10வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 5-ம் தேதி தொடங்கி மே 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

4-வது நாளான நேற்று இரண்டு ஆட்டங்கள் நடந்தது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று மாலை 4 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மேக்ஸ்வெல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ஸ்டீவன் சுமித் தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெய்ண்ட் அணிகள் மோதின. 


20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு புனே அணி 163 ரன்கள் எடுத்தது. வெற்றி பெற 164 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆடிய பஞ்சாப் அணி 19 ஓவரில் 164 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.


இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி டேர்டேவில்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.


10_வது சீசனில் ஜாகீர்கான் தலைமையில் டெல்லி டேர்டேவில்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தை தொடங்கியது.


டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் வாட்சன் பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க வீரராக களமிறங்கிய கிறிஸ் கெய்ல், வாட்சன் சீரான தொடக்கத்தை கொடுத்த நிலையில் கெய்ல் 6 ரன்கள் எடுத்த நிலையில் மோரிஸ் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த மந்தீப் சிங் 12 ரன்னில் வெளியேற, வாட்சன் 24 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.


கேதார் ஜாதவுடன், ஸ்டூவர்ட் பின்னி சேர்ந்து நன்றாக விளையாடினார்கள். அதிரடியாக விளையாடிய கேதார் ஜாதவ் 37 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் எடுத்த நிலையில் ஜாகீர்கான் பந்தில் ஆடடமிழந்தார். 20 ஓவர்களின் இறுதியில் பெங்களூரு அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது.


158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி பேட்டிங் செய்தது. டெல்லி அணி சார்பில் ரிஷப் பந்த் மட்டும் அரைசதம் கடந்த நிலையில் மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் டெல்லி அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 142 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. 


பெங்களூரு அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பெற்றது.


பெங்களூரு அணி தனது முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ஹைதராபாத்திடம் 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.