IPL2022: சோஷியல் மீடியாவில் பாப்புலரான டாப் 3 ஐபிஎல் அணிகள்
ஐபில் 2022 திருவிழா களைகட்ட உள்ள நிலையில், சோஷியல் மீடியாவில் பாப்புலராக இருக்கும் டாப் 3 அணிகள் யார்? என்பதை பார்க்கலாம்.
ஐபிஎல் 2022 கிரிக்கெட் போட்டிகள் மார்ச் 26 ஆம் தேதி மும்பையில் தொடங்க உள்ளது. 10 அணிகள் களம் காணும் இந்த தொடருக்கான சோஷியல் மீடியா புரோமோஷன் பணிகள் ஜெட் வேகத்தை எட்டியுள்ளன. இதனால், 10 அணிகளில் சோஷியல் மீடியாவில் ஆதிக்கம் செலுத்தும் டாப் 3 அணிகள் எவை? என்பதை பார்க்கலாம்.
1. சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐபிஎல் போட்டியில் மிகமிக வலுவான அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சோஷியல் மீடியாவிலும் கோலோச்சுகிறது. இதுவரை 4 டைட்டில்களை வென்றுள்ள அந்த அணிக்கு பேஸ்புக்கில் 13 மில்லியன் பின்தொடர்பாளர்களும், இன்ஸ்டாகிராமில் 9.6 மில்லியன் ஆதரவாளர்களும் இருகின்றனர். டிவிட்டரில் 8.2 மில்லியன் பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பின்தொடர்கின்றனர். ஐபிஎல் களத்திலும் மட்டுமல்லாது, சோஷியல் மீடியாவிலும் ஆதிக்கம் செலுத்துகிறது சென்னை அணி.
மேலும் படிக்க | India Tour of Ireland 2022: ஜீன் மாதத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் அயர்லாந்து டூர்! 2 T20I போட்டிகள்
2. மும்பை இந்தியன்ஸ்
இந்திய பணக்காரர்களில் முதன்மையான இடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானிக்கு சொந்தமானது மும்பை இந்தியன்ஸ் அணி. சென்னை அணி 4 முறை கோப்பைபகளை வென்றிருக்கும் நிலையில், மும்பை அணி 5 முறை கோப்பையை வென்று ஐபிஎல் சாம்பியன்ஸ் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் அடுத்தடுத்து வாகை சூடிய அந்த அணிக்கு சோஷியல் மீடியாவில் ஏகோபித்த வரவேற்பு இருக்கிறது. Facebook தளத்தில் 13 மில்லியன் ஆதரவாளர்களைக் கொண்டிருக்கும் மும்பை அணி, Instagram மற்றும் Twitter தளங்களில் முறையே 9 மில்லியன் மற்றும் 7.3 மில்லியன் ஆதவாளர்களைப் பெற்று சோஷியல் மீடியா ஆதிக்கத்தில் 2வது இடத்தை பெற்றிருக்கிறது.
3. கொல்கத்தா நைட்ரைடர்ஸ்
ஐபிஎல் லீக்கில் 2 முறை கோப்பைகளைக் கைப்பற்றி சாம்பியன்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது கொல்கத்தா நைட்ரைடரஸ் அணி. கவுதம் காம்பீர் கீழ் சிறப்பாக செயல்பட்ட அந்த அணிக்கு தினேஷ் கார்த்திக் மற்றும் இயான் மோர்கன் ஆகியோர் கேப்டன்களாக செயல்பட்டனர். இந்த ஆண்டு ஸ்ரேயாஸ் அய்யர் அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கொல்கத்தா அணிக்கு Facebook-ல், 16M ரசிகர்கள் உள்ளனர். மற்ற அணிகளுடன் இதனை ஒப்பிடும்போது மிக அதிகம். மேலும் Instagram மற்றும் Twitter தளங்களில் அந்த அணிக்கு முறையே 3 மில்லியன் மற்றும் 4.7 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். 4வது இடத்தில் ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணி உள்ளது.
மேலும் படிக்க | 50 சதவிகித பார்வையாளர்களுடன் விராட் கோலியின் 100வது டெஸ்ட் போட்டி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR