அயர்லாந்து கிரிக்கெட்டின் நம்பிக்கை நாயகன் ஓய்வு - சோகத்தில் ரசிகர்கள்
அயர்லாந்து கிரிக்கெட் அணி வீரர் கெவின் ஓ பிரையன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதால் அந்நாட்டு ரசிகர்கள் சோகத்தில் இருக்கின்றனர்
அயர்லாந்து கிரிக்கெட் அணியை சேர்ந்தவர் கெவின் ஓ பிரையன். ஆல் ரவுண்டரான கெவின்153 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3619 ரன்களும், 110 டி20 போட்டிகளில் விளையாடி 1973 ரன்களும் அடித்துள்ளார். இதுதவிர ஒருநாள் போட்டிகளில் 114 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 58 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார். 2011ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரின் லீக் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக அதிரடியாக ஆடிய கெவின், 50 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். அவரது இந்த அதிரடி சதமானது, உலக கோப்பை தொடரில் அடிக்கப்பட்ட அதிவேக சதமாக இன்றளவும் நீடிக்கிறது.
அதுமட்டுமின்றி கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்தை கத்துக்குட்டி அணியான அயர்லாந்து வீழ்த்தியதற்கும் கெவின் காரணமாக இருந்தார். இதனால் அயர்லாந்தில் கெவினுக்கென ரசிகர்கள் அதிகரிக்க ஆரம்பித்தனர். தொடர்ந்து பல போட்டிகளில் விளையாடிய கெவின், கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தின்போது நமிபியாவுக்கு எதிராக கடைசியாக ஆடினார்.
இந்தச் சூழலில் கெவின் ஓ பிரையன் ஃபார்ம் அவுட் ஆனார். இதனால் அவருக்கு அவ்வப்போது வழங்கப்பட்ட வாய்ப்பு ஒருகட்டத்தில் நின்றுபோனது. இந்நிலையில் அவர் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
ஓய்வு குறித்து கெவின் தனது ட்விட்டர் பக்கத்தில், “அயர்லாந்திற்காக விளையாடிய ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்தேன். ஆடுகளத்திற்கு வெளியே பல நண்பர்களை உருவாக்கியிருக்கிறேன். தேசிய அணிக்காக விளையாடிய காலத்தில் பல மகிழ்ச்சியான நினைவுகள் உள்ளன. எனக்கு இதுநாள் வரை ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார். கெவினின் இந்த ஓய்வு அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் படிக்க | ஆன்மிக வழியில் ஷிகர் தவான்... ஜிம்பாப்வே தொடரில் நிகழ்ந்த மாற்றம்
மேலும் படிக்க | பணக்கஷ்டத்தில் தவிக்கும் சச்சினின் தோஸ்த்... வினோத் காம்ப்ளியின் பரிதாப நிலைமை
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ