அயர்லாந்து பேட்ஸ்மேன் ஜேம்ஸ் ஷானன் அனைத்து தரப்பு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைப்பெறுவதாக அறிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனது அடுத்தக்கட்ட தொழில் நடவடிக்கையில் கவனத்தை செலுத்துவதற்காக தற்போது அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவதாக அறிவித்துள்ளார். இந்ந செய்தியினை நாட்டின் கிரிக்கெட் வாரியமும் உறுதிப்படுத்தியுள்ளது.


தனது ஓய்வை அறிவித்த 29 வயதான வீரர், தேசிய ஜெர்சி அணிவது ஒரு பாக்கியம் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் ஓய்வு பெற்ற பிறகு எந்த வழியில் முடியுமோ அவ்வழியே ஐரிஷ் கிரிக்கெட்டை ஆதரிக்க ஆர்வமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


"நான் இன்று அனைத்து மட்ட கிரிக்கெட்டுகளிலிருந்தும் ஓய்வு பெறுகிறேன், இது எனது அடுத்த தொழில் நடவடிக்கையில் எனது கவனத்தை செலுத்த அனுமதிக்கும்" என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ஷானன் கூற்றை மேற்கோள் காட்டியுள்ளது.


தனது ஓய்வு குறித்து ஷானன் தெரிவிக்கையில் "கிரிக்கெட் அயர்லாந்திற்கும், எனது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பிற்காக நான் பல ஆண்டுகளாக பணியாற்றிய அனைத்து பயிற்சியாளர்களுக்கும், வீரர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நான் என்றென்றும் மதிக்க வேண்டிய ஒன்று. நாட்டின் ஜெர்சி அணிவது என்பது எனது கனவு. எதிர்காலத்திற்கான அனைத்து வெற்றிகளையும் எனது அணிக்காக நான் விரும்புகிறேன், மேலும் அயர்லாந்து கிரிக்கெட்டுக்கு நான் தீவிர ஆதரவாளராக இருப்பேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.


2013-ஆம் ஆண்டில் டப்ளினில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அயர்லாந்துக்காக சர்வதேச அளவில் அறிமுகமான ஷானன், தனது தொழில் வாழ்க்கையில் தேசிய அணிக்காக எட்டு டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இந்த போட்டிகளில் அவர் மொத்தம் 111 ரன்கள் குவித்துள்ளார்.


இந்தியாவுக்கு எதிரான ஒரு போட்டியில் வெறும் 35 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். ஆனால் இதுவே அவரது தேசிய அணியுடனான கடைசி சர்வதேச தொடராகவும் அமைந்தது.



2018-ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிரான அயர்லாந்து டெஸ்ட் அணியில் ஷானன் பெயரிடப்பட்டிருந்தாலும், விளையாட்டின் மிக நீண்ட வடிவத்தில் அறிமுகமாக அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.


முதல் தர கிரிக்கெட்டில், அயர்லாந்து பேட்ஸ்மேன் பெல்ஃபாஸ்டுக்காக மொத்தம் 13 போட்டிகளில் தோன்றி 39.66 சராசரியில் 833 ரன்கள் குவித்துள்ளார். தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 25 List A ஆட்டங்களில் விளையாடிய அவர் 18.38 சராசரியில் 386 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.