DC vs CSK: நடப்பு ஐபிஎல் தொடரின் 67ஆவது லீக் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடக்கிறது. சென்னை - டெல்லி அணிகள் மோதும் இந்த போட்டியுடன் மொத்தம் நான்கு லீக் போட்டிகளே உள்ளன. டெல்லி ஏற்கெனவே, தொடரில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், சென்னை அணி பிளேஆப் சுற்றுக்கு தகுதிபெற இதில் வெற்றிபெற்ற ஆக வேண்டும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெற்றிபெறுமா சிஎஸ்கே?


தற்போது சென்னை அணி 13 போட்டிகளில் விளையாடி 7 வெற்றி, 5 தோல்வி, 1 முடிவில்லாத போட்டி என மொத்தம் 15 புள்ளிகளுடன் +0.381 என்ற நெட் ரன்ரேட்டுடன் இரண்டாமிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் இருந்தாலும் அதன் பிளேஆப் கனவு ஊசலாட்டத்தில் தான் உள்ளது. லக்னோ அணி 15 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும், பெங்களூரு, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட அணிகள் 14 புள்ளிகளுடன் இருப்பதால், சென்னை அணி இன்றைய போட்டியை வென்றே ஆக வேண்டிய சூழலில் உள்ளது. 


குஷியில் டெல்லி


அந்த வகையில், சென்னை அணி தனது சொந்த மண்ணில் கடந்த போட்டியில் கொல்கத்தாவிடம் மண்ணைக் கவ்வியதால், இன்றைய போட்டியில் சுதாரிப்பாக இருக்க திட்டமிட்டிருக்கும். குறிப்பாக, டெல்லி அணி பஞ்சாப் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பெரும் குஷியில் உள்ளது. 



மேலும் படிக்க |  IPL Playoffs: தோத்தாலும் ஜெயிச்சாலும் சிஎஸ்கே மீசையை முறுக்கலாம்... முழு விவரம் இதோ!


அதே பிளேயிங் லெவன்


இந்நிலையில், டெல்லி - சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டியின் டாஸை தோனி வென்று, முதலில் பேட்டிங் எடுத்துள்ளார். மேலும், சென்னை அணி தனது பிளேயிங் லெவனில் எவ்வித மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. இதுகுறித்து அவர் டாஸில் பேசியபோது,"நாங்கள் பேட்டிங்கை தேர்வு செய்கிறோம். முதல் ஆட்டத்தில் இருந்தே வெற்றி பெற முயற்சித்து வருகிறோம். நாங்கள் அதே பிளேயிங் லெவனுடன் விளையாடுகிறோம். 



முதல் பேட்டிங் ஏன்?


இது ஒரு சமநிலை வாய்ந்த பிளேயிங் லெவனாகும். பல மாற்றங்களைச் செய்ய வேண்டியதில்லை. மாலை ஆட்டம், நேரம் செல்ல செல்ல ஆடுகளமும் மெதுவாக மாறும். அதனால்தான் நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய விரும்பினோம். இதுபோன்ற ஒரு நீண்ட தொடரில், நல்ல மற்றும் மோசமான போட்டிகள் இருக்கும், ஒவ்வொரு போட்டியிலிருந்தும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அதைத்தான் அணியில் உள்ள இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என தெரிவித்தார். 


ராயுடு, மொயின் அலி, தீக்ஷனா ஆகியோரின் மோசமான ஃபார்ம் தொடர்வதால் ஸ்டோக்ஸ், சான்ட்னர் உள்ளிட்டோரை தோனி பிளேயிங் லெவனில் சேர்ப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தோனி அதனை செய்யவில்லை. இதனால், ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். மாறாக, இந்த பிளேயிங் லெவனை சமநிலையானது என்றும் குறிப்பிட்டுள்ளார். முதலில் பேட்டிங் செய்ய உள்ளதால், சென்னை அணி பெரிய ஸ்கோரை இலக்காக நிர்ணயிக்க முடிவு செய்திருக்கும் என்பதில் ஐயமில்லை.  



பிளேயிங் லெவன்


சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா


டெல்லி கேப்பிடல்ஸ்: டேவிட் வார்னர் (கேட்ச்), பிலிப் சால்ட் (வ), ரிலீ ரோசோவ், யாஷ் துல், அமன் ஹக்கிம் கான், அக்சர் படேல், லலித் யாதவ், குல்தீப் யாதவ், சேத்தன் சகாரியா, கலீல் அகமது, அன்ரிச் நார்ட்ஜே


மேலும் படிக்க | DC vs CSK: தோனி விளையாடும் கடைசி போட்டி? என்ன நடக்கிறது சென்னை அணியில்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ