ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழா நாளை நடைபெற இருக்கிறது. இந்த முதல் நாளில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடிகர், நடிகைகள் இடம்பெற்று போட்டியை துவக்கி வைப்பர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு கடந்த 10 வருடமாக நடந்து வருகிறது. கிரிக்கெட் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள ஐ.பி.எல் தொடரின் 11_வது சீசன் ஏப்ரல் மாதம் 7-ம் தேதி தொடங்கி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 


IPL-2018: ஐ.பி.எல் போட்டியின் முழு விவர அட்டவணை -உள்ளே!


இந்நிலையில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளான நாளை ஷ்ரத்தா கபூர், பரினீதி சோப்ரா, திஷா பதானி, எமி ஜாக்சன், ரிதேஷ் தேஷ்முக், வருண் தவான், ஜாக்குலின் பெர்னாண்டஸ், ஹிருத்திக் ரோஷண் எனப் பல நடிகர் – நடிகைகள் தொடக்க விழாவில் கலந்து கொள்கின்றனர். மேலும் இவர்களோடு பிரபுதேவா மற்றும் தமன்னாவும் இணைந்து நடனமாட இருப்பதாக அறிவிப்பு வெளியானது.